மாணவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும்- கருணாநிதி கோரிக்கை

கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த்தமிழகமே ஒன்றாகத் திரண்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.அந்த வரிசையில் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள், கறுப்புச்சட்டை அணிந்து 8.3.2013 காலை 10.30 மணி அளவில் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே ஒன்று திரண்டு கையில் ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளைச் சித்தரிக்கும் படங்கள் மற்றும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கையிலே ஏந்தி, ஈழத் தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
அவர்கள் அங்கே பேசும்போது, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழக மாணவர்கள் எந்த அளவிற்கு தீவிரம் காட்டினார்களோ, அதே தீவிரத்தை ஈழத் தமிழர் பிரச்சினையிலும் காட்டுவதாக இருக்கிறோம் என்றும், மத்திய அரசு கோரிக்கைக்கு இணங்கி வராவிட்டால், அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள எல்லா கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.லயோலா கல்லூரி மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடர்ச்சியாக, லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் ஈழத் தமிழர் பிரச்சினையை முன்வைத்து 7.3.2013 காலை 10 மணி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்துள்ளது.
ஈழத் தமிழர்களைக் காக்க தாய்த்தமிழகத்திலே உள்ள ஒவ்வொரு இளைஞர்களுடைய உயிரும் முக்கியம் என்பதை உணர்ந்து சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் என்பதை மாற்றிக் கொண்டு வேறு வகை அறப்போராட்டங்களில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது பிரச்சினைக்கு மேலும் ஆக்கத்தைத் தரும் என்பதால், உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஆனால் இந்த கோரிக்கையை உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
-
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ஆர்.கே.நகர் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி.. வாக்குறுதிகளை அள்ளி வீசி களமிறங்கிய தவெக வேட்பாளர்! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
ஸ்டாலின் 6.. கனிமொழி கையில் எடுத்த மேஜிக்.. தேர்தல் போக்கையே மாற்றும் அந்த 6 வாக்குறுதிகள்? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications