நாய் வீடியோவோடு ‘ரம்ஜான் வாழ்த்து’ சொன்ன மலேசியப்பெண் கைது
கோலாலம்பூர்: மலேசியாவில் நாய்களைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வது போன்ற காட்சிகளுடன் கூடிய ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்த வாரம் இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப் பட உள்ளது. இந்நிலையில் மக்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்ந்த்துக்கள் தெரிவித்து அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், வாழ்த்து தெரிவிக்கப் போய் வம்பில் மாட்டிக் கொண்ட பெண்ணைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ரம்ஜான் வாழ்த்து...
மலேசியாவில் நாய்களை பழக்கும் பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார் 38 வயதாம மஸ்னா யூசப். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர், சமீபத்தில் தன் நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து ஒரு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டார்.

நாய்களைப் பேணும் காட்சிகள்...
அதில், மஸ்னா நாய்களை குளிப்பாட்டுவது, அவற்றுக்கு உணவு போடுவது போன்ற காட்சிகளின் பின்னணியில் தொழுகைக்காகன பாங்கோசை ஒலிக்க ரம்ஜான் வாழ்த்துகள் என காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

அசுத்தமான விலங்கு...
இஸ்லாமிய முறைப் படி நாய்கள் அசுத்தப் பிராணிகள். அவற்றைத் தொடுவதும் அசுத்தமாகவே கருதப் படுகிறது. இந்நிலையில் 60%க்கும் அதிகமான இஸ்லாமியர்கள வாழும் மலேசியாவில் ஒரு பெண் இத்தகைய வீடியோவை வெளியிட்டது பரபரப்பைக் கிளப்பியது.

சிறை நிச்சயம்...
மதத்தின் அடிப்படை நம்பிக்கைக்கு ஊறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அப்பெண் கைது செய்யப் பட்டுள்ளார். அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப் படலாம், எனத் தெரிகிறது.

மதத்தை நேசிக்கிறேன்...
இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் மஸ்னா. அதில், ‘நான் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் அந்த வீடியோவை வெளியிடவில்லை. நான் என் மதத்தை நேசிக்கிறேன். தூய்மையின் முக்கியத்துவத்தை என் மதம் எனக்கு போதித்துள்ளது. நாய்களை வளர்ப்பதையோ, பராமரிப்பதையோ இஸ்லாம் தடை செய்யவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications