For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவராத்திரி பண்டிகை: மகராஷ்டிரா அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு - குஜராத்தில் கொண்டாட்டம் ரத்து

ராவணனை எரிக்கும் நிகழ்வில் குறைந்த அளவில் மட்டுமே மண்டலை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள வேண்டும். முடிந்த வரை சாமி தரிசனத்தை ஆன்லைன் மூலம் நடத்த மண்டல் நிர்வாகிகளை மகாராஷ்டிரா அரசு வலியுறுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனா வைரஸ் பரவல் அச்சத்திற்கு மத்தியில் நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. ராவணனை எரிக்கும் நிகழ்வில் குறைந்த அளவில் மட்டுமே மண்டலை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள வேண்டும். முடிந்த வரை சாமி தரிசனத்தை ஆன்லைன் மூலம் நடத்த மண்டல் நிர்வாகிகளை மகாராஷ்டிரா அரசு வலியுறுத்தி உள்ளது. குஜராத்தில் நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.

மகாளய அமாவாசைக்கும், மகா சஷ்டிக்கும் இடையே வரக்கூடியது தான் நவராத்திரி எனும் கொலு கொண்டாட்டம். ஆனால் இந்தாண்டு புரட்டாசி மாதம் இரண்டு அமாவாசைகள் வருவதால், புரட்டாசி முதல் நாள் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று மகாளய அமாவாசை கடைப்பிடிக்கப்பட்டது.

புரட்டாசி இரண்டாவது அமாவாசை முடிந்த பின்னர் மறுநாள் ஐப்பசி 1 அதாவது அக்டோபர் 16ஆம் தேதி நவராத்திரி கொலு கொண்டாட்டம் தொடங்குகிறது.

அதிமுக முதல்வர் வேட்பாளர் அக்டோபர் 7ல் அறிவிப்பு : அப்படி என்ன விஷேசம் - ஜோதிட ரீதியான காரணங்கள்அதிமுக முதல்வர் வேட்பாளர் அக்டோபர் 7ல் அறிவிப்பு : அப்படி என்ன விஷேசம் - ஜோதிட ரீதியான காரணங்கள்

நவராத்திரி கொண்டாட்டம்

நவராத்திரி கொண்டாட்டம்

நவராத்திரி காலங்களில் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடுவார்கள். கோவில்களில் தினந்தோறும் அம்மன் அலங்கார ரூபமாக காட்சி தருவார். நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கை அம்மனின் ரூபத்திலும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியின் அவதாரங்களாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் வடிவங்களில் வணங்குவார்கள். அக்டோபர் 25ஆம் தேதி சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 26ஆம் தேதி விஜயதசமி பண்டிகையாகும்.

மகாராஷ்டிரா அரசு வழிகாட்டி நெறிமுறை

மகாராஷ்டிரா அரசு வழிகாட்டி நெறிமுறை

மும்பையில் ஆண்டு தோறும் நவராத்திரி பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காலமாக இருப்பதால் நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்திற் மும்பையில் ஆண்டு தோறும் நவராத்திரி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கொரோனா பரவல் காலமாக இருப்பதால் நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. மண்டல்களில் 4 அடி உயரம் வரையிலும், வீடுகளில் 2 அடி வரையிலும் தேவி சிலைகளை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. மண்டல்களில் 4 அடி உயரம் வரையிலும், வீடுகளில் 2 அடி வரையிலும் தேவி சிலைகளை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை

பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறை

மண்டல்களில் வழிபாடு செய்ய வருபவர்களுக்கு தெர்மல் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். இதேபோல பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்தே சாமி தரிசனம் செய்ய முடியும்.

குறைவான பக்தர்கள் பங்கேற்க வேண்டும்

குறைவான பக்தர்கள் பங்கேற்க வேண்டும்

கடைசி நாளன்று ராவணனை எரிக்கும் நிகழ்வில் குறைந்த அளவில் மட்டுமே மண்டலை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள வேண்டும். முடிந்த வரை சாமி தரிசனத்தை ஆன்லைன் மூலம் நடத்த மண்டல் நிர்வாகிகளை அரசு வலியுறுத்தி உள்ளது.

குஜராத் கர்பா நடனம்

குஜராத் கர்பா நடனம்

குஜராத் மாநிலத்தில் 9 நாட்களுக்கு, அம்மாநில அரசு சார்பில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக நடைபெறும். அப்போது அரங்கேறும் கர்பா நடன நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பது வழக்கம்.

பொதுமக்கள் நலன்

பொதுமக்கள் நலன்

அக்டோபர் 17 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்த நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக குஜராத் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். பொதுமக்களின் நலன் கருதி இம்முடிவு எடுகப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

English summary
The Maharashtra government urged people to celebrate the upcoming Navratri and Dussehra festivals due to the coronavirus outbreak and suggested organisation of health and blood donation camps instead of dandiya, garba and cultural events involving mass participation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X