For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணக்கார நகரங்கள்-முதலிடத்தில் ஐரோப்பிய நகரங்கள்

By Staff
Google Oneindia Tamil News

Luxembourg
டெல்லி: உலகின் மிகப் பணக்கார மற்றும் அதிக செலவான நகரங்கள் வரிசையி்ல் ஐரோப்பிய கண்டத்தைச் சேர்ந்த நகரங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் இந்தியாவுக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது.

உலகின் செலவு குறைந்த நகரங்கள் வரிசையில் டெல்லிக்கு 70வது இடமும், மும்பைக்கு 73வது இடமும் கிடைத்துள்ளது.

ஆசியாவின் பணக்கார நகரங்கள் வரிசையில் டெல்லிக்கு 41, மும்பைக்கு 43, சென்னைக்கு 44, பெங்களூருக்கு 45, ஹைதராபாத்துக்கு 46, புனேவுக்கு 47, கொல்கத்தாவுக்கு 49வது இடம் கிடைத்துள்ளது.

யுபிஎஸ் நடத்திய இந்த சர்வேயில் உலகில் உள்ள 73 நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

உலக நகரங்களிலேயே கோபன்ஹேகன், ஜூரிச், ஜெனீவா, நியூயார்க் ஆகிய நகரங்களில் பணியாற்றுபவர்கள்தான் பெருமளவில் சம்பளம் வாங்குகின்றனராம்.

இந்த சர்வேயில் இன்னொரு முக்கிய விஷயமும் தெரிய வந்துள்ளது. அது உலக நாடுகளில் பணியாற்றுவோர் வாங்கும் சம்பளமும், இந்தியாவில் வாங்கப்படும் சம்பளமும் குறித்தது.

நியூயார்க் அல்லது ஜூரிச்சில் பணியாற்றும் ஒருவர் ஒரு ஐபாட் நானோ வாங்குவதாக இருந்தால் 9 மணி நேரம் வேலை பார்த்தால் போதும்.

ஆனால் மும்பையைச் சேர்ந்த ஒருவர் இதை வாங்குவதாக இருந்தால் 177 மணி நேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளதாம்.

உலகின் பத்து பணக்கார நகரங்கள் குறித்த ஒரு பார்வை...

1. கோபன்ஹேகன்

உலகின் மிகப் பணக்கார நகரம். டென்மார்க்கின் பொருளாதார கேந்திரம்.

2008ம் ஆண்டு 50 எதிர்கால ஐரோப்பிய நகரங்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது இந்த நகரம்.

2. ஜூரிச்

உலகின 2வது பணக்கார நகரம். உலகின் தரமான வாழிட நகரங்களில் ஜூரிச்சுக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. சுவிட்சர்லாந்தின் பொருளாதார கேந்திரம்.

யுபிஎஸ், கிரெடிட் சுவிஸ், ஸ்விஸ் ரெ, ஜூரிச் பினான்ஷியல் சர்வீஸ் உள்ளிட்ட பல முக்கிய சுவிஸ் வங்கிகள் இந்த நகரில்தான் உள்ளன.

சம்பளம் கொடுப்பதில் ஜூரிச்தான் நம்பர் ஒன். உலகின் வேறு எந்த நகரத்தையும் விட ஜூரிச்சில்தான் அதிக அளவில் சம்பளம் தரப்படுகிறதாம்.

3. ஜெனீவா

உலகின் 3வது பணக்கார நாடு. தரமான வாழ்க்கைக்கான சூழல் நிலவுவதில் ஜெனீவாவுக்கு உலக அளவில் 3வது இடம் கிடைத்துள்ளது. உலகிலேயே மிகவும் சிறிய பெருநகர் என்ற பெருமையும் ஜெனீவாவுக்கு உண்டு.

4. நியூயார்க்

உலகின் மிகவும் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்றான நியூயார்க், பணக்கார நகரங்கள் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.

மான்ட்ரீல், டோரன்டோவை விட நியூயார்க், மியாமி, லாஸ் ஏஞ்சலெஸ், சிகாகோ நகரங்களில் கூடுதல் சம்பளம் தருகிறார்களாம்.

5. ஆஸ்லோ

நார்வே நாட்டின் வர்த்தகம், வங்கித் துறை, தொழில் மற்றும் கப்பல் துறையின் கேந்திரமாக விளங்குகிறது ஆஸ்லோ.

6. லாஸ் ஏஞ்சலெஸ்

அதிகம் சம்பளம் தரும் முதலாளிகள் நிறைந்த நகரம். ஹாலிவுட் இந்த நகரில்தான் உள்ளது. உலகின் பொழுதுபோக்கு தலைநகர் என்ற செல்லப் பெயரும் உண்டு.

7. மியூனிக்

ஜெர்மனியின் 3வது பெரிய நகரம் மியூனிக். ஐரோப்பாவின் பொருளாதார கேந்திரம். பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் தலைமையகம் இதுதான்.

வேலையில்லாத் திண்டாட்டம் இங்கு மிக மிக குறைவு.

8. லக்சம்பர்க்

அதிகம் சம்பளம் தரும் உலக நகரம்/நாடுகளில் லக்சம்பர்க்கும் ஒன்று. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனியை எல்லையாகக் கொண்ட 2,586 சதுர கி.மீ. பரப்பளவே கொண்ட மிகச் சிறிய நாடு தான் லக்சம்பர்க்.

9. பிராங்க்பர்ட்

ஜெர்மனியின் முக்கிய வர்த்தக மையம் பிராங்க்பர்ட். பல நூற்றாண்டுகளாகவே ஜெர்மனின் பொருளாதார மையமாக திகழ்கிறது பிராங்க்பர்ட். பல்வேறு பெரிய பெரிய வங்கிகள் இந்த நகரத்தைச் சேர்ந்தவைதான்.

10. டூப்ளின்

உலகின் 10வது பணக்கார நகராக உள்ளது டூப்ளின். அயர்லாந்து நாட்டின் தலைநகர். 2008ம் ஆண்டு டூப்ளின் நகரம், உலகின் ஐந்தாவது பணக்கார நகரமாக இருந்தது. தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X