செவ்வாய்கிழமை நிகழும் முழு சந்திர கிரகணம்.. கடன் பிரச்சினை தீர இதை செய்ய மறக்காதீர்கள்
சென்னை: சந்திர கிரகண நேரத்தில், கடன் தொகையை செலுத்தினால் கடுமையான கடன் தொல்லையிலிருந்து வெளிவரலாம். நேரில் பணத்தை கொடுக்க முடியாவிட்டாலும் ஆன்லைன் மூலம் சிறிதளவு கடனை செலுத்த படிப்படியாக கடன் பிரச்சினை நீங்கும்.
உலகின் பல பகுதிகளில் இந்திய நேரப்படி சந்திர கிரகணம் பிற்பகல் 02.38 மணிக்கு தொடங்க உள்ளது. முழு கிரகணம் 03.45 மணிக்கு ஆரம்பமாகிறது. கிரகண மத்திமம் மாலை 04.28 மணிக்கு நிகழ்கிறது. முழு கிரகணம் மாலை 05 மணி 11 நிமிடத்திற்கு முடிகிறது. கிரகணம் மாலை 06 மணி 19 நிமிடத்திற்கு முடிகிறது.
முழு சந்திரகிரகணமாக இருந்தாலும் பகல் நேரத்தில் கிரகணம் நிகழ்வதால் இந்தியாவில் தெரியாது. மாலையில் சந்திரன் உதயமாகி கிரகணம் முடியும் வரை பார்க்கலாம்.

கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள்
இன்று நிகழ உள்ள முழு சந்திர கிரகணம் சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தோஷத்தை தரும். அவர்கள் அனைவரும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அசுவினி, பரணி, கிருத்திகை, பூரம்,பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கிரகண தோஷதாகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகார தோஷம் செய்து கொள்வது அவசியம். சந்திர கிரகணம் முடிந்த பின்னர் குளித்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு விட்டு வந்து சாப்பிடலாம்.

சென்னையில் சந்திர கிரகணம்
சென்னையில் மாலை 05 மணி 38 நிமிடத்தில் பகுதி சந்திர கிரகணத்தை பார்க்கலாம், சேலம் நகரில் மாலை 05 மணி 49 நிமிடத்திலும் கோவையில் மாலை 05 மணி 54 நிமிடத்திலும் மும்பையில் மாலை 06 மணி 1 நிமிடத்திற்கும் பகுதி சந்திர கிரகணம் தெரியும். இன்று கடன் அடைக்க மிகவும் நல்ல நாளாகும்.

கடன் பிரச்சினை தீரும்
பொதுவாகவே செவ்வாய்கிழமை கடன் பிரச்சினை தீர்க்க நல்ல நாள். செவ்வாய்க்கிழமை மாலை 5:32 முதல் மாலை 6.18 மணிவரை மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சந்திர கிரகண நேரத்தில், கடன் தொகையை செலுத்தினால் கடுமையான கடன் தொல்லையிலிருந்து வெளிவரலாம். கடன் தொகையை நேரில் கொடுக்க முடியாவிட்டாலும் ஆன்லைன் மூலம் கூட சிறு கடன்தொகையை செலுத்தலாம்.

கடன் தீர பரிகாரம்
செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித்தரலாம். சென்ற பிறவியின் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

பலன் தரும் பரிகாரங்கள்
கடன் தொல்லை என்பது ஒரு மனிதருக்கு வரக்கூடாத பிரச்சினைதான். வந்த பிறகு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே என்று வருந்துபவர்கள், நம் முன்னோர்கள் கூறியுள்ள கிரகண தோஷ நிவர்த்தி பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயமாக கடன் தொல்லைகள் தீரும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

கடன் பிரச்சினை
வாழும் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆனால் இந்த காலத்திற்கு கடன் இல்லாத வாழ்க்கையே சிறப்பான வாழ்க்கை என்று சொல்லும் அளவிற்கு உள்ளது.
இன்றைய கால கட்டத்தில் தொழில் செய்வதாக இருந்தாலும் சரி, குடும்ப முன்னேற்றத்திற்காக இருந்தாலும் கடன் வாங்காமல் எதையும் செய்ய முடியாத நிலை. இன்று நடுத்தர மக்கள் மட்டுமின்றி பெரும் பணக்காரர்கள் வரை வாட்டி வதைப்பது கடன் பிரச்னைதான். பணப்பிரச்னை என்பது எல்லோருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் வந்து விடுகிறது. ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் சுமை ஏற்பட்டு விடுகிறது. ஜாதக பலம் உள்ளவர்கள் இதில் இருந்து மீண்டு வந்துவிடுகிறார்கள். கடன் பிரச்சினையில் சிக்கித்தவிப்பவர்கள் இன்றைய தினம் மறக்காமல் கடனில் ஒரு பகுதியை கொடுத்து பாருங்கள். அப்புறம் பாருங்கள்..உங்கள் கடன் பிரச்சினை எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல காணாமல் போய் விடும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications