Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவணி பவுர்ணமி..திருவண்ணாமலையில் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம்..விண்ணை எட்டிய அரோகரா முழக்கம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: ஆவணி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் விடிய விடிய கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர். கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. பக்தர்கள் எழுப்பிய அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது.

பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை கிரிவலம் வர வைகுண்டப் பதவி கிடைக்கும் கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு தானம் செய்வது சிறப்பாகும். சாதுக்கள் வடிவில் சித்தர்கள் இருக்கலாம். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், தானம் கொடுப்பதன் மூலம் நமது பாவங்கள் அகலும். கிரிவலம் செய்தால்தான் முழுமையான பலன் கிடைக்குமென சித்தர்கள் கூறியுள்ளனர்.

பஞ்சபூத தலம்

பஞ்சபூத தலம்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தி தரும் திருத்தலமாகவும் அமைந்துள்ளது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். மலையே மகேசனாக காட்சியளிப்பதால், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். திருவண்ணாமலையில் நேற்று மாலை முதல் விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இன்று 2வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

ஆவணி மாத பவுர்ணமி

ஆவணி மாத பவுர்ணமி

ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று மாலை 6.22 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.35 மணிக்கு நிறைவடைகிறது. நேற்று மாலை கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. நேற்று இரவு விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை கிரிவலம் சென்று வழிபட்டனர். அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது.

கிரிவலம்

கிரிவலம்

இந்நிலையில் 2வது நாளான இன்றும் அதிகளவு பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர். கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று மாலை வரை இருப்பதாலும் 2 நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதாலும் கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை பகல் நேரத்தில் மேலும் அதிகரித்தது. மேலும் இன்று பகலில் வெயில் அதிகம் இல்லாமல், வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால் எவ்வித சிரமமும் இன்றி அதிகளவு பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பக்தர்கள் தரிசனம்

பக்தர்கள் தரிசனம்

பவுர்ணமியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதையொட்டி உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர்.
பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டது.

கிரிவலம் நன்மைகள்

கிரிவலம் நன்மைகள்

திருவண்ணாமலையில் சித்தர்கள் சூட்சும வடிவில் வலம் வருவதாகக் கூறப்படுகிறது. பவுர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டுமா? வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். பிறந்த நாள், திருமண நாள், மூத்தோர்களின் நினைவு நாள் என்று எந்நாளும் சிவபெருமானை நினைத்து வலம் வரலாம். கிரிவலம் வந்தால் பாவங்கள் முழுவதும் நீங்கிவிடும். மேலும் பாவம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தையும் நமக்குத் தோற்றுவித்துவிடும். வயதானவர்களுக்கும் உடல் நலிவுற்றவர்களுக்கும், வலம் வர வேண்டும் என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

எந்த நாளில் என்ன நன்மை

எந்த நாளில் என்ன நன்மை

திங்கட்கிழமை கிரிவலம் வர இந்திர பதவி கிடைக்கும். செவ்வாய்க்கிழமை கிரிவலம் வர கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வர கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை கிரிவலம் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வர வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வர பிறவிப்பிணி அகலும். ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும். கிரிவலப் பாதையான 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும் . நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும். அப்பொழுதுதான் கிரிவலம் வருவதற்கான பலனும் புண்ணியமும் சேரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+