Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பால்கார "அண்ணாமலையை" பார்த்திருப்பீங்க.. "அண்ணாத்த" பிரியாணி வித்து பாத்ததில்லையே.. பாப்பீங்க!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரஜினி ரசிகர் ஒருவர் அவரது படங்களின் பெயரில் அண்ணாத்த மெஸ் என்ற ஒன்றை நாளை தொடங்கவுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். தங்கள் பெயருக்கு முன்னால் ரஜினி என்ற அடைமொழியை சேர்ப்பது, தங்களது குழந்தைகளுக்கு ரஜினி என்ற அடைமொழியுடன் பெயர் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்.

ரஜினி என்ற பொதுநலன் கருதும் ஒரு தலைவருக்காக கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்களில் வரும் கேரக்டர்கள் போல் மேக்கப் அணிவது, படங்கள் எப்போது எத்தனை முறை டிவியில் போட்டாலும் அதை மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.

ரஜினி ரசிகர்

ரஜினி ரசிகர்

இந்த நிலையில் இன்னும் சில ரசிகர்கள் தாங்கள் தொடங்கும் தொழிலுக்கு ரஜினியின் பெயரை வைத்து அதனுடன் அவர்களுக்கு பிடித்த அவரது ஸ்டில்லையும் விளம்பர பலகையில் வைத்திருப்பர். அந்த வகையில் ரஜினியின் வெறியர் ஒருவர் நாளை விழுப்புரத்தில் ஹோட்டலை தொடங்குகிறாராம்.

ஹோட்டல் ஜெயராமன்

ஹோட்டல் ஜெயராமன்

அந்த ஹோட்டலை ஜெயராமன் என்பவர் தொடங்குகிறார். அவர் ஏற்கெனவே விழுப்புரத்தில் அண்ணாமலை என்ற பெயரில் ஹோட்டல்களை வைத்திருக்கிறார். இந்த நிலையில் அசைவ உணவு ஹோட்டலை நாளை தொடங்குகிறார். அவரது பெயர் ஜெயராமன் (48). ரஜினியின் தீவிர ரசிகர்.

அண்ணாமலை ஹோட்டல்

அண்ணாமலை ஹோட்டல்


இதனால் தனது ஹோட்டலுக்கு அண்ணாமலை என பெயரிட்டுள்ளார். தற்போது புதிதாக தொடங்கும் மெஸுக்கு அண்ணாத்த மெஸ் என பெயர் வைத்துள்ளார். இந்த ஹோட்டலில் 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை முன் பதிவு செய்வோருக்கு 1 சிக்கன் பிரியாணி வாங்கினால் 1 சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படவுள்ளது.

ஹோட்டல் தொழில்

ஹோட்டல் தொழில்

இதுகுறித்து ஜெயராமனின் தம்பி சிவா என்பவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், நாங்கள் 25 ஆண்டுகளாக ஹோட்டலில் தொழில் செய்து வருகிறோம். எனது அண்ணன் தீவிர ரஜினி ரசிகர். விழுப்புரத்தில் எங்களுக்கு சைவ ஹோட்டல்கள் அண்ணாமலை ரெசிடென்சி என்ற பெயரில் 4 கிளைகள் உள்ளன.

அண்ணாத்த ஹோட்டல்

அண்ணாத்த ஹோட்டல்

தற்போது புதிதாக அசைவ ஹோட்டலை தொடங்கலாம் என்பதால் ரஜினியின் திரைப்படத்தின் பெயரில் வைத்துள்ளோம். ஹோட்டல் தொழிலை சேவையாகவே செய்து வருகிறோம். சைவ ஹோட்டலில் கூட முழு உணவு- ரூ 50 க்குத்தான் விற்கிறோம். இட்லி 5 ரூபாய்க்கு கொடுக்கிறோம். எனவே இந்த அசைவ ஹோட்டலிலும் ஏழைகளுக்கு சிறந்த உணவை குறைந்த விலையில் கொடுப்போம். ரஜினி என்றாலே எளிமைதானே. அதனால் எளியவர்களும் நல்ல உணவை குறைந்த விலையில் உண்ண நாங்கள் வழிவகை செய்கிறோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+