• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குரு பெயர்ச்சி 2019: விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு இடம்பெயரும் குரு - பரிகார யாகங்கள்

|

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிஅனுக்கிரக குருபகவானுக்கு வருகிற 29ஆம் தேதி குரு பெயர்ச்சியை முன்னிட்டு மஹாயாகமும், சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் நடைபெற உள்ளது. ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்களும் குருதிசை, குருபுத்தி நடப்பவர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும்

மனித வாழ்க்கையின் ஏற்றம் இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.

Guru peyarchi 2019 Maga yagam at Sri Dhanvantri Arokya Peedam

குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் 2, 5,7,9,11, ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், 1,3,4,6,8,10,12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார். இப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பீடத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் என்ற பெயர்களுடன் 468 சித்தர்கள் மற்றும் 75 விதமான பரிவார மூர்த்திகளுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்ற ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ வல்லலார், காஞ்சி மஹாபெரியவர், ஸ்ரீ ராகவேந்திரர், சீரடி சாயிபாபா சன்னதிகள் அருகே, குரு பீடத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் வகையில் அனுக்கிரக தக்ஷிணாமூர்த்தியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.

Guru peyarchi 2019 Maga yagam at Sri Dhanvantri Arokya Peedam

மேற்கண்ட அனுக்கிரக குருபகவானுக்கு வியாழக்கிழமை மற்றும் குரு பெயர்ச்சி நாளில் மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நிவேதனம் செய்து குழந்தைகளுக்கு தானம் செய்வது சிறப்பு தரும்.

மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நிவேதனம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் பலவிதமான நன்மைகள் ஏற்படும். மேலும் மனக்குறைகளும் நீங்கும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இந்த ஆண்டு குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி 29ஆம் தேதி நிகழ உள்ளது. அனுக்கிரக குருபகவானுக்கு வருகிற 29ஆம் தேதி குரு பெயர்ச்சியை முன்னிட்டு மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்கள் கொண்டு மஹாயாகமும், சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் நடைபெற உள்ளது. அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டியும் மஹா யாகம் நடைபெற உள்ளது. ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிக்காரர்களும் குருதிசை, குருபுத்தி நடப்பவர்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும்

இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், 10 கீழ்புதுப்பேட்டை, தன்வந்திரி நகர், வாலாஜாபேட்டை 632513 தொலை பேசி. 04172- 230033,230274,9443330203.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Guru peyarchi from Viruchigam to Dhanusu rasi on October 29 Vakkiya panchangam November 5th for Tirukanitha panchangam. Guru peyarchi Maha yagam at Sri Dhanvantri Arokya Peedam in Walajapet, Vellore district.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more