For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனி நீராடு... எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் என்ன கிடைக்கும் தெரியுமா?

சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து தலை முழுகினால் நற் பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்று தேரையர் ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: சனிக்கிழமைகளில் நல்ல எண்ணெய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடையும் என்கிறார்கள்.

அவ்வையார் இயற்றிய ஆத்திச்சூடியில்
சனி நீராடு என குறிப்பிட்டிருக்கிறார்.

நாள்தோறும் செய்கிறோமோ இல்லையோ வாரத்தில் ஒருநாளாக சனிக்கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதே இப் பாடலுக்குக் கூறப்படும் பெருவாரியான கருத்து ஆகும். ஒருசிலர் சனி என்பதற்கு மந்தமாக நடக்கிற அல்லது மெதுவாக ஓடுகிற என்று பொருள் கொண்டு மெல்ல ஓடும் ஆற்று நீரில் குளிக்க வேண்டும் என்று கருத்து கூறுகின்றனர். இன்னும் ஒருசிலர் சனி என்பதற்கு குளிர்ச்சி என்று பொருள் கொண்டு குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும் என்று கருத்து உரைக்கின்றனர்.

Sani neeradu which means ‘bathe on Saturdays’

ஒருசிலர் அசனி நீராடு என்பதுதான் சரி என்கின்றனர். அசனி எனும் சொல்லுக்கு சாம்பிராணி இலை என்று பொருள் கூறுகின்றனர். அந்த சாம்பிரானி இலையை நீரில் ஊரவைத்து நீராடுவது பலவித உடல் மற்றும் சரும கோளாருகளுக்கு நல்லது என்றும் எனவே சாம்பிராணி இலை குளியலைதான் அவ்வாறு கூறப்படுகின்றது என்கின்றனர்.

இன்னும் ஒருசாரர் ஜனி நீராடு என்பதுதான் சரி என்கின்றனர். தினமும் புதிதாக உற்பத்தியாகும் ஊற்றுநீரைதான் ஜனி நீர் என்றும் ஊற்று நீரில் குளிப்பது உடலுக்கும் ஆரோக்கிய்த்திற்க்கும் நல்லது என்கின்றனர்.

சரி. மருத்துவம் என்ன கூறுகிறது என்பதையும் பார்ப்போமே.

நாளுக்கு இரண்டு, வாரத்துக்கு இரண்டு, மாசத்துக்கு இரண்டு, வருடத்திற்கு இரண்டு என்கிறது ஆயுர்வேதம். நாளுக்கு இரண்டு என்பது ஒருநாளைக்கு இருமுறை மலம் கழிக்கவேண்டும் என்று பொருள்.

வாரத்திற்கு இரண்டு என்பது வாரத்தில் இரண்டு முறை எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் என்பதாகும். மாதத்திற்கு இரண்டு என்பது மாதத்தில் இரண்டு முறைதான் மனைவியுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என்பதாகும். வருடத்திற்கு இரண்டு என்பது வருடத்தில் இரண்டு முறை பேதிக்கு சாப்பிட்டு வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்பதாகும்.

எந்த நாளில் தலை முழுகினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தேரையர் ஒரு பாடலில் விளக்குகிறார்.

Sani neeradu which means ‘bathe on Saturdays’

ஞாயிற்று கிழமைகளில் தலை முழுகினால் உடல் அழகை மாற்றிவிடும், திங்கள் கிழமைகளில் தலை முழுகினால் பொருள் சேரும், செவ்வாயில் முழுகினால் உயிரை மாய்க்கும் நிலை ஏற்படலாம். புதன் கிழமைகளில் தலை முழுகினால் சிறந்த அறிவு வளர்ச்சி உண்டாகும். வியாழன் முழுகினால் அறிவு மந்தமாகும். வெள்ளிக்கிழமைகளில் தலை முழுகினால் கடன் உண்டாகும். சனிக்கிழமைகளில் தலை முழுகினால் நற்பெயரும் நல்ல நண்பர்களும் உண்டாகும் என்கிறார்.

கட்டுரையின் முடிப்பதற்கு முன் ஜோதிட ரீதியான விளக்கத்தை அளிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

முதலில் சனி நீராடு என்பதின் விளக்கத்தினை பார்ப்போம். சனி நீராடு என்பது சனி கிரகத்தின் தானியமான? எள்ளிலிருந்து பெறும் நல்லெண்ணை குளியளைதான் குறிக்கிறது.

அது ஏன் நல்லெண்ணை? அனைத்து என்னைகளுக்கும் சனி பகாவான் தான் காரகர் என்றாலும் நல்லெண்ணைதான் சனிக்கு உகந்த எண்ணையாக கருதப்படுகிறது. உடல் கட்டு மற்றும் எலும்பிற்க்கு காரகன் சனி பகவான் ஆவார். எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியள் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

அது ஏன் வாரத்தில் ஏழு நாட்கள் இருக்க
ஆண்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமையும் பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளும் பரிந்துரைக்கபடுகின்றது?

சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம்.

மேலும் சனைஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பயனளிக்கும்.

Sani neeradu which means ‘bathe on Saturdays’

நல்லெண்ணை குளியலால் ஏற்படும் நன்மைகள்:

1. சனி தோஷம் விலகும்.
2. சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்கள் நீங்கும்
3. புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும்.
4. சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும்.
5. சூரியன் மற்றும் செவ்வாயால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும்

வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என சும்மாவா கூறினார்கள் பெரியோர்கள்.

எது எப்படியோ! சனிக்கிழமைகளில் எண்ணை தேய்த்து குளித்துவிட்டு மிளகு ரசம் சாப்பிட்டு ஓய்வு எடுப்பது கூட சுகம்தானே. பிறகென்ன? குளித்துதான் வைப்போமே. என்ன நான் சொல்றது?

English summary
Sani neeradu which means ‘bathe on Saturdays’. Some conveniently take it to mean to bathe only on Saturdays, while others see this as a way to conserve water during the dry summer season.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X