தங்கத்தை நம்பாதீங்க.. சடசடனு சரியுதுனு வாங்கிக் குவிக்க வேண்டாம்! பொருளாதார புலிகள் கொடுத்த அலர்ட்!
சென்னை: உலகளாவிய பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயருமென்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதற்கு மாறாக இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே தங்கம், வெள்ளி விலைகள் கணிசமாக சரிந்தது முதலீட்டாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கத்தின் விலை ரூ.3,400 வரையிலும், வெள்ளி விலை ரூ.11,000 வரையும் சரிந்துள்ள நிலையில், அவற்றில் முதலீடு செய்ய இது சரியான நேரமா? என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது.
இந்தியாவில் பொருட்கள் வர்த்தகம் நடைபெறும் Multi Commodity Exchange of India (MCX) சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் திங்கள்கிழமை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தன. வர்த்தக நேரத்தில் தங்கம் 10 கிராமுக்கு சுமார் ரூ.1,55,000 என்ற அளவில் இருந்தது.
இது முந்தைய நாளை விட ரூ.3,466 அல்லது 2.19% குறைவாகும். அதேபோல் வெள்ளி கிலோவுக்கு சுமார் ரூ.2,47,348 ஆக வர்த்தகம் செய்யப்பட்டு ரூ.11,434 அல்லது 4.41% வரை சரிந்தது. சந்தை தரவுகளின்படி, இந்த வார வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டுமே குறைந்த விலையிலேயே துவங்கி தொடர்ந்து அழுத்தத்தில் இருந்தன.

தங்கம் விலை சரிவு
பொதுவாக உலக அரசியல் பதற்றங்கள் அல்லது போர் சூழ்நிலை ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளாக கருதப்படும் தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். ஆனால் இந்த முறை அந்த பாரம்பரிய நிலைமை மாறுபட்டுள்ளது. தற்போதைய விலை சரிவுக்கு உலகளாவிய பொருளாதார காரணிகளே முக்கிய காரணம் என்கிறார் பொருளாதார ஆலோசகரான கவுரவ் கார்க்.
இந்திய சந்தை
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "இந்திய சந்தையில் தங்கம் 10 கிராமுக்கு சுமார் ரூ.1,48,614 அளவிலும், வெள்ளி கிலோவுக்கு ரூ.2,35,573 அளவிலும் வர்த்தகம் செய்யப்பட்டது. இது சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸுக்கு 5003.95 டாலர் மற்றும் வெள்ளி 79.32 டாலர் என்ற விலைகளை பிரதிபலிக்கிறது," என்று அவர் கூறினார்.
எம்சிஎக்ஸ் தங்கம்
மேலும் தங்கம், வெள்ளி விலை சரிவுக்கு முக்கிய காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வை அவர் சுட்டிக்காட்டினார். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரை கடந்ததால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. இதனால் அமெரிக்க மத்திய வங்கியான Federal Reserve வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு குறையலாம் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் உருவாகியுள்ளது.
வெள்ளி விலை வீழ்ச்சி
குறிப்பாக வெள்ளி விலையில் கடந்த சில வர்த்தக நாட்களில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 27ஆம் தேதி எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,82,644 என்ற அளவில் இருந்தது. ஆனால் வெறும் 11 வர்த்தக நாட்களில் அது ரூ.31,000க்கும் மேல் குறைந்துள்ளது. இதற்கு முன்பு ஜனவரி 29ஆம் தேதி வெள்ளி கிலோவுக்கு ரூ.4,20,048 என்ற வரலாற்று உச்சத்தை எட்டியிருந்தது. அந்த உச்சத்திலிருந்து தற்போது ரூ.1.69 லட்சத்துக்கும் மேல் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தில் முதலீடு எச்சரிக்கை
உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளும் சந்தை மனநிலையை பாதித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. சந்தை நிபுணர்கள் கூறுவதாவது, இத்தகைய காலங்களில் முதலீட்டாளர்கள் பதற்றத்துடன் முடிவெடுக்கக்கூடாது. பொருட்கள் சந்தையில் குறுகிய கால சரிவுகள் சாதாரணமானவை.
தங்கம் வாங்க சரியான நேரமா?
நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இந்த விலை சரிவு ஒரு வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதற்குப் பதிலாக, சிறிய அளவுகளில் படிப்படியாக முதலீடு செய்வது பாதுகாப்பானது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் கச்சா எண்ணெய் விலை, உலகளாவிய பணவீக்கம், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவுகள் போன்ற காரணிகள் அடுத்த சில வாரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் எனவும் சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
சட்டுபுட்டுனு அள்ளிப் போடுங்க! தங்கத்தை வாங்கி குவிக்கும் ரிசர்வ் வங்கிகள்.. குறுக்கே வந்த மலேசியா! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
Gold Rate Today: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. குறைந்த வேகத்தில் மீண்டும் உயர்வு! மாலையில் அதிர்ச்சி! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி














Click it and Unblock the Notifications