2022 ஆம் ஆண்டில் எத்தனை சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழும் தெரியுமா?
அடுத்த ஆண்டு 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் நிகழப்போகிறது. இது மேஷ ராசியிலும் துலாம் ராசியிலும் நிகழப்போகிறது.
சென்னை: இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4ஆம் தேதி 2021 நிகழும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அமாவாசை அன்று அதாவது மார்கழி மாதத்தில் விருச்சிக ராசியில் நிகழும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பூமியின் குறிப்பிட்ட சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும். 2022ஆம் ஆண்டு 2 சூரிய கிரகணங்களும் 2 சந்திர கிரகணங்களும் நிகழப்போகிறது. மேஷ ராசியிலும், துலாம் ராசியிலும் நிகழப்போகிறது.
ஜோதிடர்களின் கூற்றுப்படி, 18 ஆண்டுகளில் மொத்தம் 41 சூரிய கிரகணங்கள் நிகழ்கின்றன, ஆனால் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ஐந்து கிரகணங்கள் நிகழலாம். சராசரியாக, சூரிய கிரகணம் ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் பூமியில் எங்காவது நிகழ்கிறது. ஆனால் அவை சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும்.

டிசம்பர் 4ஆம் தேதி 2021 சனிக்கிழமை அன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் காலை 10.59 மணிக்கு தொடங்கி மாலை 3.07 மணி வரை நீடிக்கும். 4 மணி நேரம் 8 நிமிடங்கள் வரை நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
பொதுவாக சூரிய கிரகணம் பகலிலும் சந்திர கிரகணம் இரவிலும் நிகழும். நம்முடைய நாட்டின் நேரப்படி இந்த கடைசி சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் நம்மால் பார்க்க முடியாது. இந்த நிகழ்வு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மற்றும் அண்டார்டிகா உள்ளிட்ட பகுதிகளில் தெரியும் என்றும் இதனால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை இணையத்தில் நேரடியாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனின் ஒளி வீச்சு பூமி மீது பதியாமல் தடைபடுகிற பொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது. சூரிய கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது. கிரகணம் நிகழும் நேரத்தில் சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

2022 இல் சூரிய கிரகணம்
2022ஆம் ஆண்டு ராகு மேஷ ராசிக்கும் கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30, சனிக்கிழமையன்று மேஷ ராசியில் நிகழும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. நேரம் மதியம் 12:15 முதல் மாலை 04:07 வரை இருக்கும். இது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும், இதன் விளைவு தென்/மேற்கு அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் காணப்படும்.
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் துலாம் ராசியில் அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நிகழும். இதுவும் ஒரு பகுதி கிரகணமாக இருக்கும். இது அக்டோபர் 25, செவ்வாய்க்கிழமை 4மணி 29 நிமிடத்திற்கு மணிக்கு தொடங்கி 05 மணி 42 நிமிடம் வரை நீடிக்கிறது. ஐரோப்பா, தெற்கு/மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அட்லாண்டிகாவில் காணப்படும். இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.

2022 இல் சந்திர கிரகணம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிஷப ராசியில் ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மேஷ ராசியில் மே 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நள்ளிரவு 12.20 மணிக்கு தொடங்கும் கிரகணம் காலையில் இந்த இரண்டு கிரகணங்களும் முழு சந்திர கிரகணங்களாக இருக்கும். இந்தியாவில் இந்த கிரகணத்தை பார்க்கலாம். இதன் தாக்கம் தெற்கு/மேற்கு ஐரோப்பா, தெற்கு/மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தெற்கிலும் தெரியும் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், அண்டார்டிகா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் பார்க்கலாம்.
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது கடைசி சந்திர கிரகணம் துலாம் ராசியில் நவம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 1:32 முதல் இரவு 7.27 வரை நீடிக்கும். இது முழு சந்திர கிரகணமாக இருக்கும். இதன் தாக்கம் இந்தியா உட்பட தெற்கு/கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications