தமிழகத்தில் இன்று
விம்பிள்டனில் விளையாட விரும்பும் இந்தியச் சிறுவன்
லண்டன்:
![]() |
வீனஸ் வில்லியம்ஸ், டேவன்போர்ட்டுடன் ராஜு. |
விம்பிள்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒற்றையர் பிரிவு டென்னிஸ் இறுதிப்போட்டியில் டாஸ் சுண்டி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளான் ராஜு.
கல்கத்தாவைச் சேர்ந்த ராஜு, அங்குள்ள பியூச்சர் ஹோப் என்ற ஆதரவற்றோர்இல்லத்தில் டென்னிஸ் பயிற்சி பெற்று வருகிறான். டிம் கிரன்டேஜ் என்பவர் இதைநடத்தி வருகிறார். கல்கத்தாவைச் சேர்ந்த வீடற்ற சிறுவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டதுஇந்த இல்லம்.
இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் போட்டியைப் பார்க்க பியூச்சர் ஹோப் சார்பில் ராஜுமற்றும் அபு தாஸ் ஆகிய இருவரையும் கென்ட் கோமாட்டி அழைத்திருந்தார். அதன்பேரில் இருவரும் விம்பிள்டன் சென்றிருந்தனர். மகளிர் பிரிவு போட்டிகளை அவர்கள்பார்த்தனர்.
இறுதிப் போட்டியின்போது டாஸ் சுண்டுவதற்காக, விசேஷமாக அழைக்கப்பட்டிருந்தபல்வேறு ஆதரவற்றோர் இல்லச் சிறுவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க கென்ட்கோமாட்டி கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர் கிரன்டேஜிடம் அந்தப் பொறுப்பைக்கொடுத்தார். கிரன்டேஜ், ராஜுவைத் தேர்ந்தெடுத்தார்.
தனது விம்பிள்டன் பயணம் குறித்து ராஜு கூறுகையில், மிகவும் சந்தோஷமாகஇருக்கிறது. லண்டனிலுள்ள பல்வேறு பள்ளிகளை நான் சுற்றிப் பார்க்கப் போகிறேன்.என்னுடன் அபு தாஸும் வருகிறான்.
லண்டனில் எனக்கு நிறைய பிரன்ட்ஸ் கிடைத்துள்ளார்கள். கென்ட் கோமாட்டியும்எனக்கு பிரன்ட் ஆகி விட்டார்.
கல்கத்தாவிலுள்ள எனது நண்பர்களும் போட்டியைப் பார்த்து விட்டு ஈ மெயில்அனுப்பினார்கள் என்றான் ராஜு.
1993-ம் ஆண்டு ஹெளரா ரயில் நிலைய பிளாட்பார்மில் ராஜுவை, கிரன்டேஜ்கண்டுபிடித்து மீட்டார். அதன் பிறகு அவன் பியூச்சர் ஹோப்பில் ஒரு அங்கமாகமாறினான்.
டாஸ் சுண்டியதால் பெருமித மிதப்பில் இருக்கும் ராஜுவின் இப்போதைய இலக்குவிம்பிள்டனுக்கு மீண்டும் வர வேண்டும் - டென்னிஸ் ஆட்டக்காரராக என்பதே.
ஆல் தி பெஸ்ட் ராஜு!
ஐ.ஏ.என்.எஸ்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!