To Start receiving timely alerts please follow the below steps:
- Click on the Menu icon of the browser, it opens up a list of options.
- Click on the “Options ”, it opens up the settings page,
- Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
- Scroll down the page to the “Permission” section .
- Here click on the “Settings” tab of the Notification option.
- A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
- Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.
ஐயப்பா டில்லதே ஒற்று
மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.
— மு. வரதராசன்
மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும்
— கலைஞர்
ரகசியமாக நடந்த செயல்களையும் அவற்றைச் செய்தவர் வாயாலேயே கேட்டு அறியும் ஆற்றல் படைத்தவராய், கேட்டவற்றுள் எத்தகைய சந்தேகமும் இல்லாதவராய் இருப்பவரே ஒற்றர்.
— சாலமன் பாப்பையா
மறைவான பேச்சுக்களையும் கேட்டு அறியக்கூடிய திறமை உள்ளவனாகி, தான் அறிந்தவற்றில் எவ்விதச் சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன்
— புலியூர்க் கேசிகன்
அறியமுடியாமல் மறைந்தவற்றை கேட்டு அறிந்து அப்படி அறிந்ததில் ஐயப்பாடு இல்லாமல் செயல்படுவதே ஒற்று.
— சிவயோகி சிவகுமார்
பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி, அறிந்தவற்றைத் தீர அறியவல்லவனே ஒற்றனாவான். இவை மூன்றும் ஒற்றிலக்கணங்கூறின.
— மணக்குடவர்
மறைந்தவை கேட்க வற்று ஆகி - ஒற்றப்பட்டார் மறையச் செய்த செயல்களை உள்ளாயினாரால் கேட்க வல்லனாய்; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று - கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது துணியவல்லவனே ஒற்றனாவான். (மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர் அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும் வகை, அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே விளைத்து,அத்தொடர்பால் கேட்குங்காலும் உறாதார்போன்று நின்று கேட்கவேண்டுதலின், 'கேட்க வற்று ஆகி' என்றும் கேட்டறிந்தவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசனால் அவற்றிற்கு ஏற்ற வினை செய்யலாகாமையின் 'ஐயப்பாடு இல்லதே' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் ஒற்றினது இலக்கணம் கூறப்பட்டது.).
— பரிமேலழகர்
A spy must search each hidden matter out,
And full report must render, free from doubt.
A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.
maRaindhavai kaetkavaR Raaki aRindhavai
aiyappaatu illadhae otru