தண்ணீர் பிரச்சினை தீர வழி செய்யும் ராசி, நட்சத்திர மரங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்
📞 94980 98786

சென்னை: மழை வளம் குறைந்து தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது- வருணபகவான் மனது வைக்க வேண்டும் அதற்கு கடவுளை வேண்டுங்கள் என்று அமைச்சரே கூறுகிறார். அவரவர் ராசி, நட்சத்திர மரங்களை வளர்த்தாலே பூமி குளிர மழை பெய்யும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றியே இன்றைய சுக்கிரவார பதிவு எழுதப்பட்டுள்ளது.

தண்ணீர் பிரச்சினைதான் இன்றைய தலையாய பிரச்சினை. 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளூவர் நீரின் தேவையைப் பற்றி எழுதி வைத்துள்ளார்.

"நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு "

தண்ணீர் பஞ்சம்

தண்ணீர் பஞ்சம்

தற்போதைய சூழலில் நம்முடைய பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் என்பது பல இடங்களில் தலைவிரித்தாட தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் நிலத்தடி நீர்வளத்தை நாம் எவ்வாறு அதிகரித்து கொள்வது உரிய மழை பெய்யும் தருணத்தில் நாம் அந்த மழைநீரை முறையாக சேமிப்பதன் மூலமும் அணைகளில் நீரை தேக்கிவைத்து கொள்வதன் மூலமும் நீர்வளத்தேவைகளில் தன்னிறைவு பெற முடியும்.

சென்னை வெள்ளம்

சென்னை வெள்ளம்

கடந்த 2015 நவம்பர் டிசம்பர் மாதங்களில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கனமழை பெய்ததில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. நீர்வரத்து அளவிற்கு அதிகமாக நமக்கு இருந்தாலும் அதை தேக்கி வைத்து பராமரிக்க போதுமான நீர்தேக்கங்களும் அணைகட்டுகளும் இல்லாமல் போன காரணத்தால் பல ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து விட்டது.

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம்

அடுத்த ஓரிரு மாதங்கள் கழித்து இயற்கை முற்றிலும் கடும் வெப்பம் நிலவும் வகையில் அமைந்திருந்தது. இத்தகைய பருவநிலை மாற்றத்தால் நம்முடைய நீர்வள தேவையில் தண்ணிறைவை பெற முடியாமல் போனது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் . மண் அரிப்பை தடுத்து நிலத்தடி நீர்வளத்தை தக்கவைத்து கொள்ளும் தன்மை மரங்களுக்கு உண்டு. நம்முடைய 4/3/2017 தேதியிட்ட சுக்கிரவார பதிவினை தொடர்ந்து தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தாலும் இந்த ஆண்டின் கோடையை சமாளிக்க போதுமான நீர் கிடைப்பது சந்தேகம்தான்.

என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

தற்கால நீர் தேவையை கையாள்வது. எதிர்கால நீர் தேவைக்கு திட்டமிடுதல். தற்கால நீர் தேவையை கையாள நீரை சிக்கனமாக உபயோகிப்பதை தவிர வேறு வழியில்லை. எதிர்கால நீர் தேவைக்கு மழைவேண்டி தெய்வங்களை வேண்டிகொள்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் மழை தரும் தெய்வமான சுக்கிர பகவானுக்கு சில பரிகாரங்கள் செய்யவேண்டியிருக்கிறது.

மரங்களும் ஜோதிடமும்

மரங்களும் ஜோதிடமும்

மரங்களுக்கும் ஜோதிடத்திற்க்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா என்று பார்த்தால் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவே தோன்றுகிறது.
நமக்கு தேவையான நீருக்கு காரக கிரங்கள் சுக்கிரனும் சந்திரனும்தான். அதே போல மரங்களுக்கு விவசாயத்திற்க்கும் காரக கிரகம் சுக்கிரன் தாங்க!
கம்ப்யூடரில் (IT) வேலை செய்வதற்க்கும் கழனி காட்டில் வேலை செய்வதற்க்கும் காரக கிரகம் சுக்கிரன் தான் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

ராசிகளும் தன்மையும்

ராசிகளும் தன்மையும்

விவசாயத்திற்க்கு சுக்கிரனே பிரதான கிரகம் என்றாலும் பன்னிரெண்டு ராசிகளை வீடுகளாக கொண்ட நவகிரகங்களுக்குமே விவசாயத்தின் வாழ்க்கை சுழற்சுக்கு காரணமாகின்றது

நில ராசிகளான ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிகளும் அதன் அதிபதிகளான சுக்கிரன்,புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களே பயிர் விளைய ஆதாரமான நிலத்தை தந்து பயிர் முளைத்தல் மற்றும் விளைதலை செய்கின்றது.

காற்று ராசிகளான மிதுனம்,துலாம் மற்றும் கும்ப வீடுகளும் அதன் அதிபதிகளான புதன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய மூன்று கிரகங்களும் பயிர் செழிப்பாக வளரவும் அதற்கு தேவையான காற்று மற்றும் வெளிச்சத்தை அளிக்கின்றனர்.

ஜல ராசிகளான கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளும் அதன் அதிபதிகளான சந்திரன், செவ்வாய், மற்றும் குரு ஆகிய மூவரும் பயிருக்கு தேவையான நீராதாரத்தை அளிக்கின்றனர்.

நெருப்பு ராசிகளான மேசம், சிம்மம் மற்றும் தனுசு ராசி களும் அதனதிபதிகளான செவ்வாய், சூரியன் மற்றும் குரு விதைகள் மற்றும் பழங்கள் பழுக்க தேவையான வெப்பத்தை அளிக்கின்றனர்

கிரகங்களின் தன்மைக்கேற்ற மரங்கள்

கிரகங்களின் தன்மைக்கேற்ற மரங்கள்

உயமான கம்பீரமாக நிற்க்கும் மரங்களுக்கு சூரியன் காரகமாகும். சுக்கிரனும் சந்திரனும் நீர், பாலுள்ள மரங்கள் மற்றும் அழகிய மணம் வீசும் பூக்களை கொண்ட மரங்களுக்கு காரகமாகும். செவ்வாயும் முள் நிறைந்த மரங்களுக்கு காரகனாவார். புதன் குள்ளமான அடர்ந்த நிழல் தரும் மரங்களுக்கு காரக கிரமாவார் குரு சுவையுள்ள பழம் தரும் மரங்களுக்கு காரகனாவார். சனி ஒழுங்கற்ற வடிவம் பெற்ற மரங்களுக்கும் பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளுக்கும் காரக கிரகமாவார். ராகு மற்றும் கேது அடர்ந்த குட்டையான புதர் செடிகளுக்கு காரக கிரகங்கள் ஆவார்.

தெய்வீக மரங்கள்

தெய்வீக மரங்கள்

வீடுகளில் செல்வ வளம் பெருக நெல்லி மரம், விலவ மரம் இலந்தை மரம் துளசிசெடி ஆகியவற்றை வளர்பது சிறந்ததாகும் இந்த மரங்களில் மஹாலட்சுமி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகின்றன. சக்தியின் அம்சமான வேப்ப மரம் வீட்டில் வளர்பதும் தீய சக்திகளையும் நோய் நொடிகளையும் அண்டவிடாமல் காக்கும்.

ராசி, நட்சத்திரத்திற்குரிய மரங்கள்

ராசி, நட்சத்திரத்திற்குரிய மரங்கள்

மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ராசிகளுக்கு என்று மரம் உள்ளது. அஸ்வினிக்கு ஈட்டி மரம், பரணிக்கு நெல்லி மரம், கார்த்திகைக்கு அத்திமரம் வளர்க்கலாம். ரோகிணிக்கு நாவல்மரம், மிருகசீரிடம் நட்சத்திரக்காரங்கள் கருங்காலி மரமும், திருவாதிரை காரர்கள் செங்கருங்காலி மரம் வளர்க்கலாம்.

புனர்பூசம் மூங்கில் மரம், பூசம் அரசமரம், ஆயில்யம் புன்னை மரம் வளர்க்கலாம். அதேபோல மகம் ஆலமரம், பூரம் பலா மரம், உத்திரம் அலரி மரம், அஸ்தம் அத்தி மரம் வளர்க்கலாம். சித்திரை நட்சத்திரக்காரர்கள் வில்வ மரம், சுவாதி மருத மரம், விசாகம் விலா மரம் வளர்க்கலாம்.
அனுஷம் மகிழ மரம், கேட்டை பராய் மரம், மூலம் மராமரம், பூராடம் வஞ்சி மரம், உத்திராடம் பலா மரம், திருவோணம் எருக்க மரம் வளர்க்கலாம். அதேபோல
அவிட்டம் வன்னி மரம், சதயம் கடம்பு மரம், பூரட்டாதி தேமமரம், உத்திரட்டாதி வேம்பு மரம், ரேவதி இலுப்பை மரம்.

ராசி மரங்கள்

ராசி மரங்கள்

மேஷம் - செஞ்சந்தனம் மரம், ரிஷபம் - அத்தி மரம், மிதுனம் - பலா மரம், கடகம் -புரசு மரம், சிம்மம் - குங்குமப்பூ மரம், கன்னி - மா மரம், துலாம் - மகிழ மரம்,
விருச்சிகம் - கருங்காலி மரம், தனுசு - அரச மரம், மகரம் - ஈட்டி மரம், கும்பம் - வன்னி மரம், மீனம் - புன்னை மரம் வளர்க்கலாம்.
எனவே நாம் ஒவ்வொருவரும் உடனடியாக மரம் மற்றும் தோட்டம் போட வசதியிருப்போர் வீடுகளிலும் வசதியில்லாதோர் பூங்காக்கள், சாலையோரங்கள், ஏரிகரைகள் போன்ற இடங்களில் குறைந்தது இரண்டு மரங்களாவது வளர்க்கவேண்டும். இந்த ராசி, நட்சத்திர மரங்களை வளர்பதால் மழை வளம் பெருகி நீர்வளம் மற்றும் நிலத்தடிநீர் சேமிக்கப்படுவதோடு அல்லாமல் மூலிகை பொருட்களாகவும் பயனளிக்கின்றது.

ஹலோ! வேகமா எங்க கிளம்பீட்டிங்க? மரக்கன்று வாங்க தானே! வாழ்த்துக்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Moon and Venus are soft, watery, feminine planets. The Moon and Venus, it also is a watery planet. Jupiter is also a semi-watery planet. Every Nakshatra has a symbolic tree or plant that defines its connection with eternal nature.
Please Wait while comments are loading...