Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | இரவச்சம் | இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் திருக்குறள்

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
1062 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்

உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
— மு. வரதராசன்

பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்
— கலைஞர்

பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.
— சாலமன் பாப்பையா

முயற்சி செய்து உயிர் வாழ்தல் என்றில்லாமல், இரந்தும் ஒருவன் உயிர் வாழ்தலை, இவ்வுலகைப் படைத்தவன் விதித்திருப்பானானால், அவனும் எங்கும் அலைந்து கெடுவானாக!
— புலியூர்க் கேசிகன்

கேட்டுப்பெற்றே உயிர் வாழவேண்டிய நிலை ஏற்படும் என்றால் சிதைந்து அழியட்டும் உலகை இயற்றியவன்.
— சிவயோகி சிவகுமார்

துப்புரவு இல்லாக்கால் இறந்துபடாதே பிறர்மாட்டு இரந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாறாகக் கற்பித்த முதல்வன் மிகக் கெடுவானாக வேண்டும். இஃது இரக்குமதனின் இறத்தல் அமையு மென்றது.
— மணக்குடவர்

உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர் வாழ்தலையன்றி, இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக - அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அலமந்து கெடுவானாக. (மக்களுயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தால் கருவொடுங் கலந்தவன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய் தொழிலாகக் கற்பித்தானாயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.).
— பரிமேலழகர்

English Couplet:

If he that shaped the world desires that men should begging go,
Through life's long course, let him a wanderer be and perish so.

Couplet Explanation:

If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.

Transliteration (Tamil to English):

irandhum uyirvaazhdhal vaeNdin parandhu
keduka ulagiyatri yaan

மொத்தம் 133 அதிகாரங்கள்
1062 of 1330

மேலும் இரவச்சம் குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+