Thulam Rasi Palan: துலாம் ராசிக்கு வாயில் தான் கண்டமே.. பாசிட்டிவாக இருப்பது நல்லது
பிப்ரவரி மாத ராசி பலன்: 2026 ஆம் ஆண்டில் முதல் மாதமான ஜனவரி மாதம் நிறைவடைந்து பிப்ரவரி மாதம் பிறந்துள்ளது. இந்த பிப்ரவரி மாதத்தில் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமான 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். இந்த பிப்ரவரி மாதத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கப் போகிறார். சந்திரன் தன்னுடைய கடக ராசியில் ஆட்சி வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆரம்பித்து சொந்த வீட்டிலேயே இந்த மாதத்தை நிறைவு செய்வார்.

கேது பகவான் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கிறார். சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகியோர் மகர ராசியில் அமர்ந்திருக்கின்றனர். மகரத்தில் செவ்வாய் உச்சமடைந்துள்ளது. கும்ப ராசியில் புதன் பகவானும், செவ்வாயும் அமர்ந்திருக்கின்றனர். மீனத்தில் சனி பகவான் அமர்ந்திருக்கிறார். அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தில் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான நாட்களில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்கள் ரத்த பந்த உறவுகள், தாய் வழி உறவுகள் தொடர்பான விஷயத்தில் எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. எது நடந்தாலும் பாசிட்டிவான அமைக்குள் செல்பவர்களுக்கு நன்மை ஏற்படும். வார்த்தைகளில் அதிக கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களின் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, மற்றவர்களின் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அனுகூலம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் உண்டு. பழைய வாகனங்களை விற்று விட்டு புதிய வாகனங்களை வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடலைக் கேட்பது, படிப்பது ஏற்றத்தைத் தரும்.
வாக்குவாதம் வேண்டாம்
சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தேவையில்லாதவற்றை யோசித்து குடும்பத்தினருடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டு சிக்கிக் கொள்வீர்கள். அதனால், செவ்வாய் உச்சமாக இருப்பதால் வார்த்தையில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. இலலையெனில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் பல், மூக்கு, தொண்டை, காது தொடர்பான சிறு பிரச்சனைகளிலும் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. மற்றபடி தடைபட்டு வந்த காரியங்களில் இருந்து விடை பெறும் யோகம் உண்டாகும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களைச் சுற்றி நேர்மறையான மனிதர்களை வைத்துக் கொள்வது நல்லது. நெகட்டிவ் அமைப்புகளை புறந்தள்ளுவது நல்லது.
வழிபாடு
தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், அனுகூலமும் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். துர்க்கை வழிபாடு செய்வது, துர்க்கை மந்திரம், துர்க்கை கவசம் கேட்பது ஏற்றத்தை ஏற்படுத்தும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications