For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிகரெட்டை நிறுத்து... !

Google Oneindia Tamil News

"என்னங்க இது.."

"என்னாச்சும்மா"

"இவ்வளவும் நீங்க பிடிச்சதா"

"அது .. அது வந்து.. ஒரே நாளிலா பிடிப்பாங்க.. கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்திருக்கும்"

"மனுசனாய்யா நீ... இப்படியா பிடிப்பாங்க.."

மொட்டை மாடிக்கு திடீர் விசிட் செய்யும் மனைவியர், கணவர் இழுத்து விட்டுப் போட்டு வைத்த சிகரெட் குப்பைகளைப் பார்த்து அதிர்வது என்பது கிட்டத்தட்ட பல வீடுகளில் நாம் காணும் காட்சிதான். அதிலும் பல வீடுகளில் மூட்டை கட்டி எடுத்து கொண்டு போகும் அளவுக்கெல்லாம் சிலர் ஊதித் தள்ளியிருப்பார்கள்.

Recommended Video

    உயிருக்கு பகையாகும் புகை... இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்!

    நான் என்ன பண்ணுவேன்.. என் வீட்டில் இரண்டு மொட்டை மாடி உண்டு. அதில் முதல் மொட்டை மாடியை விட்ருவேன்.. அங்க போய் தம் அடிச்சா பக்கத்து வீட்டில் உள்ள அத்தனை பேரும் பார்க்கக் கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஸோ.. இரும்பு ஏணி மேலே ஏறிப் போனால் இன்னொரு குட்டி மொட்டை மாடி இருக்கும்.. அங்க போய்ட்டா நம்மளை யாரும் பார்க்க முடியாது.. நாமதான் உலகத்தையே பார்க்கலாம் கீழ் நோக்கி.. அவ்வளவு ஹைட்.. ரொம்ப "சவுகரியமானது"ம் கூட.. ஏகாந்தமும் இணைய.. நல்ல மூலையாக பார்த்து உட்கார்ந்து கொண்டு, எடுத்து வைத்து புகைக்கும்போது, அந்த புகை மண்டலத்தில் சஞ்சரிப்பது சொர்க்கமாக தெரிந்தது!

    Drop the Cigarette and lead dignified life

    சரி சிகரெட் மீது ஏன் நமக்கு இவ்வளவு மோகம் வருகிறது.. டென்ஷனைக் குறைக்கிறது, ஸ்டிரஸ் குறைகிறது,, கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கு.. இதுதான் பலரும் சொல்லும் காரணம். ஆனால் இழுக்க இழுக்க இன்பம் என்று சொல்வது விளம்பரத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்.. ஆனால் தொடர்ந்து இழுத்துக் கொண்டிருந்தால் கடைசியில் ஆஸ்பத்திரி படுக்கையில் தான் நமது உயிர் இழுபறியாகும் நிலை ஏற்படும்.

    பெரும்பாலானோருக்கும் ஒரு ஹாபியாகத்தான் இந்த சிகரெட் பழக்கம் தொற்றிக் கொண்டிருக்கும். வெகு சிலருக்கு டென்ஷனைக் குறைக்கும் ஆயுதமாக கை விரல்களுக்குள் வந்து அடைக்கலம் புகுந்திருக்கும். தொட்டுட்டோம்.. விட முடியலை.. இதுதான் பலரும் சொல்லும் ஒரே பதில்.

    சிகரெட் பழக்கம் நல்லதா கெட்டதா என்ற விவாதம் எல்லாம் அறுதப் பழசு.. உயிருக்கு ஆபத்தைக் கொடுக்கும் பழக்கம் இது என்பதால் இதில் நல்லது என்ற வாதத்துக்கே இடமில்லை. கண்டிப்பாக கெட்டதுதான். சரி தொட்டதை எப்படி விட முடியும்.. கண்ணை மூடிக் கொண்டு கீழே போட்டு விடுங்க.. அதுதான் ஒரே வழி.

    ஒரு கையில் சிகரெட்.. மறுகையில் சானிடைசர்.. டிரைவரின் அஜாக்கிரதையால் பற்றி எரிந்த கார்.. உஷார் மக்களேஒரு கையில் சிகரெட்.. மறுகையில் சானிடைசர்.. டிரைவரின் அஜாக்கிரதையால் பற்றி எரிந்த கார்.. உஷார் மக்களே

    One fine morning.. நானும் இப்படித்தான் கீழே போட்டேன்.. அந்த நொடியில் மனசுக்குள் வேறு எந்த எண்ணமும், ,திட்டமும் இல்லை இல்லை.. போடணும்னு மனசு சொல்லுச்சு.. போட்டாச்சு.. ஆனால் அன்று முழுவதும் வாய் ஒரு மாதிரிதான் இருந்தது. ஆனால் மனசு தேடவில்லை.. தேடலை கட்டுப்படுத்தும் மனப்பக்குவம் இருந்ததால் அது சாத்தியமாயிற்று. நிறையப் பேர் சொன்னார்கள் இ சிகரெட் இருக்கு.. சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்காகவே ஒரு சிகரெட் இருக்கு.. திடீர்னு நிறுத்தக் கூடாது.. படிப்படியாகத்தான் நிறுத்தணும் என்று.. ஆனால் நான் ஒரே நாளில் விட்டேன்.. ஏனோ அவற்றை தேடத் தோணவில்லை.. கையில் இருந்ததை போட்டாச்சு.. அப்படியே ஒரு நாள், 2 நாள் என்று கடந்து.. இதோ சில வருடங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த Non Smoker வாழ்க்கை.

    Drop the Cigarette and lead dignified life

    ஒரு நாளைக்கு 1, 2 அடிப்பவர்கள் சிலர் இருப்பார்கள். பலருக்கு பாக்கெட் பாக்கெட்டாக ஊதித் தள்ள வேண்டும். யாராக இருந்தாலும் சரி ஸ்மோக்கர் என்று ஆகி விட்டால் நீங்கள் இழப்பது நிறையவே இருக்கு. நேர விரயம், தேவையில்லாத உடல் நலிவு, பதட்டம், பலவீனம்.. எல்லாம் தேடி ஓடி வரும்.. ஒரு சிகரெட்டை இழுப்பதன் மூலம் கிடைக்கும் அந்த சில நிமிட அற்ப சந்தோஷம்.. பல உண்மையான, நிஜமான சந்தோஷங்களைக் காவு வாங்கி விடுகிறது என்பதுதான் உண்மை.

    சிகரெட் கண்டிப்பாக மிகப் பெரிய கெட்ட பழக்கம்.. சந்தேகமே தேவையில்லை. உங்களை மட்டுமல்ல.. உங்களைச் சுற்றியுள்ள பலரையும் அது கஷ்டப்படுத்துகிறது.. நானெல்லாம் அம்மா சொல்லிக் கேட்கலை, பொண்டாட்டி சொல்லியும் கேட்கலை.. ஆனால் என் பிள்ளை ஒரு நாள் கேட்ட கேள்விக்கு வழக்கம் போல நழுவ முடியவில்லை. தூக்கிப் போடு அதை என்று மனசுக்குள் ஒரு பெல் அடிக்க.. அடுத்த நிமிடமே அரங்கேறியது அந்த "துறவறம்".

    அவ்வளவுதாங்க.. சிகரெட் இல்லாத வாழ்க்கையும் கூட இனிமையானது, அழகானது, அற்புதமானது, ரொம்ப ரொம்ப ஜாலியானது. சிகரெட்டை நிறுத்த ரொம்பவெல்லாம் கஷ்டப்படத் தேவையில்லை, மெனக்கெடத் தேவையில்லை. மனசை மட்டும் ஸ்டிராங்கா வச்சுக்கங்க.. திரும்பிக் கூட பார்க்காதீங்க.. 3வது நாளிலேயே அதை மறந்துடுவீங்க.. பிறகு பாருங்க.. உங்களது வாய் மணக்கும்.. வாழ்க்கை இனிக்கும்!

    ஸோ, சிகரெட்டை நிறுத்துங்க.. ஒரு வேளை நிறுத்த முடியாட்டி என்னாகும்?.. சீக்கிரமே செத்துப் போய்ருவோம் பாஸ்.. அழகான வாழ்க்கையை முழுசா வாழ வேண்டாமா.. கொரோனாவுக்கு வேற ஸ்மோக்கர்ஸை ரொம்பப் பிடிக்கும் என்கிறார்கள்.. எதுக்கு வீண் வம்பு.. தூக்கிப் போட்டுட்டு ஜாலியா மத்த வேலையைப் பார்க்கலாமே.. செஞ்சு பாருங்க.. உங்களுக்கே உங்களைப் பிடிக்கும்.

    (இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்)

    English summary
    Today is World No Tobacco Day and drop the Cigarette if you hold in your fingers and have a happy and healthy life.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X