ஜெகத்தை ஆளச்செய்யும் மாசி மகம்...ஏழு ஜென்ம பாவங்களை நீக்கும் புனித நீராடல்
மாசி மகம் நாளில் நாம் அன்னையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நாம் எடுத்த காரியங்களில் வெற்றியும், வாழ்வில் இன்பமும் பெற்று வாழலாம்.
மதுரை: மாசி மகம் நாளில் திருநல்லூர் கோயிலில் உள்ள சப்தசாகர தீர்த்தத்தில் நீராடினால், உன்னுடைய பாவம் விலகும், என்று அசரீரி கேட்க, பாண்டவர்களின் தாய் குந்திதேவி, அவ்வாறே அங்கு சென்று நீராடியதால் கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்கியது என்பது ஐதீகம். இத்தீர்த்தம் அமையப்பெற்ற கோயில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஆகும்.
மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்கிறார். அதே போலத்தான், தமிழ் மாதங்களிலேயே மிகவும் சிறந்த மாதம் மாசி மாதம். இம்மாதம் நீராடலுக்கு உகந்த மாதமாகப் பாரக்கப்படுகிறது.
காரணம், இம்மாதத்தில் மகம் நட்சத்திரமும் பௌர்ணமியும் இணைந்து வருவது தான். இதை மாசி மகம் என்றும், இதனால் தான் இம்மாதம் இந்துக்களின் வாழ்வில் முக்கிய நாளாகப் கொண்டாடப்படுகிறது.

மாசி மகம்
மாசி மகம் என்ற உடன் முதலில் நம் நினைவுக்கு வருவது, கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடும் வைபவமும், வட மாநிலங்களில் பெருவாரியாகக் கொண்டாடப்படும் கும்பமேளா நிகழ்ச்சியும் தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாசி மகம் நாளன்று, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கும்பகோணத்திற்கு வந்து மகாமகம் குளத்தில் இறங்கி நீராடுவதும், பலர் தலையில் நீரைத் தெளித்துக்கொள்வதும் உண்டு.

புனித நீராடல்
மாசி மகம் நாளில் நீராடினால் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அதே போல், வட மாநில மக்கள் திரிவேணிசங்கமத்தில் இறங்கி நீராடி மகிழ்வதும் உண்டு. அதுவும் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளா என்றால் நாடு முழுவதும் இருந்தும் வந்து, திரிவேணிசங்கமத்தில் நீராடுவதுண்டு. குறிப்பாக நாசிக், ஹரித்துவார் பிரக்யாராஜ், உஜ்ஜயினி உள்ளிட்ட இடங்களில் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தீர்த்தவாரி வைபவம்
மாசி மகம் நாளில் தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், பெரும்பாலான இந்துக்கள் விரதமிருந்து, நதிகள், கடல், நீர்நிலைகளில் நீராடி கோயில்களுக்கு சென்று வழிபடுவதுண்டு. அதே போல் புகழ்பெற்ற கோயில்களில் இருந்து மூலவர்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வந்து தீர்த்தமாடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதுண்டு.

மகாபாரதம்
மாசி மகம் நீராடல் என்பது பண்டைய காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மகாபாரதத்தில், பாண்டவர்களின் தாய் குந்திதேவி, தான் திருமணம் ஆவதற்கு முன்பே, சூரிய பகவான் மூலம் பெற்ற கர்ணனை ஆற்றில் கொண்டு போய் விட்ட சோக நிகழ்வு மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு சமயம், ஒரு முனிவரை தரிசித்து வணங்கி, தான் கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்குவதற்கு என்ன பரிகாரம் என்று கேட்டார்.

புனித நீராடல் நன்மைகள்
அதற்கு முனிவர், மாசி மகம் நாளில் ஏழு கடலில் நீராடினால் அந்தப் பாவம் நீங்கும் என்றார். ஒரே நாளில் தான் எப்படி ஏழு கடலில் நீராட முடியும்? என்று இறைவனை மனமுருகி வேண்டிக்கொள்ள, உடனே, திருநல்லூர் கோயிலில் ஒரு தீர்த்தம் உள்ளது, அந்த தீர்த்தத்திற்கு சப்தசாகர தீர்த்தம் என்று பெயர். அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களையும் வரவழைக்கிறேன், அந்த தீர்த்தங்களையும் ஏழு கடல்களாக நினைத்துக்கொண்டு, மாசி மகம் நாளில் நீராடி எழுந்தால், உன்னுடைய பாவம் போகும், என்று அசரீரி கேட்டது. குந்தி தேவியும் அப்படியே செய்து பாவ விமோசனம் பெற்றார் என்பது ஐதீகம். இத்தீர்த்தம் அமையப்பெற்ற கோயில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டம், திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் ஆகும்.

முன்னோர் பூஜை
மகம் நட்சத்திரத்தை நம் முன்னோர்கள் பித்ருதேவ நட்சத்திரம் என்று குறிப்பிட்டுள்ளனர். காரணம், இந்துக்கள் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முதலில் பித்ருக்களை வணங்கி அவர்களின் அசீர்வாதம் கிடைத்த பின்பு தான் சுபகாரியங்களைத் தொடங்குவார்கள். ஆகவே, இம்மாதத்தில் பித்ருக்களுக்கு பூஜை செய்தால் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். அதோடு, நம்முடைய முன்ஜென்ம கர்ம வினைகளைப் போக்கிக் கொள்ள மாசி மகம் நாளில் புனித நீராடினால், அனைத்து தோஷங்களும் நீங்கும்.

குங்கும அர்ச்சனை
மாசி மகம் நாளன்று தான், அன்னை பார்வதி காளிந்தி நதியில் தாமரை மலரில் சங்கு வடிவில் அவதரித்தார். சிறந்த சிவபக்தனான தட்சன் சங்கைத் தொட்ட உடன் அது பெண் குழந்தையாக மாறி தாட்சாயிணி என்ற பெயரில் தட்சனின் மகளாக வளர்ந்தாள். எனவே, இந்நாளில் நாம் அன்னையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் நாம் எடுத்த காரியங்களில் வெற்றியும், வாழ்வில் இன்பமும் பெற்று வாழலாம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications