For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபி ஆட்சேர்ப்பு 2020: செக்யூரிட்டி ஆபிசர், ஆராய்ச்சி உதவியாளர் வேலை.. ஒரு லட்சம் வரை சம்பளம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஐபி ஆட்சேர்ப்பு 2020: உள்துறை அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்பு அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் பிற பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என புலானய்வு அமைப்பு (ஐபி) அழைப்பு விடுத்துள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் செப்டம்பர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

IB Recruitment 2020: how to apply 292 Vacancies for Security Officer, Research Assistant and Other Posts

ஐபி ஆட்சேர்ப்பு 2020 மொத்த காலியிட விவரங்கள்: 292

  • துணை இயக்குநர் / தொழில்நுட்பம் -2
  • மூத்த ஆராய்ச்சி அதிகாரி - 2
  • நூலகம் மற்றும் தகவல் அலுவலர் - 1
  • பாதுகாப்பு அதிகாரி (தொழில்நுட்பம்) - 6
  • துணை மத்திய புலனாய்வு அதிகாரி / தொழில்நுட்பம் - 10
  • உதவி மத்திய புலனாய்வு அதிகாரி- I / நிர்வாகி- 54
  • உதவி மத்திய புலனாய்வு அதிகாரி- II / நிர்வாகி- 55
  • உதவி பாதுகாப்பு அதிகாரி (தொழில்நுட்ப) - 12
  • உதவி பாதுகாப்பு அதிகாரி (பொது) - 10
  • தனிப்பட்ட உதவியாளர்- 10
  • ஆராய்ச்சி உதவியாளர்- 1
  • கணக்காளர்- 24
  • பெண் பணியாளர்கள் செவிலியர்- 1
  • கவனிப்பாளர் - 4
  • ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர்-ஐ / எக்ஸிகியூட்டிவ்- 26
  • ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர்- I (மோட்டார் போக்குவரத்து) - 12
  • ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர்-கிரேடு -2 (மோட்டார் போக்குவரத்து) - 12
  • பாதுகாப்பு உதவியாளர் (மோட்டார் போக்குவரத்து) - 15
  • ஹல்வாய் கம் குக் - 11
  • மல்டி · பணி ஊழியர்கள் (கன்மேன்) - 24

பணி இடம்: டெல்லி

கல்வி தகுதி விவரங்கள்:

துணை இயக்குநர் / தொழில்நுட்ப பணி - பொறியியல் இளங்கலை பட்டம் [பி.இ அல்லது பி.டெக் அல்லது பி.எஸ்சி (இன்ஜினியரிங்] அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 12 வருட அனுபவம் அவசியம்

நூலகம் மற்றும் தகவல் அலுவலர் - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியல் அல்லது தகவல் அறிவியல் அல்லது ஆவண அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது அல்லது நிறுவன நூலகத்தில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

மூத்த ஆராய்ச்சி அதிகாரி - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் / புள்ளிவிவரம் / வணிக நிர்வாகம் / மேலாண்மை அல்லது வணிகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 வருட அனுபவம் பெற்றிருகக வேண்டும்..

உதவி பாதுகாப்பு அதிகாரி (பொது) - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் இளங்கலை பட்டம் அத்துடன் 2 வருட அனுபவம இருக்க வேண்டும்.

உதவி பாதுகாப்பு அதிகாரி (தொழில்நுட்பம்) - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனத்தில் இருந்து மின் / மின்னணுவியல் / தகவல் தொடர்பு பொறியியல் அல்லது இயற்பியல் அல்லது வேதியியலில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும். அத்துடன் 2 வருட அனுபவம் வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி

ஆர்வமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை இணை துணை இயக்குநர் / ஜி, புலனாய்வுப் பணியகம், உள்துறை அமைச்சகம், 35 எஸ்.பி. மார்க், பாபு சாம், புது டெல்லி -21, ஆகஸ்ட் 19, 2020 அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்கலாம். தகுதி, அனுபவம், வயது வரம்பு போன்றவை குறித்த முழு விவரங்களை விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்துக் கொள்ளுங்கள்.

English summary
how to apply 292 Vacancies for Security Officer, Research Assistant and Other Posts in Intelligence Bureau department
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X