புரட்டாசியில ஆடு, கோழி எல்லாம் வீதியில துள்ளி விளையாடும்...மக்கள் அசைவம் தவிர்க்க என்ன காரணம்?
புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விடும் மக்கள் விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு அறிவியல் பூர்வமான உண்மைகளும் நம்பிக்கைகளும் இருக்கின்றன.
சென்னை: புரட்டாசி மாதம் பிறக்கப் போகிறது. இந்த மாதத்தில் ஆடு கோழிகள் மீன்கள் எல்லாம் வீதிகளில் துள்ளி விளையாடும் மீம்ஸ் களைகட்டும். அசைவம் விற்பனை செய்யும் கடைகளில் காற்றாடும். காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். புண்ணியம் நிறைந்த புரட்டாசியில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவை தவிர்த்து விட்டு சைவ உணவை மட்டுமே சாப்பிடுவார்கள். இதற்கு ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சில காரணங்களை கூறுகின்றனர்.
ஜோதிடத்தில் 6வது ராசி கன்னி. கன்னியா ராசியின் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குறிய கிரகம் ஆதாலல் அசைவம் சாப்பிடக்கூடாது. புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது.
புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை பிறக்கப்போகிறது. புரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்றும் புதனைக் கூறுவார்கள். செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர், புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. பெருமாளுக்கும் சைவ உணவுதான். புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும். அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது.

ஆடு கோழி மீன்
வார விடுமுறை நாட்களில் மட்டுமே அசைவ உணவு சாப்பிட்டு வந்த மக்கள் தற்போது தினசரியும் அசைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டனர். கறி, மீன் விற்பனை கடைகளில் தினசரியும் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த அசைவ உணவு விற்பனை செய்யும் கடைகளுக்கு சனி, ஞாயிறு லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மக்கள் முதல்நாளே கறி எடுத்து வந்து சமைத்து சாப்பிட ஆரம்பித்தனர். அசைவ உணவுப்பிரியர்களும் ஆண்டுக்கு சில மாதங்கள் சைவப்பிரியர்களாக மாறுவதும் உண்டு. புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் உள்ளனர். புரட்டாசியில் அசைவம் தவிர்ப்பது ஆன்மீக விசயம் மட்டுமல்ல அறிவியல் ரீதியான காரணமும் உள்ளது.

விரதம் பலன்கள்
ஏகாதசி விரதம், புரட்டாசி விரதம், சனிக்கிழமை விரதம் என பல தினங்களுக்கு முன்னோர்கள் காரணம் இல்லாமல் விரதம் இருந்ததில்லை. எதற்கும் ஒரு காரணம் காரியம் உண்டு. புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போய் துளசி தீர்த்தம் குடிக்கச் சொல்வார்கள். இதற்கு ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் நன்மை தரும் பல காரணங்கள் உள்ளன.

சூரியன் சஞ்சாரம்
மேஷம் ராசியில் உச்சம் பெறும் சூரியன் துலாம் ராசியில் நீசமடைகிறார். கன்னி ராசியில் இருக்கும் சூரியன் படிப்படியாக தனது வலிமையை இழக்கத் தொடங்குவார். சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படும். எனவேதான் சாத்வீகமான உணவுகளை சாப்பிட வேண்டும். அசைவ உணவு சாப்பிட்டால் நமக்கு செரிமானக்குறைவும், வயிறு பிரச்சினைகளும் ஏற்படும் கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்க்க வேண்டும் என்றும் உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி நீரை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.

ஆலயங்களில் பண்டிகை
புரட்டாசியில் மழை அதிகம் பெய்யும். பூமி குளிர பெய்யும் மழையால் வெப்பம் குறையும். அதே நேரம் பூச்சிகள், கிருமிகள் அதிகரிக்கத் தொடங்கும். இந்த மாதத்தில் ஆன்மீக விசயங்கள் அதிகம் நடைபெறும். பெருமாள் விரதத்தோடு அம்மனுக்கு உகந்த நவராத்திரி பண்டிகைகளும் கொண்டாடப்படும் மாதம் புரட்டாசி மாதம். பலவகையான சுண்டல்கள் செய்து பிரசாதமாக கொடுத்து மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வார்கள்.

உடல் நலம் பாதிக்கும்
புரட்டாசியில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை கெடுத்துவிடும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கி விட்டு சைவ உணவுகளை சாப்பிட்டு நம் முன்னோர்கள் விரதம் இருந்தனர். அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி தீர்த்தம் தரும் நன்மை
புரட்டாசி மாதம் பெருமாள் கோவிலுக்கு பலரும் செல்வார்கள். பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம் கொடுப்பார்கள். துளசி பெருமாளுக்கு பிடித்தமானது. தெய்வீக மூலிகையாக வணங்கப்படுகிறது. வயிறு தொடர்பான பிரச்சினைகள், சளி தொந்தரவுகளை துளசி கட்டுப்படுத்தும். இதற்காகவே மழை மாதமான புரட்டாசியில் விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர். சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. அதே நேரத்தில் அனைவராலும் அசைவம் தவிர்த்து விட்டு சைவத்திற்கு மாற முடியாது. எனவே சில மாதங்களில் மட்டுமாவது அசைவ உணவுகளைத் தவிர்த்து விட்டு விரதம் இருப்பதன் மூலம் இறைவனின் அருளோடு நோயற்ற வாழ்க்கையும் வாழலாம்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications