• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mullaperiyar Dam Water Level Today | முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் இன்று

|

Newest First Oldest First
12:20 PM, 21 Sep
இன்றைய நிலவரப்படி பெரியாறு அணை நீர்மட்டம் 126.75 அடியாகவும், அணைக்குள் விநாடிக்கு 3,777 கன அடி தண்ணீர் வந்தது. ஒரே நாளில் 2378 கன அடி அதிகரித்து வந்தது, மேலும் நீர்மட்டம் 1 அடி உயர்ந்தது.
3:40 PM, 8 Aug
நேற்றைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 130 அடியாக உள்ளது. அணைக்கு 17, 746 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து தமிழகத்துக்கு 1, 650 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
1:46 PM, 1 Aug
கடந்த 3 மாதங்களாக 112 அடியில் இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி 113 அடியாக உயர்ந்தது அதன்பிறகு ஜூலை 22ஆம் தேதி மேலும் ஒரு அடி உயர்ந்து, 114 அடியாக காணப்பட்டது. தற்போது நேற்று காலை 115.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 525 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1,745 மில்லி கன அடியாக உள்ளது.
2:35 PM, 21 May
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் - [21-05-2020]
நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 113.10 அடியாக உள்ளது. நீர்வரத்து 28 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 125 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
10:06 AM, 13 Feb
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் - [13-02-2020]
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீா் வெளியேற்றம் 60 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதால் மின்சார உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 116.05 அடி இருக்கிறது.
10:18 AM, 23 Oct
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் [23-10-2019]
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 10.57 அடி. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 3.83 அடி உள்ளது.
9:53 AM, 5 Sep
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் [05-09-2019]
நேற்று காலை நீர் வரத்து 1848 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் மட்டமும் 128.15 அடியாக உயர்ந்துள்ளது. பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது. இதனால் அணையின் நீர் மட்டம் 54.04 அடியாக உள்ளது. அணைக்கு 1058 கன அடி நீர் வருகிறது.
3:53 PM, 27 Aug
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் [27-08-2019]
கேரளாவில் தற்போது மழை நின்று விட்டதால் நேற்று காலை 169 கனஅடி நீரே வந்தது. அணையின் நீர்மட்டமும் 128.55 அடியாக குறைந்துள்ளது.
2:12 PM, 19 Aug
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் [19-08-2019]
தாமதமாக தொடங்கிய தென்மேற்கு பருவ மழை கேரளாவிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 130.70 அடியாக உள்ளது. அணைக்கு 1150 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1700 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4861 மில்லியன் கன அடியாக உள்ளது.
12:00 PM, 12 Aug
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் [12-08-2019]
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு விநாடிக்கு 5,661 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் 130 அடியை நெருங்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி நிலவரப்படி நீர்மட்டம் 129 அடியாக இருந்தது.
10:37 AM, 25 Jul
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் [25-07-2019]
கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. ஜூலை 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் சராசரியாக 50 மிமீ மழை பெய்துள்ளது. ஆனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 900 கனஅடியை எட்டவில்லை. அணை நீர்மட்டம் 114 அடிக்கும் குறைவாகவே உயர்ந்துள்ளது.
1:21 PM, 19 Jun
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் - இன்றைய நிலவரம்: [19-06-2019]
முல்லைப் பெரியாறு அணையின் நீா் மட்டம் 112.15 அடியாக உள்ளது. அணையின் நீா் இருப்பு 1255மி.க.அடியாக உள்ளது. அணையின் நீர் வரத்து 23 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து 100கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.பெரியாறு அணைப்பகுதியில் 14.8 மி.மீ அளவு மழைப்பெய்துள்ளது.
11:49 AM, 17 Jun
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் - இன்றைய நிலவரம்: [12-06-2019]
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் - இன்றைய நிலவரம்: [12-06-2019]
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!! முல்லைப் பெரியாறு அணயின் நீா் மட்டம் 112.20 அடியாக உள்ளது. அணையின் நீா் இருப்பு 1263மி.க. அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 243 கனஅடி இருக்கிறது. அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 100கனஅடியாக உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை வரலாறு

முல்லைப் பெரியாறு அணைக்கான கட்டுமானப் பணி 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் ஆங்கிலேய இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. முல்லைப்பெரியாறு அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது?

முல்லைப் பெரியாறு அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. அணை கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அணை தமிழகத்திற்கு சொந்தமானது. தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையைப் பராமரித்து வருகிறது.

எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது முல்லைப் பெரியாறு அணை?

முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கேரளாவில் பாய்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது.

முல்லைப் பெரியாறு முழு கொள்ளளவு விவரம்

முல்லைப்பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு 152 அடியாகும். ஆனால் முழுக்கொள்ளளவும் நீர் தேக்கினால் ஆபத்து என்று கேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. இதுதொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 15.5 டி.எம்.சி ஆகும். அணையின் மொத்த உயரம் 155 அடி ஆகும்.

முல்லைப் பெரியாறு வானிலை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் தேக்கடி வன சரணாலயம் உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதால் எப்போதும் குளிர்ச்சியான காற்றும் இதமான சூழலும் நிலவி வருகிறது.

முல்லைப் பெரியாறு - அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவி, கும்பக்கரை அருவி, சுருளி அருவி, மங்களதேவி ஸ்ரீகண்ணகி கோவில், வைகை அணை, பென்னிகுவிக் மணிமண்டபம் ஆகியவை சிறந்த சுற்றுலாத்தலங்கள் ஆகும். கேரளாவில் அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, தேக்கடி, இரவிகுளம் தேசியப் பூங்கா, இராமக்கல் மெட்டு பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இங்குள்ளன. தேக்கடியை ஒட்டி குமுளி பகுதியும் காண தகுந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு மலையில் இருந்து பெறப்படும் வாசனை பொருட்கள் அதிகளவு கிடைக்கும் என கூறப்படுகிறது.

முல்லைப் பெரியாறு - பார்வையிடும் நேரம்

முல்லைப் பெரியாறு அணையை அனைத்து நாட்களிலும் காலை 6 அணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம். ஆனால் காலை 7 மணி முதல் மாலை 3 வரை அணைப்பகுதியை பார்வையிடுவதுதான் சிறந்தது என கூறப்படுகிறது. இங்கு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டினருக்கு 300 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Mullaperiyar Dam Water Level Today

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Mullaperiyar Dam Water Level Today: Check complete details on Mullaperiyar Dam Water Level, History, Total Capacity, Weather, Visit Timings, Nearby Places to Visit and much more interesting facts on Mullaperiyar Dam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X