Dhanusu: தனுசு ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நிலம், வீடு வாங்கும் யோகம்
Masi Matha Palangal: 2026 ஆம் ஆண்டில் தை மாதம் நிறைவடைந்து வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. மாசி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டில் கும்ப மாதம் பிறக்கவுள்ளது. கும்ப மாதம் என்பது மாசி மாதம் ஆகும். கும்பத்தில் சூரியன் வரக்கூடிய மாதமே மாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 13 முதல் மார்ச் 14 ஆம் தேதி வரையிலான இந்த மாதத்தில் நிறைய விசேஷங்கள் நடைபெறவுள்ளன. பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி நடைபெறுகிறது. 4 கால பூஜைக்கு தரிசனம் செய்வது, பசு நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, அன்னதானத்திற்கு உதவி செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.

சனிப்பெயர்ச்சி
வாக்கியப்படி மார்ச் 6 ஆம் தேதி காலை 8.26 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி மயானக் கொள்ளை நடைபெறும். மார்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணி முதல் 6.47 வரை கிரகணம் நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் விரதம், வழிபாடு செய்வது நன்மையைத் தரும். இதைத்தொடர்ந்து, மாசி மகம் நடைபெறவுள்ளது.
கும்பத்தில் சூரியன் இருந்து தன் சொந்த வீட்டைப் பார்ப்பார். இந்த மாதத்தில் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த மாசி மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்துப் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். விடுபட்ட தெய்வ வழிபாடுகளை செய்து மகிழ்வீர்கள். உறவினர்களைப் பார்ப்பது, நண்பர்களைப் பார்ப்பது, குலெதய்வ வழிபாடு செய்வது போன்ற அனுகூலங்கள் ஏற்படும். நிறைய பண வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு ஏற்றம் பெறும். தொழில் ரீதியாக இருந்த மன தாங்கல்கள் தீரும்.
அனுகூலங்கள்
வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். அடுத்தடுத்து அற்புதமான நன்மைகள் ஏற்படும். பசு மாடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும், கோதுமை, வெல்லம் தானமாகக் கொடுப்பது நன்மையைத் தரும். நல்ல அனுகூலங்கள் காணப்படும். பெரியவர்களுடன் மனத் தாங்கல்கள், கஷ்டங்கள் போன்றவற்றை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சுபவிரயம்
பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்திற்குச் செலவு செய்வீர்கள். நிறைய விரயங்கள் ஏற்படும். அதனை சுப விரயங்களாக மாற்றிக் கொள்வது நல்லது. நிறைய நன்மைகள் நடக்கும் காலகட்டம். குடும்பத்தை விட்டு தொலைதூரம் பயணம் மேற்கொள்வீர்கள். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்கள், தெய்வ மார்க்க பயணங்கள், தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, மேலதிகாரிகளை சந்திப்பதற்காக என தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
தடைகள் நீங்கும்
தொழில், உத்தியோகம், வியாபாரத்திற்காக கஷ்டப்பட்டுக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, படிப்பு தடைபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இனி அந்த தடைகள் எல்லாம் நிவர்த்தியாகும். எல்லா விஷயங்களும் கைகூடும். நிலத்தில், வீட்டில் நிறைய முதலீடுகளைச் செய்வீர்கள். மிகவும் பிஸியாக இருப்பீர்கள். கனவு போல நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். வீட்டில் இன்டீரியர் டெக்கரேஷன்களை செய்து மகிழ்வீர்கள்.
வழிபாடு
செவ்வாய்க்கிழமை தோறும் மதிய வேளைகளில் ஏழைகளுக்கு சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் போன்றவற்றை தானமாகக் கொடுப்பது நன்மையைத் தரும். மாசி மாதம் முழுவதும் தானமாகக் கொடுப்பது நல்லது.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!!












Click it and Unblock the Notifications