அந்த ஒரு நிமிடம் ...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஒரு நிமிடமே என்றாலும் கூட குஜராத் பூகம்பம் ஏற்படுத்திய பாதிப்பை மனதளவில் சென்னைவாசிகள் செவ்வாய்க்கிழமை உணர்ந்து விட்டனர்.

  • மயிலாப்பூர் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர்கள் நில அதிர்ச்சி ஏற்பட்டபோது தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து ஆப்கானிஸ்தான் தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சியோ என்று பயந்த அவர்கள் சைக்கிளை எடுக்காமல் அப்படியே பீதியில் உறைந்து நின்று விட்டார்கள்.
  • தரமணி பகுதியில் அண்ணா நகர் என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு பல தெருக்களில் நில அதிர்ச்சியை மக்கள் உணர்ந்தனர். ஆனால் ஒரே ஒரு தெருவில் மட்டும் இதுதொடர்பாக எந்த சலனத்தையும் மக்கள் உணரவில்லை. அதைச் சுற்றியுள்ள தெருக்கள் அனைத்தம் நடுங்க இந்தத் தெரு மட்டும் அமைதியாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
  • வேளச்சேரியில் உள்ள பாரதி நகர், உதயம், பேபி நகர், டான்சி நகர், தண்டீஸ்வரம் ஆகிய பகுதிகளில் நிலஅதிர்ச்சியின் பாதிப்பு நன்றாக தெரிந்தது.கட்டில்கள், பீரோக்கள், டிவிக்கள் என அனைத்துப் பொருட்களும் ஒரு ஆட்டம் ஆடி நின்றன.
  • சென்னை நகரிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நில அதிர்ச்சி கொடுத்த பீதியால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள், நர்ஸ்கள் என அனைவரும் வெளியில் வந்து விட்டனர். வெளியில் வைத்தே சிகிச்சை தரப்பட்டது. நோயாளிகளும் இரவு ழுவதும் உள்ளே செல்லாமல் வெளியிலேயே படுத்திருந்தனர்.
  • பரபரப்பான அண்ணாசாலையில் நில அதிர்ச்சி பெரும் பீதியைக் கொடுத்தது. சாலையில் இயங்கிக் கொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் நில அதிர்ச்சியை உணர்ந்ததும் நிறுத்தப்பட்டு விட்டன. அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் சாலைக்கு வந்து விட்டனர். பல அடுக்கு மாடி அலுவலகங்கள் அனைத்தும் கண நேரத்தில் வெறிசோடி விட்டன. ஆயிரம் விளக்குப்பகுதியில் ஒரு அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விட்டதாக வந்த தகவலையடுத்து அனைத்து கட்டடிடங்களும் வெறிச்சோடி விட்டன.
  • அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வந்தோர், நில அதிர்ச்சியையடுத்து வீடுகளுக்குள் உறங்காமல் குடியிருப்புக்கு வெளியே கார் ஷெட்கள் போன்றவற்றில் படுத்துத் தூங்கினர். காலையில்தான் பல் விளக்குவதற்காக வீட்டுக்குள் சென்றனர். மொத்தத்தில் ஒரு நிமிடத்தில் சென்னை மக்களை பீதிக்குள்ளாக்கி விட்டது நில அதிர்ச்சி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற