திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சிக்கு தலா ஒரு தொகுதி
சென்னை: திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கும், முருகவேல் ராஜனின் மக்கள் விடுதலை கட்சிக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரு கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளன.
Recommended Video

திமுக கூட்டணியில் ஏறத்தாழ அனைத்து கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
முக்குலத்தோர் புலிப்படை, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட சிறு கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வேல்முருகன் பேட்டி
எனவே இந்தக் கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கப்படுவதாக தெரிகிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று காலை அளித்த பேட்டியின்போது, இந்த கூட்டணியை உறுதி செய்தார்.

உதய சூரியன் சின்னம்
தமிழக வாழ்வுரிமை கட்சி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும், இன்று மாலை தொகுதி உடன்பாடு நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டு
மத்தியில் ஆளும் பாஜக அரசு, தமிழக அரசோடு சேர்ந்து கொண்டு மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும், எனவே, அதை வீழ்த்த திமுக கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக கூட்டணி
இதனிடையே இன்று மாலை திமுக-தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே, தொகுதி பங்கீடு உறுதியானது. திமுக கூட்டணியில் அக்கட்சி 1 தொகுதியில் போட்டியிடுகிறது. முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுகவுக்கு தலால 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக. இதில், மதிமுக, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடப்போவது குறிப்பிடத்தக்கது.

உதயசூரியன்
திமுக கூட்டணியில் மக்கள் விடுதலை கட்சியும் இடம்பெற்றுள்ளது. இதன் தலைவர் முருகவேல் ராஜன். இந்த கட்சிக்கும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
170 திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக.. லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை!











Click it and Unblock the Notifications