குருப் பெயர்ச்சி
கிரஹங்களிலேயே ஸ்ரீ குருகவான் சுபக் கிரஹம் ஆவார். பொன் கிரஹம். நல்லதையே செய்பவர்.
ஆண்டுதோறும் நடக்கும் குருப்பெயர்ச்சி இந்த ஆண்டு 04.07.2002ம் தேதி, வியாழக்கிழமை. இரவு 10.22மணிக்கு மிதுன ராசியிலிருந்து இடம் பெயர்நது கடக ராசிக்கு பிரவேசிக்கிறார். இங்கு 25.08.2003 தேதி,திங்கள்கிழமை வரை இருப்பார்.
வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜூன் 30ம் தேதி குருப் பெயர்ச்சி நடக்கப் போவதாக கூறுகிறார்கள். கோளாரசஞ்சாரப்படி அடுத்த மாதம் 4ம் தேதி தான் குருப் பெயர்ச்சி.
குருவின் ஸ்தலம்: ஆலங்குடி. தட்சிணாமூர்த்தியாக இங்கு எழுந்தருளியிருக்கிறார் குரு பகவான். இந்தத் தலம்தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலத்தில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இது ஒரு பரிகாரத் தலமாகும். இங்கு பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்கள் இக்கோவிலை 24 முறை சுற்றி வரவேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு நெய் தீபம் ஏற்ற வேண்டும். பூஜை செய்யும் காலம் மாலை 4 மணிமுதல் மாலை 6 மணி வரை. குருபகவானின் மூல மந்திரம் 24 வார்த்தைகளைக் கொண்டது. இதனால் இந்தஆலயத்தில் எல்லாமே 24 முறைகள் செய்யப்படுகின்றன.
தனுர் ராசியம், மீன ராசியும் இவரது ராசிகள். பூராடம் இவரது நட்சத்திரம். சிலர் அவிட்டம் என்றும் கூறுவதுண்டு.
குருவுக்கு வெண்மை நிறைந்த பசுவின் பால் மிகவும் பிடித்தமானது. பால், பால் கர்க்கரை கலந்த இனிப்புப்பொங்கல், தயிர் சாதம், வெள்ளை கொண்டைக் கடலை ஆகியவை இவருக்கு உரிய நிவேதனங்கள்.
பசும்பொன் வண்ணம் கொண்டவர். பணத்துக்கு நாயகனாக விளங்குபவர் குரு. மேஷம், சிம்மம், கன்னி,விருச்சிகம் ஆகியவை இவரது நட்பு ராசிகள்.
வழிபடும் முறை:
குருவை பெயர்ச்சிக்கு முன்னதாகவே வழிபட்டுவிட வேண்டும். குருப் பெயர்ச்சி ஹோமங்களில் பங்கேற்பது நலம்தரும்.
குரு பாமாலை:
குருவை வழிபட இந்தப் பாமாலையை மனம் ஒன்றி படியுங்கள். அவரது பூரண அருள் கிடைக்கும்.
பாமாலை:
வானவர் கரசே வளம் தரும் குருவே
காணா இன்பம் காணவைப் பவனே
பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்
உந்தனுக் களித்தால் உள்ளம் மகிழ்வாய்
சுண்டல் தான்யம் சொர்ணாபிஷேகமும்
கொண்டுனை வழிபட குறைகள் தீர்ப்பாய்
நாளைய பொழுதை நற்பொழு தாக்குவாய்
இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்
உள்ளத்தில் அமைதி உறைந்திடச் செய்வாய்
தலைமைப் பதவியும் தக்கதோர் புகழும்
நிலையாய்த் தந்தே நிம்மதி கொடுப்பாய்
தவப்பயனால் உன் தாளினைப் பணிந்தேன்
சிவப்பிரியா நீ திருவருள் தருவாய்
ஒவ்வொரு ராசிக்கும் குரு பகவான் என்ன பலன்களைத் தரப் போகிறார்.. நாளை பார்ப்போம்.
![]() ![]() ![]() |
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!