வைரியாத்தா, குப்புசாமி தாத்தா, மறக்க முடியாத தில்லையம்மா.. மலரும் நினைவுகளில் மூழ்கிய கருணாநிதி
சென்னை: என் கிராமத்தில் நான் பார்த்த குளத்தங்கரை ஓரமாக கைகளை முறுக்கிக் கொண்டே நிற்கும் வைத்தியலிங்க மாமா, குள்ள உருவமும், குறுகுறுப்பான நடையும் கொண்ட குப்புசாமித் தாத்தா, பூனை போலக் கூனிக் குறுகி திருக்குவளையில் இரண்டு அவ்வையார்களாக விளங்கிய தில்லையம்மா, வைரியாத்தா, மருத்துவமனையையே மடியில் கட்டிக் கொண்டு திருவாரூர்த் தேர் மாதிரி வரும் காருகுடி வைத்தியர், எங்கள் குடும்பத்திற்கு என்றே தேடி வந்து ஆறுதல் அளிக்கும் ரத்தினப் படையாச்சி என்று பட்டியல் நீளமானது என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
நியூஸ் சைரன் என்ற பெயரில் கருணாநிதி கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
அதில் சுவாரஸ்யமான பல தகவல்களை அவர் பரிமாறிக் கொண்டுள்ளார்.

திமுக- அதிமுக இணைப்பு நடந்திருந்தால்...
கேள்வி - திமுக, அதிமுக இணைப்பு முயற்சி எம்.ஜி.ஆர். காலத்தில் நடந்தது எல்லோருக்கும் தெரியும். அது நடந்திருந்தால்?
பதில்: நடந்து விட்ட நிகழ்வுகள் குறித்து - அவை அப்படி நடந்திருந்தால் அல்லது இப்படி நடந்திருந்தால் - என்று யோசித்துக் கொண்டிருப்பது, முன்னெடுத்துச் செல்லும் முயற்சிகளைத் தாமதப்படுத்திடக் கூடும்!

நினைவலைகளில்...
கேள்வி - தங்களது நீண்ட வாழ்வில் முதன்முதலாக நினைவில் பதிந்த நிகழ்ச்சி எது என்று நினைவலைகளில் தேடிச் சொல்ல முடியுமா?
பதில்:- தந்தை பெரியார் அவர்களையும், பேரறிஞர் அண்ணா அவர்களையும் முதன்முதலாக நான் சந்தித்த நிகழ்ச்சி தான் என் நினைவில் என்றென்றும் நீக்கமற நிறைந்திருக்கும் நிகழ்ச்சியாகும்.

கனிமொழியைப் பார்க்கிற போது...
கேள்வி - நல்ல கவிஞரை அரசியல்வாதி ஆக்கி விட்டோமே என்ற சிந்தனை கனிமொழியை பார்க்கிற போது வந்தது உண்டா?
பதில்: கனிமொழியை கவிஞராகவும் நான் ஆக்கவில்லை; அரசியல் வாதியாகவும் நான் உருவாக்கவில்லை; அவரே கவிஞரானார்; அரசியல்வாதியாகவும் ஆனார்!

எப்படி இப்படி ஒரு நினைவு சக்தி
கேள்வி - உங்களது அபார நினைவு சக்தி எப்படி சாத்தியமாயிற்று?
பதில்: நான் படிக்கும்போதே எனக்கு நல்ல நினைவாற்றல் உண்டு. உதாரணமாக நான் திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, "பனகல் அரசர்" என்ற தலைப்புள்ள புத்தகம் துணைப்பாடக் கட்டுரையாக எங்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 50 பக்கங்கள் இருக்கும். வகுப்பிலேயே நான் ஒருவன் தான் அந்தச் சிறு நூல் முழுவதையும் அப்படியே மனப்பாடம் செய்து சொல்வேன். அந்தப் பனகல் அரசர் என்ற புத்தகம் தான் எனக்கு அரசியல் அரிச்சுவடியாகவும், தந்தை பெரியார் அவர்களின் கொள்கையின்பால் நான் முழுமையாக ஈர்க்கப்படவும் முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது.

சினிமா வசனம்...
கேள்வி - இப்போதுள்ள திரைப்பட வசனங்களைப் பற்றி உங்கள் கருத்து?
பதில்: இப்போதுள்ள திரைப்பட வசனங்கள் சுருக்கமானவை. அந்தக் காலத்தில் நீண்ட வசனங்கள் பேசப்பட்டன. ஆனால் கால ஓட்டத்தில், மக்கள் மனம் போகும் வேகத்தில், விஞ்ஞான யுகத்தில் மக்கள் நீண்ட வசனங் களைக் கேட்டுத் தங்கள் நேரத்தைச் செலவழிக்கத் தயாராக இல்லை. பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளை மட்டும் படித்து விட்டுப் போவதைப் போல, மக்கள் வேகமாக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் தற்போது சுருக்கமான வசனங்கள் தான் வரவேற்கப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால், படப்பிடிப்பு அரங்கத்திற்குள்ளே வந்த பிறகு, அங்கேயே உரையாடல்கள் விவாதிக்கப்பட்டு, பின் முடிவு செய்யப்பட்டுப் பேசப்படுகின்றன.

உங்களை விமர்சித்துத்தான்...
கேள்வி - நினைவு தெரிந்த நாளில் இருந்து உங்களை விமர்சித்துத் தான் தமிழக அரசியலில் சிலர் கால் ஊன்றி இருக்கிறார்கள். அதைப்பற்றி!
பதில்: நான் அதைப் பற்றிப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. என்னை வாயார வாழ்த்தியவர்கள், பிறகு என்னை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அப்படி என்னை விமர்சித்தவர்கள், மீண்டும் என்னை வாழ்த்தியிருக்கிறார்கள். விமர்சிப்பவர்கள் திரும்பவும் என்னை வாழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி
கேள்வி - தங்களது குடும்ப வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த சம்பவம் எது?
பதில்: பல சம்பவங்கள் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் குடும்ப வாழ்வு, அரசியல் வாழ்வு, கலையுலக வாழ்வு என்றெல்லாம் தனித் தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லாம் ஒன்றிணைந்தது தான் என் வாழ்வு. அதில் இன்பம், துன்பம் மாறி மாறி வரும். மிகவும் மகிழ்ச்சியான நேரமும் உண்டு, மிகவும் துயரமான நேரமும் உண்டு.

கிராமத்துப் பெரியவர்கள்
கேள்வி - சிறு வயதில் தங்கள் கிராமத்தில், தங்களைக் கவர்ந்த கிராமத்துப் பெரிய மனிதர்கள் உண்டா? அவர்கள் பற்றி?
பதில்: கிராமத்தில் என்னைக் கவர்ந்த பெரிய மனிதர்கள் - குளத்தங்கரை ஓரமாக கைகளை முறுக்கிக் கொண்டே நிற்கும் வைத்தியலிங்க மாமா, குள்ள உருவமும், குறுகுறுப்பான நடையும் கொண்ட குப்புசாமித் தாத்தா, பூனை போலக் கூனிக் குறுகி திருக்குவளையில் இரண்டு அவ்வையார்களாக விளங்கிய தில்லையம்மா, வைரியாத்தா, மருத்துவ மனையையே மடியில் கட்டிக் கொண்டு திருவாரூர்த் தேர் மாதிரி வரும் காருகுடி வைத்தியர், எங்கள் குடும்பத்திற்கு என்றே தேடி வந்து ஆறுதல் அளிக்கும் ரத்தினப் படையாச்சி என்று இந்தப் பட்டியல் நீளமானது.

ஸ்டாலினுக்கு ஆற்றல் வந்து விட்டதா...
கேள்வி - மு.க. ஸ்டாலின் அரசாங்க நிர்வாகத்தை முழுமையாகக் கவனிக்கும் ஆற்றலை அடைந்து விட்டதாக கருதுகிறீர்களா?
பதில்: நிச்சயமாக! சென்னை மாநகரத் தந்தையாக அவர் பணியாற்றிய போதே அரசாங்க நிர்வாகத்தைக் கவனிக்கத் தொடங்கி விட்டார். அதன் பின்னர் உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதல் அமைச்சராகப் பணியாற்றிய போதே, அரசாங்க நிர்வாகத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு ஈடுபாட்டுடன் கவனிக்கக் கூடிய அளவிற்கு ஆற்றலை அடைந்து விட்டதை அனுபவ ரீதியாக நான் அறிந்திட முடிந்தது.

திருக்குவளையில் பிடித்த இடம்
கேள்வி - திருக்குவளை கிராமத்தில் தங்களுக்குப் பிடித்த இடம் எது?
பதில்: எங்கள் ஊர் அங்காளம்மன் கோயிலை அடுத்து இருந்த என்னை ஆளாக்கி விட்ட அறிவுக்கோயில் - நான் படித்த பள்ளிக் கூடம் - அது தான் திருக்குவளை கிராமத்தில் எனக்குப் பிடித்த இடம்.

மு.க. முத்து இப்படியாகி விட்டாரே...
கேள்வி - சிறந்த பாடகராக - நடிகராக வரவேண்டிய மு.க. முத்து அந்த லட்சியத்தை எட்டாமல் போனது ஏன்?
பதில்: இலட்சியத்தை எட்டாமல் போனதற்குக் காரணம், அலட்சியம் தான்
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்!












Click it and Unblock the Notifications