சிம்ம ராசியில் சுக்கிரன் செவ்வாய் கூட்டணி - எந்த ராசிக்காரர்களுக்கு காதல் மலரும் தெரியுமா
சிம்ம ராசியில் செவ்வாயும் சுக்கிரனும் இணைந்துள்ளனர். நெருப்பு ராசியில் காதல் கிரகமும் நெருப்பு கிரகமும் இணைந்துள்ளதால் சில ராசிக்காரர்களுக்கு மனதில் காதல் மணியடிக்கும். இந்த கிரகங்களின் கூட்டணி சஞ்சாரம் காரணமாக எந்த ராசி
சென்னை: நவ கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தை வைத்து அந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும். சிம்ம ராசியில் செவ்வாயும் சுக்கிரனும் இணைந்து பயணம் செய்கின்றனர். இந்த கிரகங்களுக்கு குருவின் பார்வையும் கிடைக்கிறது. காதலை தூண்டும் கிரகங்களான செவ்வாய்,சுக்கிரன் கிரகங்களின் கூட்டணியால் சிலருக்கு காதல் மலரும், சில ராசிக்காரர்களின் மனதில் காதல் மணியடிக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சுக்ரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார்.
செவ்வாய் கிரகம் ஆண்மைக்கும், பெண்மைக்கும், உணர்ச்சிக்கும், வீரியத்துக்கும் காரண கர்த்தா. ஆண், பெண் உடலில் காதல் தீயை உண்டாக்குபவர். உடல் உறவில் பலத்தையும், வீரியத்தையும், வேகத்தையும் தருபவர். தற்போது நெருப்பு ராசியான சிம்மத்தில் செவ்வாயும், சுக்கிரனும் இணைந்து சஞ்சரிப்பதால் காதல் நெருப்பு யாருக்கு பற்றிக்கொள்ளும் என்று பார்க்கலாம்.

மேஷம்
உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு 5வது இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளார். எதிர்ப்புகள் வலுக்கும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் நலனில் பிரச்சினை வரலாம் கவனம் தேவை. அதே நேரத்தில் சுக்கிரன் கூடவே இணைந்துள்ளதால் பணவரவு அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இது ஏற்ற கால கட்டமாகும்.

ரிஷபம்
உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். எதிர் பாலினருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வரை போகலாம். வாயைக் கட்டுவது நல்லது. திருமண வாழ்க்கையில் ஊடல் வரலாம் அதே நேத்தில் ஊடலுக்குப் பிறகு சந்தோஷ சம்பவங்கள் அரங்கேறும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். சுகமான நாட்களாக அமையப்போகிறது.

மிதுனம்
உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் உடன் இணைந்துள்ளார். உங்களின் உடல் நலம் மேம்படும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து உள்ளார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை.

கடகம்
உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் பயணம் செய்கிறார். வாக்கு ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் உஷ்ணமான பேச்சை ஏற்படுத்துவதார். குடும்ப செவ்வாயினால் சில குழப்பங்கள் வரும் கணவன் மனைவிக்குள் மோதல் மூளும் வாய்ப்புகள் உள்ளன. தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கை கூடி வரும்.

சிம்மம்
செவ்வாய் உங்கள் ராசியில் நுழைந்திருக்கிறார். கோபம் அதிகரிக்கும். உங்களுக்கு ராஜயோகம் வரப்போகிறது. ஏழாம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். சுக்கிரன் கூடவே பயணம் செய்வதால் வருமானம் அதிகரிக்கும். தங்க நகைகள் வாங்கலாம். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு புதிய காதல் மலரும்.

கன்னி
செவ்வாய் உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் அமர்ந்துள்ளார். திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டை வரலாம். மனைவியுடன் வாக்குவாதம் நடைபெற வாய்ப்புள்ளது. பணமழை பொழியப்போகிறது. கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். மருத்துவ செலவுகள், வண்டி வாகனங்களினால் செலவுகள் வரும். உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் செவ்வாயுடன் கூட்டணி அமைத்துள்ளதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையும் கலகலப்பை ஏற்படுத்தும்.

துலாம்
உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் செவ்வாய். நிறைய பலன்களை எதிர்பார்க்கலாம். சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன் பயணத்தால் திருமண வாழ்க்கையில் உற்சாகம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் பண வருமானம் அதிகாிக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் நினைவுகள் உற்சாகத்தைக் கொடுக்கும்.

விருச்சிகம்
உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் ராசிநாதன் செவ்வாய் அமர்ந்துள்ளார். பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்வது ராஜயோகம் வரும் காலம். நல்ல நேரம் வந்து விட்டது. வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்புள்ளது. சுக்கிரன் சஞ்சாரம் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.

தனுசு
உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் செவ்வாய் அமர்ந்துள்ளார். பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்வது நன்மைகள் நடைபெறும் காலமாகும். வேலையில் மாற்றம் ஏற்படலாம். சுக்கிரன் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்வதால் கணவன் மனைவியின் அன்பான செயல்பாடுகள் அதிகரிக்கும். காதலிப்பவர்கள் உற்சாகமாக இருக்கும் காலம் இது. குதூகலமாக அனுபவிக்க தயாராகுங்கள்.

மகரம்
செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். எட்டாம் வீட்டில் செவ்வாய் அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். விபத்துகாரகர் எட்டில் அமர்வதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படும். பணம் வரும் வாய்ப்பு ஏற்படும். எட்டாம் வீட்டில் சுக்கிரன் இணைவதால் மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் திடீர் மருத்துவ செலவுகள் எற்படும்.

கும்பம்
செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சுக்கிரனுடன் இணைந்து பயணம் செய்வார். ஏழாம் பார்வையாக உங்கள் ராசியை செவ்வாயும் சுக்கிரனும் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். திருமண வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் செவ்வாயுடன் சஞ்சரிப்பதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது.

மீனம்
செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் நீங்கள் எதிரிகளை தைரியமாக எதிர்கொண்டு வெல்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். காதலில் வெல்வீர்கள் பாஸ். சட்ட போராட்டங்களில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்படலாம். காதலிப்பவர்கள் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications