முதல் தடவை தண்ணீர் பெற்று தந்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நடப்பதே வேறு: எச்சரிக்கும் துரைமுருகன்
காவிரி மேலாண்மை ஆணையம் முதல் தடவை தண்ணீரை பெற்றுக்கொடுத்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நடப்பதே வேறு என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் முதல் தடவை தண்ணீரை பெற்றுக்கொடுத்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நடப்பதே வேறு என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், அதன் தலைவரான மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களின் சார்பில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள அதிகாரிகள் பங்கேற்றனர்.

பல்வேறு கோரிக்கைகள்
இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. 4 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

சட்டசபையில் அறிவித்த முதல்வர்
இதைத்தொடர்ந்து காவிரியில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் 31 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தெரிவித்தார்.

நடப்பதே வேறு
இதைத்தொடர்ந்து தலைமை செயலக வளாகத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை ஆணையம் முதல் தடவை தண்ணீரை பெற்றுக்கொடுத்துவிட்டு பின்னர் கைவீசி நடந்தால் நியாயமல்ல, நடப்பது வேறு என அவர் கூறினார்.

வாழ்த்துவோம்
இதேபோல் ஆணையம் நடந்து தமிழகத்துக்கு நீரை பெற்று தந்தால் மகிழ்ச்சியடைவோம், காவிரி மேலாண்மை ஆணையம் ஒவ்வொரு மாதத்திற்குரிய தண்ணீரை முறையாக பெற்றுத் தந்தால் வாழ்த்துவோம் என்றும் அவர் கூறினார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications