திரிபுராவில் அம்மா உணவகம் பாணியில் வாக்குறுதி தந்த பாஜக! மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ5க்கு சாப்பாடு!
திரிபுராவில் ரூ5க்கு சாப்பாடு வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
அகர்தலா: திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ5க்கு சாப்பாடு வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
திரிபுரா சட்டசபைக்கு வரும் 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுராவில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. தற்போது திரிபுராவில் பாஜக ஆட்சியில் உள்ளது.

திரிபுராவில் பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளும் காங்கிரஸும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. பாஜக, இடதுசாரிகள்-காங்கிரஸ் தவிர்த்து அகன்ற திரிபுரா பழங்குடி மக்களுக்கான தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தும் திப்ரா மோதா கட்சியும் களத்தில் இருக்கிறது. பொதுவாக பாஜக- இடதுசாரிகள்,காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் திப்ரா மோதா கட்சி, தீர்மானிக்கும் கட்சியாக இருக்கும் என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.
திரிபுராவில் மொத்தம் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திரிபுரா வேட்பாளர்களில் 45 பேர் கோடீஸ்வரர்கள். மாநில முதல்வர் மாணிக் சஹாவின் சொத்து மதிப்பு ரூ13.90 கோடி. ஆனால் துணை முதல்வர் ஜிஷ்ணு தேவ் சர்மாவின் சொத்து மதிப்போ ரூ15.58 கோடியாம்.
இந்த பின்னணியில் திரிபுரா மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிக்கையை இன்று பாஜக வெளியிட்டது. தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் வாக்குறுதிகளை அளிப்பதை பாஜக பொதுவாக விமர்சிக்கிறது. ஆனால் திரிபுரா தேர்தலுக்காக பாஜக வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளது.
திரிபுராவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனுகுல் சந்திரா திட்டத்தின் கீழ் ரூ5க்கு உணவு வழங்கப்படும்; பெண் குழந்தைகளுக்கு ரூ50,000 பத்திரங்கள் வழங்கப்படும்; பழங்குடிகளின் பகுதிகளுக்கு கூடுதல் தன்னாட்சி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது பாஜக. ரப்பர், மூங்கில் ஆகியவற்றை அடிப்படையாக கோண்ட தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்கிறது பாஜக. விவசாயிகளுக்கு ரூ6,000 வழங்கும் நிதி திட்டத்தில் மாநில அரசு சார்பாக கூடுதலாக ரூ2,000 வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளது பாஜக.
பாஜக ஆட்சிக் காலத்தில் அரசியல் கலாசராமே அடியோ மாற்றபட்டுள்ளது எனவும் பாஜக தெரிவித்துள்ளது. மேலும் திரிபுராவில் 13 லட்சம் ' ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் கார்டுகள் இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரூ107 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.
2018-ம் ஆண்டு ச்ட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியை அப்படியே தன்னுள் கரைத்துக் கொண்டது பாஜக. மேலும் போட்டியிட்ட 51 தொகுதிகளில் 36-ல் பாஜக வென்றது. பெரும்பாலான பாஜக எம்.எல்.ஏக்கள், முந்தைய காங்கிரஸ் எம்.எல்.ஏக்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம்












Click it and Unblock the Notifications