கனவில் வந்த சிவன்... சித்ரா பவுர்ணமியில் கண்டிப்பாக ஜீவ சமாதி அடைவேன் - இருளப்பசாமி உறுதி
சித்ரா பௌர்ணமி அன்று கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று உறுதியாக சொல்லி வருகிறார் இருளப்பசாமி.
சிவகங்கை: கனவில் சிவன் வந்து அழைப்பதாகவும் சித்ரா பௌர்ணமி அன்று கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று உறுதியாக சொல்லி வருகிறார் இருளப்பசாமி. இரண்டு வருடங்கள் கழித்து கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறார் இருளப்ப சாமி.
ஜீவசமாதி அடையப் போகிறேன் என்று ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி பல ஊர் மக்களையும் ஒன்று திரட்டி பரபரப்பை ஏற்படுத்தி விட்டு கடைசியில் இருளப்ப சாமி ஜீவசமாதி அடையவில்லை . கடந்த முறை இப்படி நடந்தது போல் இந்த முறை நடக்காது கண்டிப்பாக ஜீவ சமாதி அடைவேன் என்று கூறி வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் பாசங்கரை பகுதியைச் சேர்ந்தவர் இருளப்பசாமி . சிறுவயதிலிருந்தே இவர் சிவன் மீது பற்று கொண்டவராக இருந்திருக்கிறார். சிவன் மீது உள்ள பற்றினால் தன்னை சாமியாராக அறிவித்துக் கொண்டு சிவபூஜை செய்து வந்துள்ளார்.

கனவில் வந்த சிவன்
வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார். அப்போது கனவில் வந்த சிவன், உன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள் என்று சொன்னதாக இருளப்பசாமி தெரிவித்திருக்கிறார்.

போஸ்டர் ஒட்டிய சித்தர்
இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி அன்று அதிகாலை 12 மணி முதல் 5 மணிக்குள் இருளப்பசாமி ஜீவசமாதி அடையப் போவதாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டினர். இதனால் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் கட்டப்பட்டன. பெரிய குழி தோண்டப்பட்டது. தீபாராதனை எல்லாம் இருளப்பசாமிக்கு காட்டப்பட்டது.

கைது செய்த போலீஸ்
அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனும் நேரில் சென்று இருளப்பசாமியிடம் ஆசி பெற்றார். கடைசியில் இருளப்பசாமி ஜீவசமாதி அடையவில்லை. இதனால் அங்கிருந்த ஆயிரக்கணக்கானோர் திரும்பிச் சென்றனர். இதனையடுத்து இருளப்பசாமியின் மகன் உட்பட அவரின் ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சித்ரா பவுர்ணமியில் ஜீவ சமாதி
இரண்டு வருடங்கள் கழித்து தற்போது வரும் சித்ரா பவுர்ணமி அன்று கண்டிப்பாக ஜீவசமாதி அடைந்து விடுவேன் என்று மீண்டும் பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கிறார் இருளப்பசாமி. தான் ஜீவசமாதி அடைந்த பின்னர் முற்றிலும் கொரோனா நீங்கும் என்றும், தான் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் வந்து வேண்டிக் கொண்டால் நினைத்தது நிறைவேறும், குழந்தை பாக்கியம், உடல் சுகம் கிடைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். சித்தர் இருளப்பசாமி.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications