நான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி

Subscribe to Oneindia Tamil


டெல்லி:

முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் கொய்து வருமாறு நான் கூறவில்லை என்று திமுகவினரின் கொந்தளிப்பை சந்தித்துள்ள முன்னாள் பாஜக எம்.பியும், வி.எச்.பி. மண்டல தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி கூறியுள்ளார்.

Ramvilas Vedantiஅயோத்தியில் வேதாந்தி நேற்று வெளியிட்ட பாத்வா அறிக்கையில், ராமரைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் கருணாநிதியின் தலை மற்றும் நாக்கைக் கொண்டு வருபவர்களுக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் பாஜக, இந்து முன்ணனி, வி.எச்.பி. அலுவலகங்களை அடித்து நொறுக்கினர்.

இந்த நிலையில், தான் கூறிய கருத்து பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் தவறாக வந்து விட்டது என்று வேதாந்தி பல்டி அடித்துதள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் பகவத் கீதையை மேற்கோள் காட்டி கூறியிருந்தேன். மற்றபடி யாருக்கு எதிராகவும் பாத்வா விதிக்கவில்லை.

எனது அறிக்கை தவறாக பிரசுரிக்க்கபப்ட்டு விட்டது. துறவிகள் ஒருபோதும் வன்முறையை நம்புவதில்லை என்றார் வேதாந்தி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற