Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது பாசிச பாஜக கிடையாது.. பாசமான பாஜக.. தூத்துக்குடியில் தமிழிசை கருத்து!

பாஜக கட்சி பாசிச பாஜக கிடையாது, அது பாசமான பாஜக என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: பாஜக கட்சி பாசிச பாஜக கிடையாது, பாசமான பாஜக என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த வருடம் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்லும் போது அதே விமானத்தில் வந்த சோபியா என்ற மாணவி தமிழிசையை பார்த்து பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

We arent a Fascist BJP, We are Friendly BJP says Tamilnadu BJP chief Tamilisai

இந்த நிலையில் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்ற கோஷம் இணையம் முழுக்க வைரலானது. தேசிய அளவில் டிரெண்ட் அடித்தது. அதன்பின் தற்போது அதே தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதற்கான அறிவிப்பு நேற்றுதான் வெளியானது. இதையடுத்து நேற்று இரவே தமிழிசை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார். அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில், தூத்துக்குடியில் நான் 25ம் தேதி எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவேன். அதே நாளில் என்னுடைய வேட்புமனுவையும் தாக்கல் செய்வேன். தூத்துக்குடி மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள்.

பாஜக இங்கு மிகவும் வலுவாக இருக்கிறது. விருப்பப்பட்டபடி நான் தூத்துக்குடியில் போட்டியிடுகிறேன். இது பாசிச பாஜக ஆட்சி அல்ல, பாசமான பாஜக. தூத்துக்குடி மக்களுக்கும் அது தெரியும். தேர்தல் முடிவின் போது அது தெரிய வரும்.

[தமிழ்நாடு எம்பிக்களின் செயல்பாடுகள்]

விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ கனிமொழிக்கு வாக்கு கேட்டது எனக்கு தெரியும். அவர் பெயரை வாய் தவறி கனிமொழி பெயரை கூறிவிட்டார். அவர் உடனே பெயரை மாற்றி கூறினார், என்று தமிழிசை தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+