For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகக் கோடீஸ்வரிகளில் இந்தியாவுக்கு 3வது இடம்!

Google Oneindia Tamil News

லண்டன்: ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் கூட இந்தியாவுக்கு ஒரு புதுப் பெருமை மறுபக்கம் கிடைத்துள்ளது. அதாவது ஆசியாவிலேயே பெரும் கோடீஸ்வரப் பெண்கள் அதிகம் இருக்கும் 3வது நாடு இந்தியாதானாம்.

இவர்கள் தனி நபர்கள் ஆவர். மொத்தம் 1250 பெண் பணக்காரப் பெண்கள் இந்தியாவில் இருக்கின்றனராம்.

உலகளவில் இது 16 சதவீதமாகும். இவர்களின் சொத்து மதிப்பு மொத்தம் தோராயமாக 6 லட்சம் கோடியாகும்.

குறைந்தது ரூ. 191 கோடி

குறைந்தது ரூ. 191 கோடி

இந்தப் பெண்களின் குறைந்தபட்ச சொத்து மதிப்பே ரூ. 191 கோடியாகும்.

பிரிக்ஸ் நாடுகளில் நாம்தான் முதலிடம்

பிரிக்ஸ் நாடுகளில் நாம்தான் முதலிடம்

பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் இந்தியாவில்தான் கோடீஸ்வரப் பெண்களின் உயர்வு அதிகம் இருக்கிறதாம்.

ஒரு வருடத்தில் 120 பேர் உயர்வு

ஒரு வருடத்தில் 120 பேர் உயர்வு

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 120 பெரும் கோடீஸ்வரப் பெண்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளனராம்.

பாகிஸ்தானில் 415 பேர்

பாகிஸ்தானில் 415 பேர்

அண்டை நாடான பாகிஸ்தானில் 415 பெரும் பணக்காரப் பெண்கள் உள்ளனராம். வங்கதேசத்தில் 90 பேரும், இலங்கையில் 75 பேரும் உள்ளனர்.

ஜப்பான் முதலிடம்

ஜப்பான் முதலிடம்

ஜப்பானில்தான் உலகிலேயே அதிக அளவிலான பெரும் கோடீஸ்வரப் பெண்கள் உள்ளனர். அங்கு 14,270 பேர் உள்ளனர். சீனாவுக்கு இதில் இரண்டாவது இடம் அங்கு 10,675 பேர் உள்ளனர்.

இந்தியாவிலேயே பெங்களூரில்தான் கோடீஸ்வரிகள் அதிகம்

இந்தியாவிலேயே பெங்களூரில்தான் கோடீஸ்வரிகள் அதிகம்

இந்தியாவைப் பொறுத்தமட்டில், பெங்களூரில்தான் பெரும் பணக்காரப் பெண்கள் அதிகம் உள்ளனராம். அதாவது இங்கு 750 கோடீஸ்வரப் பெண்கள் உள்ளனராம்.

சென்னைக்கு 2வது இடம்

சென்னைக்கு 2வது இடம்

சென்னை இதில் 2வது இடத்தைப் பெறுகிறது. இங்கு 385 கோடீஸ்வரப் பெண்கள் உள்ளனர். 2012ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 370 ஆக இருந்தது.

பாதிப் பணக்காரர்கள் டெல்லி, மும்பையில்தான்

பாதிப் பணக்காரர்கள் டெல்லி, மும்பையில்தான்

அதேசமயம், இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் பாதிப் பேர் டெல்லி மற்றும் மும்பையில்தான் வசிக்கின்றனர்.

மும்பையில் 2105

மும்பையில் 2105

மும்பையைப் பொறுத்தவரை 2015 பெரும் பணக்காரர்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆவர். டெல்லியில் 1980 பேர் வசிக்கின்றனர்.

10 நகரங்களில் 90 சதவீதம் பேர்

10 நகரங்களில் 90 சதவீதம் பேர்

அதேசமயம், இந்தியாவின் 90 சதவீத பெரும் பணக்காரப் பெண்கள் மொத்தமே 10 நகரங்களில்தான் வசிக்கின்றனர். அதாவது கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், புனே, குர்கான், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் ஆகும்.

English summary
For Indians, there is something to cheer for under the gloom of falling rupee. At 16%, India has the highest proportion of ultra high networth (UHNW) women in the world, according to the latest wealth report. The country has over 1,250 UHNW individuals - those with net assets worth $30 million or above- with a combined fortune of $95 billion. Despite India's modest 1.6% population growth, the country added more UHNW individuals (120) than any other BRICS nation in the past 12 months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X