பெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடை விழா - நிறை புத்தரசி வழிபாடு
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில், இந்த ஆண்டுக்கான மாசி மாதக்கொடை விழா வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தொடங்கவுள்ளது.
நாகர்கோயில்: குமரி மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில், இந்த ஆண்டுக்கான மாசி மாதக்கொடை விழா வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி தொடங்கவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் விழா பக்தர்கள் இன்றி மிக எளிமையாக நடைபெற்றது. 18ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் பஞ்சாபிஷேகம், காலை 6 மணியளவில் நிறை புத்தரசி வழிபாடும் அதைத் தொடர்ந்து காலை 6:30 மணியளவில் தீபாராதனையும் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோயில் மண்டைக்காடு பகவதியம்மன் ஆலயம். ஆண் பக்தர்களுக்கு கேரள மாநிலத்தில உள்ள சபரிமலை ஐயப்பன் பிரசித்தமோ, அது மாதிரி நெல்லை, குமரி மற்றும் கேரள மாநில பெண் பக்தர்களுக்கு பெண்களின் சபரிமலை போன்றதாகும். கேரள மாநில பெண்கள் இருமுடி கட்டிக்கொண்டு இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள பகவதியம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று போற்றப்படுகிறது.
கேரள கோவிலை போன்று அமைப்பு கொண்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர். சபரிமலைக்கு ஆண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து,பயபக்தியுடன் சென்று வழிபட்டு வருவதைப் போல, ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழாவை ஒட்டி கேரளத்து பெண்கள் 41 நாள்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வார்கள்.

முந்தைய காலகட்டத்தில் இந்த இடம், காடாக இருந்திருக்கிறது. கால்நடைகளை இங்கே மேய்ச்சலுக்குக் கொண்டுவந்ததால், இதை மந்தைகாடு என அழைத்துள்ளனர். அதுவே காலப்போக்கில் மருவி மண்டைக்காடு ஆனதாகச் சொல்லப்படுகிறது. ராஜேஸ்வரி குடியிருப்பதாக சொல்லப்படும் ஸ்ரீசக்கரத்தை கையில் ஏந்தி ஆதி சங்கரரின் சீடர் ஒருவர் இங்கே வந்தார். ஸ்ரீசக்கரத்தை தரையில் வைத்து விட்டு பூஜையில் ஆழ்ந்துவிட, அவரை சுற்றிலும் சில நேரங்களில் புற்றுக்கள் வளர்ந்துவிட்டன. ஆடுமேய்க்கும் சிறுவர்கள் அவரை எழுப்பிவிட்டனர். ஸ்ரீசக்கரமோ மண்ணை விட்டு வரவில்லை. அவரும் அங்கேயே இருந்து ஜீவ சமாதி ஆகிவிட்டார். இந்த விஷயம் மன்னர் மார்த்தாண்டவர்மாவுக்கு தெரிய வந்ததும் அப்பகுதியில் கோவில் கட்டினார். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உருவான வரலாறு இது தான்.

கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகளில் குறைபாடு, கண் திருஷ்டி தோஷம், தலைவலி நிவாரணம் போன்றவற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்யப்படுகின்றது. இக்கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. அரிசிமாவில் வெல்லம்,பாசிப் பருப்பு,ஏலம்,சுக்கு ஆகியவை சேர்ந்து நீராவியால் அவித்துத் தயார் செய்யப்படுகிறது இந்த மண்டையப்பம். அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. மாசி கொடை விழாவின் போது வேண்டுதல் நிறைவேற ஆலய வளாகத்தை சுற்றிலும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீண்டபிறகு இங்கே வந்து, முத்தப்பம் என்னும் அப்பத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.
வேப்ப மரம் கோவிலின் தல விருட்சமாக உள்ளது. செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் அதிகம் பேர் மண்டைக்காடு அம்மன் கோவிலில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். அதிலும் தமிழ்மாதக் கடைசி செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பு.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கொடைவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விழாவில் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பெண் பக்தர்கள் வந்து பகவதியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். நடப்பு ஆண்டு, மாசி மாதக் கொடைவிழா வரும் பிப்ரவதி 27ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவிற்கான முன்னேற்பாடாக பந்தல்கால் நடும் விழா மற்றும், ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடைபெற உள்ள 85ஆவது சமய மாநாடு ஆகியவற்றுக்கான பந்தல்கால் நடும் விழா கடந்த 18ஆம் தேதியன்று நடைபெற்றது.
பந்தல்கால் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு, அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு, அதிகாலை 5 மணியளவில் பஞ்சாபிஷேகம், காலை 6 மணியளவில் நிறை புத்தரசி வழிபாடும் அதைத் தொடர்ந்து காலை 6:30 மணியளவில் தீபாராதனையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 7:45 மணியளவில் பந்தல்கால் நடும் வைபவம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கோயில் தந்திரி சங்கர நாராயணன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், கோயில் மராமத்துப் பொறியாளர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுக நயினார், ஹைந்தவ சேவா சங்க தலைவர் கந்தப்பன், பொதுச் செயலாளர் ரத்ன பாண்டியன் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
பந்தல்கால் நடும் வைபவத்தைத் தொடர்ந்து, ஹைவந்த சேவா சங்கம் சார்பில் நடைபெறும் 85ஆவது சமய மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் வைபவமும் நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓமைக்ரான் கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்ல தமிழக அரசு பிறப்பித்த தடையுத்தரவு அமலில் இருந்ததால், கோயில் வாசலும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால், பந்தல்கால் நடும் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி மிக எளிமையாக நடைபெற்றது. கோயில் வாசலில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications