For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடைபிடிக்க வேண்டிய மத நெறிகள்

By Staff
Google Oneindia Tamil News

Various Stages Of Lunar Eclipse(குறிப்பு: கூறப்பட்டுள்ள நேரங்கள் அனைத்தும் இந்திய நேரப்படியாகும்)

சந்திர கிரகணம் வியாழக்கிழமை இரவு 7.04 மணிக்கு பிடிக்கிறது. ஆனால், மாலை 5.04 மணிக்கே சந்திரன் ஒளி இழக்க ஆரம்பித்துவிடும்.

சந்திர கிரகணத்தின் போது பல நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என நமது முன்னோர்கள் நெறிமுறைகள் வகுத்துள்ளனர்.

சந்திரன் ராகுவால் பிடிக்கப்படுவதாக புராண கதைகள் கூறுகின்றன. இதனால் ராகுவால் பிடிக்கப்பட்டு சந்திரன் கஷ்டப்படும் போது நாம் எந்தவிதமான உணவும் உட்கொள்ளக்கூடாது என கூறியுள்ளனர்.

Various Stages Of Lunar Eclipseசூரியனும். சந்திரனும் நலம் பயக்கும் கிரகங்கள். அவர்கள் ராகுவால் பிடிக்கப்பட்டு துன்பப்படும் போது நாம் உணவு உட்கொண்டு உல்லாசமாகஇருக்கக்கூடாது.

நமக்கு ஒளி அளிக்கும் இவர்கள் ஒளி இழந்து இருக்கும் போது நாம் உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும். கிரகணம் பிடித்திருக்கும்நேரத்தில், இறந்து போன நமது முன்னோர்களுக்கு (பித்ருகளுக்கு) சாந்தி செய்வது நல்லது என கூறியுள்ளனர்.

இதன்படி வியாழக்கிழமை சந்திரகிரகணம் நிகழ இருப்பதால் காலை 9 மணிக்கு மேல் உணவு உட்கொள்ளக் கூடாது. கிரகணம் விட்டபின் இரவு 9.45மணிக்கு பின்னரோ அல்லது மோட்சம் அடையும் நேரமான இரவு 11.09 மணிக்கு பின்போ குளித்துவிட்டு, கடவுளை பிரார்த்தித்துவிட்டு உணவுஉட்கொள்ள வேண்டும்.

இவை நலம் பயக்கும் என்று கூறப்பட்டிருப்பதால், இவற்றை பின்பற்ற முடியாவிட்டால் அது தீமை பயக்கும் என கூறப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X