For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் ஜெயிக்க வாய்ப்பில்லையாம் ராஜா - பிரபல ஜோதிடர் கணிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராக வாய்ப்பு இல்லை என்றே ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக உள்ள ட்ரம்ப் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக வாய்ப்பு இல்லை என்று பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ராகு கேது பெயர்ச்சி ட்ரம்பிற்கு சாதகமாகவே இல்லை என்பதோடு அடுத்த மூன்று மாதங்கள் கடினமானதாக இருக்கும் என்றே கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த அதிபராக பதவி ஏற்கப்போவது யார் என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது. தற்போது அதிபராக உள்ள ட்ரம்ப் மீண்டும் ஆட்சியமைப்பாரா? அல்லது அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அதிபராவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ட்ரம்ப் ஜோ பிடன் இடையேயான தேர்தல் பிரச்சாரம் சாதனைகள், வாக்குறுதிகள், வேலை வாய்ப்பு, தீவிரவாத ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி பற்றியதாக இருந்தாலும் இந்த தேர்தலில் கொரோனா வைரஸ் அதிபரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாக உள்ளது. ட்ரம்ப் ஜாதகப்படி அவர் எப்படி அமெரிக்க அதிபரானார் இரண்டாவது முறையாக அதிபராக வெற்றி பெற்று வெள்ளை மாளிகையில் மீண்டும் வலம் வர வாய்ப்பு உள்ளதா என்று பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ளனர் பார்க்கலாம்

அமெரிக்கா அதிபர் தேர்தல்.. டொனால்ட் டிரம்ப் வெல்வார் என நம்புவது தலிபான்கள்!அமெரிக்கா அதிபர் தேர்தல்.. டொனால்ட் டிரம்ப் வெல்வார் என நம்புவது தலிபான்கள்!

சந்திர கிரகண நாளில் பிறந்த ட்ரம்ப்

சந்திர கிரகண நாளில் பிறந்த ட்ரம்ப்

பொதுவாகவே நம் ஊர் பக்கம் கிரகணத்தில் குழந்தை பிறந்தால் தோஷம் என்று சொல்வார்கள். அமெரிக்க அதிபராக உள்ள டொனால்ட் ட்ரம்ப் 1948 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி ஒரு முழு சந்திரகிரகண நாளில் அதாவது ப்ளட் மூன் என்று சொல்லக்கூடிய நாளில் பிறந்தவர். மிதுனம் ராசியில் சூரியன் இருக்க தனுசு ராசியில் சந்திரன் இருக்க பவுர்ணமி ராசியில் பிறந்தவர் ட்ரம்ப்.

பிசினஸ்மேன் டூ அமெரிக்க அதிபர்

பிசினஸ்மேன் டூ அமெரிக்க அதிபர்

1996ஆம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை மிஸ் யுனிவர்ஸ், மிஸ் அமெரிக்கா, மிஸ்டீன் அமெரிக்கா உள்ளிட்ட அழகிகளை தேர்வு செய்யும் போட்டிகளை நடத்தி வந்தவர் ட்ரம்ப். 162 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட குடியரசுக் கட்சி சார்பில் அரசியல் அனுபவமே முற்றிலும் இல்லாத ட்ரம்ப் கடந்த தேர்தலில் அதிபர் வேட்பாளாராக நிறுத்தப்பட்டார்.

குடியரசுக்கட்சி வேட்பாளர்

குடியரசுக்கட்சி வேட்பாளர்

அதிபர் தேர்தலில் நிற்பவர்களை கிண்டல் செய்து வந்த டிரம்ப், கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கினார். ஜெப்புஷ் உள்ளிட்ட 17 வேட்பாளர்களைக் தோற்கடித்து கடந்த முறை நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைப்படி அதிபர் வேட்பாளராக டிரம்ப் தேர்வானார்.

நெருக்கடியான கால கட்டம்

நெருக்கடியான கால கட்டம்

இவருக்கு எதிராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கடுமையாகப் பிரசாரம் செய்தும் அதை டிரம்ப் முறியடித்தார். கடந்த காலங்களில் பல பெண்கள் ட்ரம்ப் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகளை கூறினர். ட்ரம்ப் போட்டியில் இருந்து விலகிவிடுவார் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், அனைத்துக்கும் அசைந்து கொடுக்காமல் உறுதியாக இருந்தார்.

வெற்றி பெற்ற ட்ரம்ப்

வெற்றி பெற்ற ட்ரம்ப்

ஏராளமான கருத்துக்கணிப்புகளிலும் ஹிலாரியே முன்னிலை வகித்து வந்த போதிலும், ட்ரம்ப் அது கண்டு மனம் தளரவில்லை. தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கடைசி வரை கூறிய ட்ரம்ப், தான் கூறியது போல் வெற்றி பெற்று அதிபரானார்.

அமெரிக்காவை சூழ்ந்த பதற்றம்

அமெரிக்காவை சூழ்ந்த பதற்றம்

குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க அதிபராக இருந்த போது பொருளாதார மந்தநிலையும் போர் பதற்றமும் அமெரிக்காவை சூழ்ந்திருக்கிறது. 2001ஆம் ஆண்டு ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரித்த போது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்தார். அவர் அதிபராக இருந்த கால கட்டத்தில்தான் 2001ஆம் செப்டம்பர் 11ஆம் நாள் இரட்டை கோபுரத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது.

ராகு கேது பெயர்ச்சி

ராகு கேது பெயர்ச்சி

18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராகு மிதுனம் ராசியிலும் கேது தனுசு ராசியிலும் சஞ்சரித்த போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது அமெரிக்காவில் 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல லட்சக்கணக்கனோர் வேலையிழந்துள்ளனர். பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.

சோதனையான கால கட்டம்

சோதனையான கால கட்டம்

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க அதிபராக இருந்த போதெல்லாம் அமெரிக்காவில் பொருளாதாரம் சிறப்பாக இருந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிபராக ஆளும் போதெல்லாம் அமெரிக்காவிற்கு சோதனையான காலமாகவே உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல்

ட்ரம்ப் கடந்த 2016ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் பெரிய அளவில் அமெரிக்கவில் பெரிய அளவில் செழிப்பு எதுவும் காணப்படவில்லை. ட்ரம்பின் நான்கு ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. அடுத்த அதிபர் தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நிகழப்போகிறது.

மக்கள் அதிருப்தி

மக்கள் அதிருப்தி

ட்ரம்புக்கு கடந்த ஆண்டு முதலே நேரம் சரியில்லை என்றுதான் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் கண்ணுக்கு தெரியாத எதிரியான கோவிட் 19 உடன் போரிட்டு வருகின்றோம். அமெரிக்கர்கள் பல மில்லியன் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்தநிலையும் ட்ரம்ப் மீதான அதிருப்தியை அமெரிக்கர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

ட்ரம்ப் மீது அதிருப்தி

ட்ரம்ப் மீது அதிருப்தி

கொரோனாவை ட்ரம்ப் கையாண்ட விதம் சரியில்லை என்ற விமர்சனமே மேலோங்கியுள்ளது. கடும் நிதி நெருக்கடி. வேலையின்மை மற்றும் தேங்கி நிற்கும் ஊதியங்கள் போன்றவை ட்ரம்ப் மீதான அதிருப்தியை அதிகரித்து வருகிறது.

கணிப்பு பலித்தது

கணிப்பு பலித்தது

கோவிட் 19 என்ற வைரஸ் உலகத்தை தாக்கும் என்று எந்த ஒரு ஜோதிட பண்டிதர்களும் எச்சரிக்கவில்லை. அதே நேரத்தில் பொருளாதார மந்தநிலைக்கு வாய்ப்பு உள்ளதாக கணித்திருந்தனர். அந்த கணிப்புபடியே இப்போது நடந்து வருகிறது.

சரியில்லாத ட்ரம்ப்

சரியில்லாத ட்ரம்ப்

கொரோனா வைரஸ் பரவல் எச்சரிக்கையை புறந்தள்ளிய ட்ரம்ப் தனக்கு கொரோனா பாதிப்பு வந்த பின்னரே உண்மையை உணர்ந்து கொண்டார். கொரோனா வைரஸ் தாக்குதல் அதனையடுத்து ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை அமெரிக்கர்களை அதிகவே பாதித்துள்ளது. இதுவே ட்ரம்பின் அதிபர் பதவியை முடிவுக்கு கொண்டு வர உள்ளது என்பது ஜோதிடர்களின் கணிப்பாக உள்ளது.

கடினமான காலகட்டம்

கடினமான காலகட்டம்

2020ஆம் ஆண்டு மே, ஜூன், ஜூலை டொனால்ட் ட்ரம்பிற்கும் நாட்டிற்கும் மிகவும் கடினமான மற்றும் சவாலான மாதங்கள். இந்த காலகட்டத்தில் கொரோனா வைரஸ் படுவேகமாக பரவியது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் ஆருத்ரா எனப்படும் திருவாதிரை நட்சத்திரத்தில் ராகு சஞ்சரித்த காலகட்டத்தில் இதுபோன்ற பதற்றமான சூழ்நிலையும் மக்களிடையே நெருக்கடியான கால கட்டமும் நிலவியது. செப்டம்பர் 22ஆம் தேதி ராகு ரிஷபத்திற்கும் கேது விருச்சிகத்திற்கும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளதால் பாதிப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கியது.

வெற்றிக்கு வாய்ப்பில்லை

வெற்றிக்கு வாய்ப்பில்லை

இந்த ராகு கேது பெயர்ச்சியும் டொனால்ட் ட்ரம்பிற்கு சாதகமாக இல்லை, எனவேதான் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனை வரை சென்று மீண்டு வந்திருக்கிறார் ட்ரம்ப். அக்டோபர் மாதம் மட்டுமல்ல, நவம்பர், டிசம்பர் 2020 வரைக்கும் டிரம்பிற்கு சோதனையான கால கட்டம்தான். எனவே வரும் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதே ஜோதிடர்களின் கணிப்பாக உள்ளது.

English summary
The US Presidential Election will not succeed, because Trump’s time is so bad during this period. During this time Donald Trump will do his best to postpone the Presidential Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X