டெங்கு கொசு மேல் சாதி,சாதா கொசு கீழ் சாதினு ஒரு புரளிய கிளப்பிவிட்டா அதுகளே வெட்டிட்டு செத்துரும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டெங்கு கொசுக்களை ஒழிக்க நெட்டிசன்கள் கலக்கல் ஐடியாக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் அதிதீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் கடந்த 6 நாட்களில் மட்டும் 62 பேர் பலியாகியுள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

இந்நிலையில் டெங்கு கொசுவை எப்படி ஒழிப்பது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலான கருத்துக்களை கூறி வருகின்றனர். அவற்றில் சில..

டெங்கு கொசு அல்ல

தமிழகத்தில், அழிக்க வேண்டியது டெங்கு கொசு அல்ல; தி.மு.க., தான். செல்லூர் ராஜூ..! என கலாய்க்கிறது இந்த டிவிட்

கொசு கடிக்குறாப்லேயே ஃபீல்

ஒரு கொசு கடிச்சது டெங்கு கொசு வேற காலைலதான் கடிக்கும் இப்ப அந்த கொசுவ கொன்றாச்சு ஆனாலும் கொசு கடிக்குறாப்லேயே ஃபீல் டெங்கு பீதி வேலை செய்யுது.. என்கிறார் இந்த நெட்டிசன்

குட்டையை பாக்கலயா

கழுவி தண்ணி புடிச்ச குடத்தை நாலு முறை பாக்குறியே டெங்கு ஆபீசர்.. வரும்போது தேங்கி கொசு பறந்துட்டு இருக்குற குட்டையை பாக்கலயா.. என கேட்கிறார் இந்த வலைஞர்

குடும்பமே நடுங்கும்

'பாம்பென்றால் படையும் நடுங்கும்னு'நாம படிச்ச பழமொழி மாதிரியே, இனி வரும் காலம் 'கொசு என்றால் குடும்பமே நடுங்கும்னு' புதுமொழி படிக்கும்#டெங்கு.. என்கிறது இந்த நெட்டிசன்

அதுகளே வெட்டிட்டு செத்துரும்

டெங்கு கொசு மேல் சாதி சாதா கொசு கீழ் சாதினு ஒரு புரளிய கிளப்பி விட்டா அதுகளே வெட்டிட்டு செத்துரும்.. கொசுவ கொள்ளுற வேலை ஈசியா முடிஞ்சிறும்..! என்கிறது இந்த டிவிட்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dengue fever causes in Tamilnadu severely. Dengue death toll increasing daily. Netizens gives fun ideas to controle Dengue mosquitoes production.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற