பூக்களுக்கு வழியில்லை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில பூக்கள் கடவுள்களுக்கு
சில பூக்கள் கூந்தல்களுக்கு
சில பூக்கள் கல்லறைகளுக்கு
சில பூக்கள் பிணங்களுக்கு
சில பூக்கள் தேனீக்களுக்கு
சில பூக்கள் காய்ந்து உதிர்வதற்கு..

Flower and women

சில பூக்கள் மற்றுயிர்கள் மேய்வதற்கு..
சில பூக்கள் கசக்கி பிய்த்தெறியப்படுவதற்கு...
சில பூக்கள் விஷக் கனிகளை ஈன்றெடுப்பதற்கு
சில பூக்கள் முட்களை தருவதற்கு
சில பூக்கள் மருந்துக்கு
சில பூக்கள் விருந்துக்கு
சில பூக்கள் நாசிக்கு நல்வாசம் தருவதற்கு
சில பூக்கள் மட்டுமே சூல் கொண்டு காயாகி
சுவைப்பதற்கினிய கனியாகி
நல் இனம் தழைப்பதற்கு!
பூக்களுக்கு வழியில்லை
சென்றடைய வேண்டிய
இடந்தனை நிர்ணயிப்பதற்கு....
மலரொத்த மடந்தைகளுக்கும் இந்நிலையே அல்லவோ?

- ஆகர்ஷிணி

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here is a poem from our reader comparing women with flowers.
Please Wait while comments are loading...