ஆம்.. செங்கோட்டையன் அப்செட்டில் தான் இருக்கிறார்.. உண்மையை உடைத்த தவெக நிர்வாகி
ஈரோடு: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி, தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த செங்கோட்டையன், உரிய முக்கியத்துவம் தரப்படாததால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தவெக செயலாளர், "செங்கோட்டையனுக்கு இணையாக ஓட முடியவில்லை. அவரால் நான் வேட்டி கட்டுவதையே நிறுத்திவிட்டேன்" என்றவர், அவர் அப்செட்டில் இருப்பதும் உண்மை என அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

20 வயது பையன் செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில், அந்தக் கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளர் விஜய் பாலாஜி பேசும்போது, "அண்ணன் செங்கோட்டையன் எப்போது தவெகவில் இணைந்தாரோ, அப்போதிருந்து 20 வயது பையனாகிவிட்டார். ஏப்பா.. அவர் கூட போட்டி போட்டு் ஓட முடிய மாட்டிங்குதுப்பா. எந்த தெரு, திட்டம் என்றாலும் ஓடிப்போகிறார். நாமும் அவருடன் ஓட வேண்டியுள்ளது. அண்ணனுக்கு பயந்தே நான் வேட்டி கட்டுவதை நிறுத்திவிட்டேன். எங்கடா அவிழ்ந்துவிடுமோ என்று பயந்து.. பேன்ட் போட்டுத்தான் சுற்றி கொண்டிருக்கிறேன்" என்றார்.
அமைதியா இருங்க
அந்த நிகழ்ச்சியில் செங்கோட்டையனும் கலந்து கொண்டார். பாலாஜி பேசும்போது செங்கோட்டையன் சந்தோஷத்தில் கைத்தட்டி சிரித்தார். அங்கிருந்த தவெக தொண்டர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்து கொண்டே இருந்தனர். மீண்டும் தொடர்ந்த விஜய் பாலாஜி, ரொம்ப சந்தோஷமா இருக்கு. தம்பிகளா ஒரு நிமிஷம் அமைதியா இருங்க. நான் என்ன சொல்கிறேன் என கேளுங்க.
வருத்தத்தில் செங்கோட்டையன்
பத்திரிகை நண்பர்கள் இருப்பீர்கள் என நம்புகிறேன். எந்த செய்தியாளர் சந்திப்பு நடந்தாலும், 'செங்கோட்டையன் வருத்தத்தில் இருக்கிறாராமே' என மீண்டும் மீண்டும் கேட்கின்றீர்கள். அவர் முகத்தை பாருங்க. ஆமா தவெகவில் ஏன் 2 வருடங்களுக்கு முன்பு இணையவில்லை என்கிற வருத்தத்தில் இருக்கிறார். ஒரு விஷயம் தெரிஞ்சுக்கோங்க.. இங்கிருக்கும் நிர்வாகிகள் யாரும் உயர் பதவிக்காக வரவில்லை.
மக்கள் சேவை
தளபதியின் பின்னால் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்கிற ஒரே நோக்கம் தான் உள்ளது. அதற்காக தான் ரசிகர் மன்றத்தில் இருந்து, மக்கள் இயக்கம், தவெக என பயணித்து கொண்டிருக்கிறோம். பதவி ஆசை இருந்தால் தானே எங்களுக்குள் போட்டி இருக்கும். 100% எங்களுக்கு அது கிடையாது. திரும்ப.. திரும்ப அதைக் கேட்க வேண்டாம். ஏற்கனவே இருந்த இயக்கத்தைவிட, அவர் இங்கு மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்.
ஈரோட்டின் முகம் செங்கோட்டையன்
தளபதி, எங்கள் பொதுச்செயலாளர் ஆகியோருக்கு பிறகு இந்த ஈரோடு மாவட்டத்தின் ஒருங்கிணைந்த முகம் அண்ணன் செங்கோட்டையன் தான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதேபோல எங்களுக்கு எல்லாம் அக்காவுக்கு அக்காவாக.. அத்தைக்கு அத்தையாக.. அம்மாவுக்கு அம்மாவாக சத்யபாமா எங்களை எல்லாம் வழி நடத்துகிறார். அவர் நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற உயர் பதவிகளில் இருந்துள்ளார். அப்படி இருந்தும் கூட எங்களை கணிவாக வழிநடத்துகிறார்.
வைரல் பேச்சு
நிகழ்ச்சிகளில் அவரை முன்னால் நிற்க சொன்னால் கூட, 'வேண்டாம். நீங்கள் தான் நிற்க வேண்டும்' என்று எங்களை முன்னிலைப்படுத்துகிறார்" என்றார். அவரின் இந்த பேச்சின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
150 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் விஜய்! அடித்து சொன்ன சீமான்! இதை கவனிச்சீங்களா! -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா?












Click it and Unblock the Notifications