"தூக்கமில்லா இரவுகள்".. அச்சமூட்டும் பாஜக.. கவனிக்கும் திமுக.. 'அப்பட்டமா சொல்லணுமா..' வெடித்த மணி!
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக வளர்ந்து கொண்டிருப்பதாக பத்திரிகையாளர் மணி கூறுகிறார்
சென்னை: தமிழகத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் வளர்ந்து கொண்டிருக்கிறது, அதை எதிர்க்க திமுக இன்னும் வலுவாக களமிறங்க வேண்டும் என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் பேசிய பேச்சு, மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி விட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில், கட்சிக்காரர்கள் ஏற்படுத்தும் பிரச்னை குறித்து வேதனையுடன் பேசியிருந்தார்.. அத்துடன் தன்னுடைய கட்சிக்கார்களுக்கு முக்கிய அறிவுரையையும் கூறியிருந்தது சரியா? தவறா? என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான மணி, "ஒன் இந்தியா" தமிழுக்கு சிறப்பு பேட்டி தந்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:

லைவ் ரிலே
"பொதுவாக ஒரு கட்சியின் பொதுக்குழு கூட்டம் என்றால், அதை நேரடி ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள்.. கலைஞர் இருக்கும்போதும்சரி, இப்போ ஸ்டாலின் வந்தபிறகும் சரி, லைவ் ரிலே கிடையாது.. எந்த கட்சியும் இதுவரை அப்படி செய்ததும் கிடையாது.. ஒரு கட்சிக்குள் ஆயிரம் உரசல்கள், கருத்து மோதல்கள் வரும்போகும்.. சில சமயம் கைகலப்புகள்கூட நடக்கும்.. இறுதியில் பெரும்பான்மை பலம் கொண்டவர்களின் கருத்து ஏற்கப்படும்.. ஒரு கட்சியின் உள்விவரங்களை பேசுவதுதான் பொதுக்குழு. அதை எதுக்காக நேரடி ஒளிபரப்பு செய்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை..

தூக்கமேயில்லை
அதையெல்லாம் பொதுவெளியில் வெளிப்படுத்த கூடாது என்பது என்னுடைய எண்ணம்.. உட்கட்சியில் என்ன பிரச்சனை நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் பொதுமக்களுக்கு கிடையாது.. எதிர்க்காலத்தில் இதுபோன்ற லைவ் ரிலேவை தவிர்க்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.. 2 முக்கியமான விஷயத்தை முதல்வர் அன்று பேசியுள்ளார்.. "தூக்கமில்லை" என்று உட்கட்சி விஷயத்தை பற்றியும் பேசியிருக்கிறார்.. ஈனத்தனமான காரியம் செய்கிறது பாஜக என்றும் பேசியிருக்கிறார்.

தூக்கமில்லாத இரவுகள்
ஆனால், பாஜக செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு, முன்னால் வந்து நிற்பது திமுகவின் குறைகள்தான்.. "தூக்கமில்லாத இரவுகளை இவர்கள் எனக்குதந்து கொண்டிருக்கிறார்கள்' என்பதுதான் மீடியாவில் பெரிதாக பேசப்பட்டது.. பாஜகவை தாக்கி பேசியது காணாமல் போய்விட்டது.. செல்வாக்கு மிக்க முதல்வர், இதை உணர்ந்து தவிர்க்க வேண்டும்.. கருணாநிதி கூட இப்படியெல்லாம் சொன்னது கூட இல்லை.. ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவில் வலுவான தலைமை இல்லை என்று திமுக ஏன் கவலைப்பட வேண்டும்? காரணம், அந்த இடத்தை பாஜக இட்டு நிரப்பிடும் என்ற கவலை உள்ளது..

கலைஞர்
இந்த தேர்தல் இல்லாவிட்டால் அடுத்த முறையாவது பாஜக, அதிமுகவில் 3-ல் 1 பங்குக்கு வளர்ந்துவிடும் என்ற அச்சம் திமுகவுக்கு இருந்து கொண்டுதான் உள்ளது.. இதுபோலக்கூட, கலைஞர் இருந்திருந்தால் நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார்.. தமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கும் நச்சு சக்தியை ஆர்எஸ்எஸை எதிர்த்து களம்காண செயல்திட்டத்தை திமுக என்ன கையில் வைத்துள்ளது? விசிகதான் களத்துக்கு போய் நிற்கிறது.. அப்படின்னா விசிக தோளில் திமுக பயணம் செய்ய துடிக்கிறதா? மனித சங்கிலியில் திமுகவின் பங்கு என்ன?

கருணாநிதி
இதை பற்றிதானே பொதுக்குழுவில் பேசியிருக்கணும்? பொத்தாம்பொதுவாக, பாஜக ஈனத்தனமான காரியங்களை செய்கிறது என்று சொல்லிவிட்டு போகலாமா? அந்த பொதுக்குழுவிலே பாஜகவை பிரித்து மேய்ந்திருக்க வேண்டாமா? நீங்க ஆட்சிக்கு வந்து நடத்தப்பட்ட முதல் பொதுக்குழுவில் எது பிரதானமான செய்தியாக வெளியே வந்துள்ளது? உங்க பிரதான எதிரி யார்? தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ், பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது.. இனிமேல் அவர்கள் பெயரை உச்சரிக்கவே மாட்டேன் என்றெல்லாம் சொல்லமுடியாது... பெயரை உச்சரித்தால் அவர்களுக்கு முக்கியத்துவம் தருவது போல் ஆகிவிடும் என்று சொல்வதெல்லாம் இனியும் ஏற்க முடியாது..

நால்முனை தாக்குதல்
ஆர்எஸ்எஸ், பாஜகவின் வளர்ச்சியை தடுக்க முடியாது.. நவம்பர் 6ம் தேதி ஊர்வலத்தில் மிகப்பெரிய நிகழ்வாக அதை நடத்திக் காட்டுவார்கள் பாருங்கள்.. கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் நல்ல தலைவர்தான்.. இவ்வளவுதூரம் கட்சியை காப்பாற்றிக்கொண்டு, அரசையும் கவனித்து கொண்டு, நாலாபக்கமும் வரும் நெருக்கடிகளை சமாளித்து கொண்டிருப்பதை மறுக்கவில்லை.. ஆனால், பாஜகவை கடுமையாக இன்னும் எதிர்க்க வேண்டும்.. வலுவாக எதிர்க்காவிட்டால் சிக்கல்தான்" என்றார்.
-
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்?












Click it and Unblock the Notifications