For Daily Alerts
செங்கோட்டை-புனலூர் 106 ஆண்டு மலை ரயில் 20ம் தேதியுடன் நிறுத்தம்

1904-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பயணிகள் ரயில் கொல்லத்தில் இருந்து இயக்கப்பட்டது. இத்தடத்தில் தற்போது கொல்லம்-புனலுர் இடையே அகல ரயில் இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தப் பாதை முழுமையாக அகலப் பாதையாக மாற்றப்படவுள்ளதால் ரயிலை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.
59 கிலோ மீட்டர் கொண்ட செங்கோட்டை-புனலூர் இடையே 100 சிறுபாலங்கள், 3 பெரிய பாலங்கள், 5 குகைகள் போன்றவைகள் உள்ளன.
வழக்கமாக ஒரு ரயில் சேவையை நிறுத்தினால் நஷ்டம்தான் ஏற்படும். ஆனால், தினமும் பல ஆயிரம் ரூபாய் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த இந்த ரயில் சேவையை நிறுத்துவதால் ரயில்வேக்கு நஷ்டமல்ல மாறாக லாபம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.