For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆயுள், ஆரோக்கியம், மன நிம்மதி தரும் மகா சண்டி - ஆடி வெள்ளி ஆடி பௌர்ணமியில் நவசண்டி யாகம்

ஆடி வெள்ளிக்கிழமை ஆடி பௌர்ணமி முன்னிட்டும் உலக நன்மைக்காகவும் 5 நாட்கள் தொடர் நவசண்டி யாகம் நடைபெற உள்ளது.

Google Oneindia Tamil News

வேலூர்: கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை வழிபடுகின்றனர். தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. சண்டி ஹோமம் என்பது ஒரு அற்புதமான ஹோமம். ஆடி வெள்ளிக்கிழமை ஆடி பௌர்ணமியை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு தொடர் நவசண்டி யாகம் நடைபெற உள்ளது.

சண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வம். அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி. இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகலும்.

முதல்வன் பட பாணியில் ஒரு எம்எல்ஏ.. திமுக எம்எல்ஏவை பாராட்டி அதிமுக போஸ்டர்.. மண்ணச்சநல்லூரில் பரபரப்பு முதல்வன் பட பாணியில் ஒரு எம்எல்ஏ.. திமுக எம்எல்ஏவை பாராட்டி அதிமுக போஸ்டர்.. மண்ணச்சநல்லூரில் பரபரப்பு

கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை வழிபடுகின்றனர். தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள்.

தேவி வழிபாடு

தேவி வழிபாடு

செல்வம், செல்வாக்கு, ஆரோக்கியம் மன நிம்மதி ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும். சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது. அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. சண்டி ஹோமம் என்பது ஒரு அற்புதமான ஹோமம்.

தோஷம் நீங்கும்

தோஷம் நீங்கும்

பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது. துர்கா ஹோமத்தில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் இடம்பெறுகிறது.

மூலிகைகள்

மூலிகைகள்

பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன.

வசிய சக்திகள்

வசிய சக்திகள்

இந்த ஹோமத்தில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரணமாக, புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப் பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில்கொடி தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரியங்களுக்கும் பயன்படுகிறது

உலக நன்மை யாகம்

உலக நன்மை யாகம்

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஆடி ஏகாதசி ஆடி வெள்ளிக்கிழமை ஆடி பௌர்ணமி, ஆடி திருவோணம் முன்னிட்டும் உலக நன்மைக்காகவும் வருகிற 21.07.2021 புதன்கிழமை முதல் 25.07.2021 ஞாயிறு வரை ஐந்து நாட்கள் வாலாஜா தன்வந்த்ரி பீடத்தில் தொடர் நவசண்டி யாகம் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு யாகம் நடைபெற உள்ளது.

நன்மை தரும் யாகங்கள்

நன்மை தரும் யாகங்கள்

அதை தொடர்ந்து 21 07 2021 புதன் கிழமை காலை அனுக்ஞை, விநாயகர் பூஜை, புண்ணியாகவாசனம்வாஞ்சா கல்ப கணபதி ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்று மாலை முதல் 10க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் கொண்டு பலி பூஜைகள் பூர்வாங்க பூஜைகளுடன் 25.07.2021 ஞாயிறுக்கிழமை வரை ஐந்து நாட்கள் சண்டிகா பரமேஸ்வரி பூஜையும், சப்தசதி பாராயணம் மற்றும் தீபபூஜையுடன் நவசண்டி யாகம், நவதுர்கா ஹோமம். சப்தமாதா ஹோமம். பாலா ஹோமம் சுயம்வர கலா பார்வதி யாகம் சந்தான கோபால யாகம், அஷ்ட பைரவர் யாகம், சரபேஸ்வரர் யாகம், பிரத்யங்கிரா யாகம் போன்ற பத்து வகையான யாகம் நவ சண்டி யாகத்துடன் நடைபெற உள்ளது.

நவ தானியங்கள்

நவ தானியங்கள்

இதற்காக 13 அடி ஆழமும், ஏழரை அடி விட்டமும் கொண்ட யாககுண்டம் அமைத்து 1,008 மூலிகை பொருட்கள், 10000 தாமரை மலர்கள் நவதானியங்கள், பழவகைகள், பட்டு புடவைகள் சௌபாக்ய பொருட்கள்,நெய் உள்ளிட்ட யாக பொருட்கள் குண்டத்தில் சேர்க்க பட உள்ளது.

தன்வந்திரி பெருமாளின் ஆசி

தன்வந்திரி பெருமாளின் ஆசி

ஒரு மனிதனின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும் யாகம் இது. இவை மட்டுமல்லாமல் தன்வந்திரி பெருமாளின் அனுக்கிரகத்தையும், அருளையும் கூட்டித் தரும் யாகம். ஒவ்வொரு மனிதனின் மனதைக் கட்டுக்குள் அடக்கி, ஆசைக்கு அணை போடும் ஹோமம் ஆகும். அதிகமாக உண்ணாது உடலுக்கு ஏற்ற தேவையான உணவை மட்டும் உண்ண வைக்கும் அதீத யாகம் இது.

நோய்கள் நீக்கும் யாகம்

நோய்கள் நீக்கும் யாகம்

இந்த யாகத்தை முறையாக செய்து கொள்பவர்களுக்கு மூளைக் கோளாறு, மூளை நரம்பினால் ஏற்படும் கோளாறு போன்ற கபால நோய்கள், வாத சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். மற்றும் உடல் ரீதியான நோய்களுக்கும் மன ரீதியான நோய்களுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும். தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நவ சண்டி ஹோமத்தை தொடர்ந்து ஐந்து நாட்களும் சுவாசினி பூஜை, நவ கன்னிகா பூஜை, வடுகபைரவர் பூஜையும், வஸோர்தாரா ஹோமம், மகா பூர்ணாஹூதி தீபாராதனையும் நடைபெற தொடர்ந்து மஹிஷாசுரமர்த்தினி தேவிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.

English summary
A series of Navachandi Yagya is scheduled to be held for 5 days on the eve of the month of Audi at the Dhanvantari Health Faculty for the benefit of the world on the eve of Audi Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X