
"இந்தியாவை காக்க மன்மோகன் சிங் தான் தேவை!" ரிஷி சுனக் சொன்னதாக பரவும் தகவல் உண்மையா? நடந்தது என்ன
டெல்லி: பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றது முதலே அவர் குறித்து பல்வேறு தகவல்கள் இணையதளங்களில் உலா வரத் தொடங்கி உள்ளன.
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார். 42 வயதில் இந்த பதவிக்கு அவர் வந்துள்ளதன் மூலம் மிகக் குறுகிய வயதில் பிரதமர் பதவிக்கு வந்தவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.
மேலும், இந்து ஒருவர் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு வருவதும் இதுவே முதல்முறையாகும். இதற்காகப் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
“ஹலோ” ரிஷி.. நான் மோடி.. இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு பறந்த போன் - என்ன பேசி இருக்காங்க தெரியுமா?

ரிஷி சுனக்
பொதுவாகத் தேர்தல் முடிந்த பின்னர் ஒருவர் புதிதாகப் பதவியேற்றால் அவருக்குத் தன்னை நிரூபிக்க சில மாதங்கள் கிடைக்கும். அந்த காலகட்டத்தில் எதிர்க்கட்சியினர் யாரும் அவர்களுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க மாட்டார்கள். ஆனால், பிரிட்டன் பொருளாதாரம் இப்போது ஏற்கனவே இக்கட்டான சூழலில் உள்ள நிலையில், கொஞ்சக் காலத்தில் நிலைமையைச் சீராக்க வேண்டிய பெரும் பொறுப்பு ரிஷி சுனக்கிடம் உள்ளது.

பொய் தகவல்கள்
இதற்கான நடவடிக்கைகளை அவர் சத்தமின்றி எடுத்து வருகிறார். குறிப்பாக டாப் அமைச்சர்களை ராஜினாமா செய்துவிட்டு, தனக்கு ஏற்ற நபர்களை அமைச்சராக நியமித்து வருகிறார். மிக விரைவில் பிரிட்டன் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை தொடங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மறுபுறம் பிரிட்டனின் புதிய பிரதமர் ரிஷி சுனக் குறித்த போலி தகவல்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

கோயில் விசிட்
அவர் பிரதமராகப் பதவியேற்றது முதலே இதுபோன்ற தகவல்கள் பரவி வருகின்றன. சார்லஸ் ரிஷி சுனக்கை பிரதமராக நியமித்த உடன், அவர் அங்குள்ள இஸ்கான் கோயிலுக்குச் சென்றதாகக் கூறப்பட்டது. அவர் இஸ்கான் கோயிலுக்குச் சென்றது உண்மை தான் என்றாலும் அது பழைய வீடியோ. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த விஷயத்தை புதியது போலப் பரப்பப்பட்டது. இப்போது மற்றொரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கி உள்ளது.

பரவிய கார்ட்
முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அவர் கூறியதை போலப் பிரபல இந்தி ஊடகம் வெளியிட்ட கார்ட் போன்ற ஒரு படம் பகிரப்பட்டு வந்தது. அதில் இந்தியாவைச் சரியான திசையில் வழிநடத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சிங் போன்ற பிரதமர் தான் இந்தியாவுக்குத் தேவை என்று ரிஷி சுனக் தெரிவித்ததை போல் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைக் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களிலும் பகிர்ந்து உள்ளனர்.

உண்மை என்ன
இது குறித்து நாம் விசாரித்த போது, அது மாற்றப்பட்ட போலியான படம் என்பது தெரிய வந்துள்ளது. உண்மையில் அந்த கார்டு, ரிஷி சுனக் நியமனம் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறியதை அடிப்படையாக வைத்தே இருந்தது தெரிய வந்துள்ளது. உண்மையான கார்டில் காங்கிரஸ் தலைவர்கள், "சிறுபான்மை மதத்தில் இருந்து இந்தியாவுக்குப் பிரதமர் கிடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று கூறியுள்ளது.

பொய்யான தகவல்
அதற்குப் பதில் கொடுத்துள்ள பாஜக, "ஏற்கனவே இந்தியாவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர், அதாவது மன்மோகன் சிங், பிரதமர் பதவிக்கு வந்துள்ளார் என்று கூறியுள்ளனர். இந்த கார்ட்டை தான் சிலர் மாற்றி இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியாவுக்கு மன்மோகன் சிங் போன்ற ஒருவர் பிரதமராகத் தேவை என்று கூறியதாகப் பொய்யான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியாவின் பொருளாதாரத்தை காக்க மன்மோகன் சிங் போன்ற ஒருவரே பிரதமராக வேண்டும் என்று ரிஷி சுனக் கூறினார்.

Fact Check
வெளியான செய்தி
இந்தியாவின் பொருளாதாரத்தை காக்க மன்மோகன் சிங் போன்ற ஒருவரே பிரதமராக வேண்டும் என்று ரிஷி சுனக் கூறியனார்.
முடிவு
ரிஷி சுனக் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து எந்தவொரு கருத்தையும் இதுவரை கூறவில்லை. அது போலியான கார்ட்