அரசு வேலையை அள்ளி தரும் ராகுவும் கேதுவும்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: அரசு வேலை வாய்ப்புகள் இன்று ஏராளமாக உள்ளது. தினசரி பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்கள் இதற்க்கு சாட்சி. மத்திய அரசு வேலை வாய்ப்புகள், மாநில அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் வங்கி பணிக்கு என்று ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள்.

ஒருவர் பிறவி ஜாதகத்தில் அரசு வேலைக்கு வகை செய்யும் அமைப்புகளான தசம ஸ்தானம் ஆதித்யன், அங்காரகன், கர்மகாரன்

 Youngsters dreaming for Government Job

தசம ஸ்தானாதிபதி போன்றோர் நல்ல நிலைமையில், பார்வையில், கூட்டணியில், மறைவில் இடம் பெறாது இருந்தால், திறமையும் தகுதியும் இருந்தால், நிச்சயம் அரசாங்க வேலை கிடைக்கும்.

"கழுதை மேய்த்தாலும் கவர்மென்டில் மேய்க்கனும்"

"ஆசையிருக்கு தாசில்தாராக. அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க"

இப்படி அரசாங்க வேலையையும் அதன் மதிப்பையும் கூறும் பழமொழிகள் ஏராளம் உண்டு.

பெண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்க்கும்போதுகூட பல பெற்றோர்கள் எப்படியாவது ஒரு அரசாங்க வேலை செய்பவரை தங்கள் மகளுக்கு மணமுடித்துவிடவேண்டும் என நினைக்கிறார்கள்.

அதற்குக் காரணம், மாதம் பிறந்தால் தொல்லை இல்லாத வருமானமாக சம்பளம் அதோடு ஒரு சிலருக்கு மாதம் பூராவும் கிம்பளம், பாதுகாப்பான வாழ்க்கை, நண்பர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை, சமூகத்திலும் கௌரவம், இப்படி பல லாபங்கள் இருப்பதால்தான் அரசுவேலையைப் பலரும் விரும்புகிறார்கள்.

யாருக்கு அரசாங்க வேலை?

ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால்

அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும்.

சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துரை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள்.

எனவே மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் முழுமையாக அலசி ஆராய்ந்த பிறகே ஒருவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்குமா என்பதைப் பற்றிக் கூற முடியும்.

ராகு கேது அரசு வேலை தருமா?

மேற்கூறிய அமைப்புகள் இல்லாமல் இருந்தாலும் சிலர் அரசாங்க வேலையில் இருப்பதை காணமுடிகிறது. கும்பத்தில் கேது இருப்பவர்கள் அரசாங்க வேலையில் இருப்பதாக கூறியதை தொடர்ந்து இந்த சிந்தனை உதித்தது.

அரசாங்க உத்யோகத்திற்க்கும் ராகு/கேதுவிற்க்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று என்னை கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். சூரியன்/சனி செவ்வாய்/சனி தொடர்புகள்தான் அரசு உத்யோகத்தை தரும். பிறகு கும்பத்தில் கேது இருப்பவர்களுக்கு எப்படி அரசு உத்யோகம் சாத்தியமாகிறது?

கும்பத்தில் கேது நிற்பது சனியின் வீடு. அப்படியென்றால் ராகு சூரியனின் வீட்டில் நிற்பாரல்லவா?

கும்பத்திலும் சிம்மத்திலும் சனி/ சூரியன் ஆட்சி பெறாவிட்டாலும் சனிக்கும் சூரியனுக்கும் ஸர்ப கிரகங்கள் சம சப்தம பார்வையால் ஒரு தொடர்பை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

வீடில்லாத ராகுவும் கேதுவும் எப்படி செயல்படுவார்கள்?

விதி 1: தான் இருக்கும் வீட்டின் அதிபதிகளை போல் செயல் படுவார்கள்.

முதல் விதிப்படி சனி சூரிய தொடர்புகள் உறுதியாகிறதல்லவா?

விதி 2:

ராகு சனியை போலவும் கேது செவ்வாயை போலவும் செயல்படுவார்கள் என ஒரு விதி இருக்கிறதல்லவா? சனி செவ்வாய் தொடர்புகளும் அரசு வேலைதானே?

இதில் சம சப்தம பார்வை பலம் உத்தம பலம் என்றும் மற்றவை மத்திம பலம் என்றும் கொள்ளலாம்.

இதே விதிப்படி சந்திரன் சனி சேர்க்கையால் அரசியல் உயர்பதவிகள் சந்திரன் சனி ஆட்சி பெறாவிட்டாலும் மகர/கடக ராகு கேதுக்கள் அரசியலில் உயர்வையும் புகழையும் தந்துவிடுவார்கள்.

இதேவிதிப்படி அரசியல் உச்சத்தையும் ஜன வசியத்தையும் தரும் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை துலா ராகு மேஷ கேது செய்து விடுவார்கள்.

இதே விதிப்படி செவ்வாய்/சுக்ரன் சேர்க்கையால் ஏற்படும் மருத்துவம் சார்ந்த பதவி மற்றும் வருமானத்தை ரிஷப ராகு/விருச்சிக கேது செய்து விடுகிறார்கள்.

இதே விதிப்படி நிதி, சட்டம், தகவல் தொடர்பு ஆசிரிய பதவி நீதித்துறையில் நிபுனத்துவம் ஆன்மீக உச்சம், ஜோதிடத்தில் புகழ்

ஆகியவற்றை தரும் குரு புதன் சேர்க்கை தனுர/மீனம் மற்றும் மிதுன/ கன்னி யில் இருக்கும் ராகு மற்றும் கேது தந்துவிடுவார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Everybody wants Government Job. Because once you got government job then need not worry, you are secured for the whole life, besides this there are several other benefit of Government job. After love & marriage related questions, the people frequently asked the job related questions especially government job.
Please Wait while comments are loading...