For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக உள்ள மாவட்ட கண்காணிப்பாளர்கள் அதிகாரத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஐஜி அந்தஸ்த்தில் உள்ள அதிகாரியும் ஒருவர்.

13 IPS officers transferred in Tamil Nadu

13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கான உள்துறைச் செயலாளர் உத்தரவும் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரமும்:

1. மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஆக பதவி வகிக்கும் சுகுணா சிங் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. சென்னை டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜியாக பதவி வகிக்கும் நிஷா மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. நாமக்கல் மாவட்ட எஸ்பி ஆக பதவி வகிக்கும் சரோஜ்குமார் தாக்கூர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி ஆக இடமாற்றம் நியமிக்கப்பட்டுள்ளார்.

4. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி ஆக பதவி வகிக்கும் சாய்சரண் தேஜாஸ்வி நாமக்கல் மாவட்ட எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக பதவி வகிக்கும் பத்ரிநாராயணன் கோயம்புத்தூர் மாவட்ட எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. கோயம்புத்தூர் மாவட்ட எஸ்பி ஆக பதவி வகிக்கும் செல்வநாகரத்தினம் சென்னை போலீஸ் அகாடமி துணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. சென்னை, தி.நகர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் இடமாற்றம் செய்யப்பட்டு கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அரவிந்த் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலக நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர்-1 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. சென்னை போலீஸ் அகாடமி துணை இயக்குனர் ஜெயலட்சுமி இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை நவீன காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

13 IPS officers transferred in Tamil Nadu

10. சென்னை விரிவாக்க பிரிவு ஏஐஜி-ஆக பதவி வகிக்கும் அபினவ் குமார் இடமாற்றம் செய்யப்பட்டு திருப்பூர் நகர சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. சென்னை காவல் ஆணையர் அலுவலக நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர்-1 விமலா இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி ஆக பதவி வகிக்கும் பண்டி கங்காதர் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை டிஜிபி அலுவலகம் நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜி-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. சென்னை ரயில்வே ஐஜி-ஆக பதவி வகிக்கும் கல்பனா நாயக் இடமாற்றம் செய்யப்பட்டு சென்னை மின் வாரிய பிரிவு (டான்ஜெட்கோ) விஜிலன்ஸ் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி டிஜிபி நிலையிலிருந்து ஐஜி அந்தஸ்த்துக்கு நிலை இறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உள்துறைச் செயலர் எஸ்.கே .பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Home Secretary orders transfer of 13 IPS officers in Tamil Nadu, தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X