IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி முடித்தோருக்கு HCL-யில் வேலை.. மார்ச் 16ல் இண்டர்வியூ
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான இண்டர்வியூ மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
இப்போது பலருக்கும் ஐடி துறையில் கால்பதித்து பணியாற்ற வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளது. இதற்காக பிரத்யேகமாக படிப்புகளை முடித்து பலரும் ஐடி துறை வேலைக்கு முயற்சி செய்து வருகின்றனர்.

நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
என்ன வேலை?
அந்த வகையில் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் Semi Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன்படி தேர்வாகும் நபர்கள் Process Associate - Semi Voice-யில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதுபற்றி இங்கு பார்க்கலாம்.
என்னென்ன தகுதி வேண்டும்?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஆர்ட்ஸ் அல்லது சயின்ஸ் பிரிவில் ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல், இ-மெயில் மற்றும் சாட் சப்போர்ட் தெரிந்திருக்க வேண்டும். மேலும், பிஇ, பிடெக், எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவம் வேண்டாம்
இது Freshers-க்கான பணியாகும். இதனால் அனுபவம் இல்லாதவர்களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இருப்பினும் அவர்களுக்கு மேற்கூறிய திறமை இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
மார்ச் 16ல் இண்டர்வியூ
இந்த பணிக்கான இண்டர்வியூ மார்ச் 16 (நாளை மறுநாள்) மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. அன்றைய தினம் இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் HCL Tech, Tower 4 Elcot Sez, Sholinganallur, Chennai - 600 119 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications