For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் ஈமான் அமைப்பு நடத்திய மீலாத் பேச்சுப் போட்டி: காயல் ஷாஹுல் ஹமீத் முதல் பரிசு

By Siva
Google Oneindia Tamil News

IMAN Oratorical Competition
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மீலாத் பெருவிழாவினையொட்டி கடந்த 27ம் தேதி மாலை ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் காயல் ஷாஹுல் ஹமீத் முதல் பரிசைப் பெற்றார்.

துபாய் ஈமான் அமைப்பு மீலாத் பெருவிழாவினையொட்டி ஆண்டுதோறும் பேச்சுப் போட்டி நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி கடந்த 27ம் தேதி மாலை ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சியின் துவக்கமாக அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தின் இறை வசனங்களை ஓதினார். பேச்சுப் போட்டிக்கு பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி தலைமை வகித்தார். துணை தலைவர் அஹமது முஹைதீன் முன்னிலை வகித்தார். துணை பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஹ்ரூப், அய்மான் சங்க தலைவர் அதிரை ஷாகுல் ஹமீது, காயல் மௌலவி முத்து அஹமது ஆலிம் ஆகியோர் பேச்சுப் போட்டியின் நடுவர்களாக இருந்தனர். காயல் ஷாஹுல் ஹமீத் முதல் பரிசை வென்றார். அரேபியா டாக்ஸி வழங்கிய திர்ஹம் 1000 க்கான இரண்டாம் பரிசினை எம். இ. முஹ்யித்தீன் அப்துல் காதர், மூன்றாம் பரிசாக லேண்ட்மார்க் ஹோட்டல் வழங்கிய 4 கிராம் தங்க நாணயத்தை இஸ்ரத் பரிதாவும் பெற்றனர்.

அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ், அல் மஸ்ரிக் இன்டர்னேஷனல், அபுதாபி செட்டிநாடு உணவகம், இந்தியா சில்க் ஹவுஸ், நிக்காஹ்.காம், அப்கிரேடு டயர்ஸ், பிரிமியர் ஆர்பிட் எக்ஸ்பிரஸ், எஸ்.டி.கூரியர் உள்ளிட்டோர் வழங்கிய ஆறுதல் பரிசுகளை எம். ரஸீம், கதீஜா ஸபானா, அஹ்மது ஜலாலுத்தீன், விருதுநகர் எம்.எம். செய்யது ஹுசைன், திருச்சி பர்வீன் பாத்திமா, ஃபஹீமா அலி, அப்துல் மிலாஹிர், கம்பம் மெரிட்கான் முஸ்தபா, நத்தம் முஸ்தபா, எம். முஹம்மது அன்சாரி, ரஷீத் அன்வர், முஹம்மது இக்பால், முஹம்மது அலி ஜின்னா, முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் பெற்றனர்.

நடுவர்களுக்கு நினைவுப் பரிசினை அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் பூதமங்கலம் முஹைதீன், செயற்குழு உறுப்பினர் அக்பர் பாஷா உள்ளிட்டோர் வழங்கினர்.

நடுவர்கள் வழங்கும் மதிப்பெண்களை கூட்டி இறுதி முடிவுகள் அறிவிக்க உறுதுணையாக விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின், நலத்துறை குழு ஃபைசுர், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் முஹைதீன் ஆகியோர் செயல்பட்டனர். பேச்சுப்போட்டிக்கான ஒருங்கிணைப்பினை விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹியித்தீன் செய்திருந்தார்.

மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்விற்குப் பின்னர் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

English summary
Dubai IMAN conducted an oratorical competition on january 27 ahead of Milad-un-Nabi. Kayal Shahul Hameed won the first prize while Muhyideen Abdul Kader secured the second place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X