Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைகுண்ட ஏகாதசி விரதம் : பட்டினி கிடந்து பெருமாளை வணங்கினால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

காயத்ரியை மிஞ்சிய மந்திரமில்லை; மாதாவை மிஞ்சிய தெய்வமில்லை; ஏகாதசியை மிஞ்சிய விரதமில்லை என்ற வாக்கியமே வைகுண்ட ஏகாதசி விரதத்தின் பெருமையை எடுத்துக்கூறுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரதங்களில் உயர்வானது வைகுண்ட ஏகாதசி விரதம். மார்கழி மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி திதியில் அனுஷ்டிக்கப்படும் ஏகாதசி விரதமே வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி வழிபாட்டினால் தீராத நோய்கள் தீரும், சகல செல்வங்களும் பெருகும். பகைவர்கள் பயம் ஒழியும் என்பது நம்பிக்கை

இந்த பிறவியே போதும் இனி ஒரு பிறவி வேண்டாம் இறைவனின் பாதங்களில் சரணடைந்து விடுவோம் என்ற எண்ணம்தான் பலருக்கும் வருகிறது. அவ்வாறு சொர்க்கத்திற்கு போக நினைப்பவர்கள் வைகுண்டத்திற்கு செல்வதா கைலாயத்திற்கு செல்வதா என்ற குழப்பத்திலும் இருப்பவர்கள். சைவர்கள் சிவன் வசிக்கும் கைலாயத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள்.

விஷ்ணுவை வணங்குபவர்கள் வைகுண்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விருப்பத்தை சொல்வார்கள். அத்தகைய பெருமை மிகு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நாளை பெருமாள் ஆலயங்களில் நடைபெற உள்ளது.
வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்களை பிறப்பிறப்பில்லாத பேரின்ப நிலைக்குக் கொண்டு செல்லக்கூடியது.

விரதம் எப்போது தொடங்குவது

விரதம் எப்போது தொடங்குவது

மது கைடபர்கள் வேண்டிக்கொண்டபடி, இந்த விரதத்தினை மேற்கொள்ளும் எல்லா அடியவர்களுக்கும் பரந்தாமன் சொர்க்க வாசலை திறந்து வைகுண்ட பதவியை அளிக்கிறார் என்பது ஐதீகம். பரந்தாமனின் திருவடிகளை அடையச் செய்து, நித்திய வைகுண்டவாசத்தை அளிக்கிறது வைகுண்ட ஏகாதசி விரதம். பெருமாளை எண்ணி இந்த விரதம் இருக்க விரும்புபவர்கள், ஏகாதசிக்கு முந்தின நாளான இன்று மாலை தசமியன்று விரதம் தொடங்க வேண்டும்.

பெருமாளின் திருநாமம்

பெருமாளின் திருநாமம்

இன்றைய தினம் ஒரு வேளை சாப்பிடலாம் என்கின்றன ஆன்மிக நூல்கள். அதுவும் அதிக தாளிகை இல்லாத பத்திய உணவாக இருக்க வேண்டும். பகவான் திருநாமங்களை சொல்லிக்கொண்டு நாள் முழுக்க அமைதியான தியானத்தை மேற்கொள்ள வேண்டும். மறுநாள் ஏகாதசி தினத்தன்று, நீராடி, விரதம் தொடங்க வேண்டும்.

துளசி சாப்பிடலாம்

துளசி சாப்பிடலாம்

ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும்.
ஏகாதசி நாளில் துளசியை பறிக்கக் கூடாது என்பதால் முதல் நாளே துளசியை சேகரித்துக்கொள்ள வேண்டும். அன்று முழு நாள் உபவாசம் இருக்க வேண்டும். ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. முதியவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் பழங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

விரதத்தால் என்ன நன்மை

விரதத்தால் என்ன நன்மை


பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.
உபவாசம் மட்டுமின்றி ஏகாதசி தினத்தின் இரவு முழுக்கவும் திருமாலின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். ராமாயணம். பாரதம். கீதை போன்றவைகளைப் படிக்கலாம். உபன்யாசம், திருமால் நாமாவளிகளை கேட்கவும் செய்யலாம். ஏகாதசி அன்று இரவில் விஷ்ணு கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு இறைவனை வழிபட வேண்டும்.

கண் விழிப்பதன் நோக்கம்

கண் விழிப்பதன் நோக்கம்

வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறப்படுகிறது. சொர்க்க வாசலைக் கடந்து பெருமாளோடு பரமபதத்தினை அடைவது சிறப்பானது. இரவு முழுக்க கண்விழித்து இறை சிந்தனையோடு இருக்க வேண்டும் என்பதே வைகுண்ட ஏகாதசி விரதத்தின் நோக்கம். இந்த நாளில் முழுக்க முழுக்க தூங்கவே கூடாது என்பது முக்கிய விதி.

21 வித காய்கறிகள்

21 வித காய்கறிகள்

ஏகாதசி விரதம் முடிந்த மறுநாள், துவாதசியன்று காலையில் நீராடி திருமண் இட்டு, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். இன்று எடுத்துக்கொள்ளும் விரதம் 'பாரணை' எனப்படுகிறது. பாரணை என்றால் விரதத்தினை முடிக்கும் முறை எனலாம். இந்த நாளில் காலையிலேயே 21வித காய்கறிகள் இடம் பெற்ற உணவைச் சமைத்து சாப்பிட வேண்டும்.

என்னென்ன சாப்பிடலாம்

என்னென்ன சாப்பிடலாம்

வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். பரங்கிக்காய், அகத்திக்கீரை, நெல்லிக்காய் இந்த நாளில் அவசியம் சேர்க்க வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை சமைத்து குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.

வளம் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்

வளம் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்


துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது. பெருமைமிக்க இந்த வைகுண்ட ஏகாதசி விரதத்தினை முப்பத்து முக்கோடி தேவர்களும் ஏற்பதாக ஐதீகம். இதனாலேயே இந்நாளுக்கு 'வைகுண்ட முக்கோடி ஏகாதசி' எனவும் பெயருண்டு. வைகுண்ட ஏகாதசி நாளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லா வளங்களும் நலன்களும் கிடைக்கும். நோய் தொற்றில் இருந்து காத்துக்கொண்ட இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து இறைவனை வழிபடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+