மார்கழி திருவாதிரையில் சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடப்பது ஏன் தெரியுமா?
மார்கழி மாதம் சிவ ஆலயங்களில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. ஆனி மாதத்தில் திருமஞ்சனம் போல மார்கழி மாதத்தில் அபிஷேகம் நடைபெறுவது சிறப்பாகும்.
கடலூர்: ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. கடைசி பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம் என போற்றப்படுகிறது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகும். இந்த மாத திருவாதிரை நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு அதிகாலையில் குளிர குளிர அபிஷேகம் செய்கின்றனர்.
நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு முறை திருமஞ்சனம் நிகழ்த்தப்படுகிறது. நடராஜருக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இது உஷ்ணம் மிகுந்த நட்சத்திரமாகும். அதோடு வெம்மை மிகுந்த சுடலையின் சூடான சாம்பலை திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியையும் ஏந்தியிருப்பதால் நடராஜர் கடுமையான வெப்பத்தால் சூழப்பட்டிருக்கிறார். இந்த வெப்பத்தை தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
சித்திரை மாத திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாத திருவாதிரை ஆகிய நாட்களில் நடைபெறும் திருமஞ்சனங்கள் நடசத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுவன. மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசியில் திருமஞ்சனம் நடக்கும்.

மார்கழி திருவாதிரை அபிஷேகம்
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாகவும் பஞ்சசபைகளில் பொற்சபையாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. கோவிலின் சித்ர சபை எதிரே உள்ள கொடி மரத்தில் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்நிறுத்தி ஆவாஹனம் செய்து காலை 8.20 மணி அளவில் கொடியேற்றப்பட்டது.

கொடியேற்றம் கோலாகலம்
ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்க படமாட்டார்கள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கபட்டிருந்தது. 4 கோபுர வாசல்களிலும் தடுப்புகள் அமைத்து கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பாஜக முக்கிய நிர்வாகிகள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கபட்டனர்.
ஆருத்ரா தரிசன விழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வாகனங்களில் எழுந்தருளும் இறைவன்
ஆருத்ரா தரிசன விழா கொடியேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நாளைய தினம் வெள்ளி சந்திர பிரபை வாகன வீதிஉலா நடைபெறும்.13ஆம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதிஉலா, 14ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதிஉலா, 15ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 16ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், 17ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா 18ஆம் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

தேர்த்திருவிழா
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 19ஆம் தேதி கோவில் உள்பிரகாரத்தில் நடக்கிறது. இதற்கும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

மகா அபிஷேகம்
20ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்ரசபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞான காச சித்ரசபா பிரவேசமும் நடைபெறுகிறது. 21ஆம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

நடராஜருக்கு விழா
சிவபெருமானின் பஞ்சபைகளிலும் பஞ்ச பூதத்தலங்களிலும் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. திருக்குற்றாலநாதர் சித்திர சபை, ஆவுடையார் கோவில், உத்தரகோசமங்கை மரகத நடராஜர் ஆலயத்திலும் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications