குரு பெயர்ச்சி பலன் 2021: வேலையில் புரமோசன், தொழில் வியாபாரத்தில் யாருக்கு லாபம் தெரியுமா
குரு பகவான் பொன்னையும் பொருளையும் அள்ளித்தருவார். நல்ல வேலையையும், தொழிலில் லாபத்தையும் வருமானத்தையும் கொடுப்பார்.
சென்னை: குரு பகவான் பொன்னையும் பொருளையும் அள்ளித்தருவார். நல்ல வேலையையும், தொழிலில் லாபத்தையும் வருமானத்தையும் கொடுப்பார். நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்குமா? தொழில் வருமானம் அதிகரிக்குமா என்று பார்க்கலாம்.
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். காலச்சக்கரத்திற்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு அமரப்போகிறார். குருவின் பார்வை மிதுனம், சிம்மம், துலாம் ராசிகளின் மீது விழப்போகிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி மங்களகரமான பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ஆம் தேதி நவம்பர் 13ஆம் நாள் சனிக்கிழமை இரவு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் மங்களகரமான பிலவ ஆண்டு கார்த்திகை மாதம் 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதியன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.
குரு பலம் இருந்தாலே எதையும் சாதிக்கலாம் என்றும் வெற்றி மீது வெற்றி வந்து சேரும் என்றும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. கோச்சார ரீதியான குரு பெயர்ச்சி பலன்கள் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பது கிடையாது. காரணம் ஜாதகத்தில் உள்ளது தசா புத்திகளும் ,கிரகங்களும் தான் 70% வரை பலன்களைத் தீர்மானிக்கும். குரு பெயர்ச்சி,சனிப் பெயர்ச்சி ,ராகு பெயர்ச்சி இதெல்லாம் 30% வரை பலனை தீர்மானிக்கும். ஜாதகத்தில் தசா புத்திகளில் இருக்கும் நன்மை தீமைகளை கூட்டி,குறைத்து வழங்குவதுதான் இந்தப் பெயர்ச்சிகளின் தன்மையாகும். ராசிக்கு மட்டும் பலன்களை எடுக்காமல் லக்கினத்திற்கும் இதை பொருத்தி பாருங்கள். தங்கள் சுய ஜாதகத்தை ஆராய்ந்து மற்ற முடிவுகளை எடுங்கள்.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு9,12 ஆம் அதிபதி. குரு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். கடந்த வருடத்தில் வேலை தொழில் ரீதியாக சிரமமான சூழ்நிலைகளை சந்தித்தவர்களுக்கு இந்த வருடம் சாதகமாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இட மாற்றங்கள் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் சுப விரையச் செலவுகள் ஏற்படும். குரு பெயர்ச்சியினாலும் குருவின் பார்வையாலும் திருமணம், புத்திரபாக்கியம் உள்ளிட்ட சுப காரியங்கள் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, குரு உங்கள் ராசிக்கு 8 மற்றும் 11ஆம் வீட்டிற்கு உடையவர். 10ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.தொழில் அல்லது வேலையில் மாற்றம் நிகழும். சிலருக்கு தொழில், வியாபாரம், வேலையில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. உயரதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளை சேர்க்க வேண்டாம். 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குரு அதிசாரமாக லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் போது ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம்.

மிதுனம்
புதன்பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்ய ஸ்தான இடத்திற்கு செல்லப் போகிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபாடுகளையும், ஆலயங்களையும் குறிக்கும். குரு உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தான அதிபதி, தொழில் ஸ்தான அதிபதி. குருவின் பார்வையால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த கால கட்டத்தில் வெளிநாட்டு வேலைகளுக்கு முயற்சி செய்தால் இடைபட்ட காலங்களில் வெளிநாட்டு,வெளிமாநில வேலை அமையும் . ஜோதிடம்,ஆன்மீகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல தனச்சேர்க்கை உண்டாகும். குரு பெயர்ச்சியின் இறுதி காலகட்டங்களில் அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். தங்க நகைகள் வாங்குவார்கள். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள்.

கடகம்
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 6, மற்றும் 9ஆம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் எட்டாம் வீட்டிற்கு வரப்போகிறார். அஷ்டம குரு என்று அச்சப்பட வேண்டாம். குரு பகவான் உங்களுக்கு அஷ்டம குரு நன்மையே செய்வார். கண்டச்சனி காலம் என்பதால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். வேலை, தொழில் விசயங்களில் அகலக்கால் வைக்க வேண்டாம். அவசரப்பட்டு இருக்கிற வேலையை விட்டு விட வேண்டாம். 2022 ஆம் ஆண்டு குரு அதிசாரமாக 9ஆம் வீட்டிற்கு பயணிக்கும் காலத்தில் உங்களுடைய பிரச்சினை படிப்படியாக குறைந்து நன்மைகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி, அஷ்டம ஸ்தான அதிபதியும் ஆவார். குரு களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டில் அமர்கிறார். குருவின் பார்வை உங்கள் தொழில் வியாபாரத்தில் அதிக லாபத்தையும் நன்மைகளையும் தரும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். தொட்டது பொன்னாகும் காலம். இருக்கிற தொழிலை விரிவு செய்யுங்கள் அதே நேரத்தில் புதிய தொழில் முயற்சிகளை தவிர்க்கவும். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல புரமோசன் கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும் காலகட்டமாகும்.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கடன்,நோய் சம்பந்தப்பட்ட வகையில் மனஸ்தாபங்களும் பிரச்சினைகளும் நிகழும். புது முதலீடுகள் கூடாது. வேலை முயற்சிகளிலும் பலவீனம் ஏற்படும். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். குரு பெயர்ச்சியின் முற்பகுதியில் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதிசாரமாக குரு பயணிக்கும் காலத்தில் நன்மையே ஏற்படும். வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும். புதிய முதலீடுகளுக்காக வங்கிக் கடன் வாங்கலாம்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications